அறிவியல் என்னும் வழிபாடு


http://www.thinnai.com/?module=displaystory&story_id=21011142&edition_id=20101114&format=html

கட்டுரை

அறிவியல் என்னும் வழிபாடு

சர் சி.வி.ராமன்

மொழிபெயர்ப்பு சத்யானந்தன்

(18.11.1950 அன்று ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நோபல் பரிசு பெற்ற அமரர் சர் சி.வி.ராமன் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

இந்தியயப் பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாய்ப்பு அற்பமான கவுரவம் அல்ல. அதுவும் இரண்டாவது முறையாக ஒரே பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவது வித்தியாசமான அனுபவம்.

வறுமை தரும் வலிகளை நான் அறிவேன். சரியான உடுப்புகள், புத்தகங்கள், குடையின்றி வெய்யிலில் பல மைல்கள் புழுதியில் நடப்பது என்றான போராட்டமான வாழ்க்கையைக் கடந்து வந்த என்னால் உங்களைப்போலப் பட்டதாரிகள் இன்னாளில் எதிர் கொள்ளும் இடர்களை உணர இயலும். ஒரு நாளா இரு நாளா? அறுபது வருட அனுபவம் அல்லவா? இந்த அறுபது வருடமும் மலர் தூவிய பாதையும் பாலும் தேனும் பாய்ந்த சூழலும் இருக்கவில்லை எனக்கு. வேறு என்ன செய்வது? வெற்றிக் கனியைப் பறிக்க இடர்ப்பாடுகளை எதிர் கொள்ளத் தான் வேண்டும். வலிமையும் அறிவும் மட்டும் வெற்றியை விளைப்பதில்லை. வெற்றிகளைத் தோல்விகளை அவதானிக்கும் பொழுது அது ஒரு சூதாட்டமோ என்னும் ஐய்யம் கூடச் சில சம்யம் தோன்றும். ஆனால் அது சூதாட்டம் அல்ல. மனப்பக்குவமும் பணியில் முழு ஈடுபாடும் உடையவர்கள் வெற்றி என்னும் இலக்கை அதிக தாமதம் இன்றி விரைவில் எட்டி விடுவார்கள். குறிப்பாகத் தாமதமும் தடைகளும் வரும் வேளைகளில் மனச்சோர்வும் தலை தூக்கும். அத்தகைய சோர்வைப் புறந்தள்ளி, “இது மாறும், நான் வெல்வேன்” என்னும் நன்னம்பிக்கை, ஏமாற்றம் அடையாத மன உறுதி இவையே வெற்றிக்கு துணை நிற்கும். இது அனுபவம் எனக்களித்த பாடம். இதுவே உங்களுக்கு என் பரிசு.

மிக உயர்ந்ததாய்க் கொண்டாடப்படுபவை யாவும் உயர்ந்தவை ஆகா. நோபல் பரிசு, “எஃப் ஆர் எஸ்” மற்றும் இவை போன்ற இன்ன பிறவும் நாவில் ஓர் அருசியை விட்டுச் சென்றன. வாழ்க்கையின் சர்வ சாதாரணமான விஷயங்களே எனக்கு உவப்பைத் தருகின்றன. தினமும் இரவு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. மாலை மூன்று மைல்கள் நடப்பதே அதற்குக் காரணம். நல்ல பகல் உணவை, இரவு உணவை ருசித்துச் சாப்பிடுகிறேன். நீல வானம் என்னை இன்றும் ஈர்க்கிறது. வயல்வெளிகளில் கம்பு அல்லது கேழ்விரகு மணத்தை ரசித்து அனுபவித்த்படி நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். “பாபுல்” பூக்களைப் பார்க்கும் போது இளமைப் பருவத்துக்குத் திரும்புகிறேன். இறைவனின் அதிசயிக்கத்தக்க படைப்புக்களை வியக்கிறேன். நம்மைச் சுற்றி இருப்பவற்றை இரசிக்கும் மனப்பாங்கே வாழ்க்கையின் மிக உயர்ந்த நிலை ஆகும். வாழும் கலைக்கான தத்துவம் அதுவே.

பரவசமூட்டும் வண்ணத் திரைப்படங்களைக் காண்பதில் மகிழ்ச்சி கிட்டுவதாக எண்ணுகிறோம். அது தவறு. இறைவன் நமக்கென மிக உயர்ந்த நல்ல விஷயங்களைத் தந்துள்ளார். தேவையெல்லம் அதைக் கண்டுணர்ந்து அனுபவிக்கும் ரசனையே. திறந்த மனதுடன் நோக்கினால் அவை தென்படும். ஒரு வண்ணத்துப்பூச்சி காண்போரைக் கவரும் பல வண்ணத் தோற்றத்துடன் பவனி வருகிறது.

இயற்கையை நேசியுங்கள். இயற்கையின் வளத்தை, அரிய பரிசுகளை, அளப்பில்லாப் புதுமைகளை நேசியுங்கள். வாழ்வெல்லாம் என்னை ஈர்த்து வருவது அதுவே.

இயற்கையின் ஒரு பங்காகிய நாம் இயற்கை அன்னையை வழி படும் ஆராதனையாகவே நான் விஞ்ஞானத்தைக் காண்கிறேன். மற்று வேறொன்று நிகழுமென்று விரும்பி அல்ல. ஒரு விஞ்ஞானியாய் நான் இயங்க அதுவே உந்து சக்தி. சின்னன்சிறு விஷயங்களே ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தரும். பழைய பாடல்கள், பழைய நண்பர்கள், இயற்கையைப் போலவே நமக்கு உவப்பு அளிப்பவர். நான் அவர்களை நோக்கிப் போகவே விரும்புகிறேன். குதர்க்கமாகத் தோன்றலாம். ஆனால் நான் திரும்ப எளிய விஷயங்களையே நோக்கிப் போக விரும்புவேன். உதாரணத்திற்கு ஒரு கோப்பைத் தண்ணீர் எவ்வளவு புத்துணர்ச்சியைத் தென்பைத் தருகிறது. கடுமையான வேலை அல்லது உடற்பயிற்சிக்குப் பின் பருகும் ஒரு கோப்பை குளிர்ந்த நீருக்கு இணையான சுகம் ஏது? உங்களால் இதை உணர்ந்து ரசிக்க இயலாதென்றால் சாக்ரடிஸ் அருந்திய ‘ஹெம்லாக்’ மட்டுமே உங்களால் ரசிக்கப் படும்

மற்றொரு விஷயம். தேசப்பற்று பற்றி நிறையவே பேசுகிறோம்.சற்றே சிந்தியுங்கள். தேசப்பற்றுக்கு ஒரு ஸ்தூல வடிவம் உண்டென்றால் அது எதுவாயிருக்கும்? என் பார்வையில் தேசப் பற்று மட்டும் அல்ல. எண்ணற்ற விஷயங்களின் சாராம்சம் மண்ணை நேசிக்கும் பற்றே.மண்ணிலிரிந்து தோன்றி மண்ணிலே மறைகிறோம் நாம். புழுதியாய், சாம்பலாய் எரிந்து புதைந்து மண்ணாகும் நம் உடல். சீதை பூமியிலிரிந்து தோன்றியவள். இதுவே நம்மைப் பேணும். பூமியிலிருந்து புற்களும், புல்லைத் தின்னும் பசு தரும் பாலும் கிடைக்கும். சைவரும், அசைவரும் அருந்துவது பால். எல்லோரையும் பேணி வளர்க்கும் மண்ணை நேசிப்பதே தேசப் பற்று. அந்தப் பற்று அவளை நோக்கி நம் பரிவு விரிய வழி வகுக்கும். அவள் அழிந்தால் நாம் அழிவோம். உணவுப் பஞ்சத்திற்கான காரணம் விஞ்ஞான வளர்ச்சி பற்றி அறிவு இல்லாதோரிடம் பூமியைப் பேணும் அதிகாரத்தை ஒப்படைத்ததே. விஞ்ஞான அறிவால் நாம் எதையும் படைக்க இயலும். மண்ணின் மீது பாசமும் பற்றும் இல்லை எனில் விஞ்ஞானத்தில் நாம் எந்த முன்னேற்றமும் காண இயலாது. ஒவ்வொரு கற்றறிந்த மனிதனும் ஒன்றை உருவாக்கக் கடமைப் பட்டவன். ஒன்றைப் பேணி வளர்த்து அதன் வளர்ச்சியைக் கண்டு மகிழ வேண்டியவன். உணவுப் பெருக்கப் பிரச்சாரம் இல்லை இது. ஓரு புகழ் பெற்ற ரோம மன்னனை நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கும் வேண்டுகோளுடன் அணுகினர் மக்கள். அப்போது அவன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். சர்வாதிகாரியாகப் புகழும் அதிகாரமும் கொண்டிருந்த பின்னும் அவன் மீண்டும் நிலத்துக்கே சென்ற்றிருந்தான். அவன் மக்களிடம் “நான் உழுது பயிரிட்டேன். அது எனக்குத் தானியங்களைத் திருப்பித் தந்தது.” என்றான். மனிதனைப் போல் அன்றி நிலம் நாம் கொடுப்ப்தைப் பன் மடங்காகத் திருப்பித் தரும். நாம் எதனால் வாழ்கிறோமோ அதைப் பேணி உருவாக்க முயல்வதே நம் கடன்.

இளைய தலைமுறையின் இந்த அரங்கில் கல்வி முடித்து வாழ்க்கைப் போரில் காலெடுத்து வைக்கும் உங்களிடையே பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருபத்து நாலு மணி நேரம் முன்பு எழுதப்பட்டதல்ல என் பேச்சு. உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட என் கருத்துக்களில் சிறிதளவேனும் உங்களின் உள்ளே சாதனைக்கான விதையைத் தூவி, ஊக்கப்படுத்தி, சோதனைகளைத் தாண்டும் வலியேற்றினால் அது என் வெற்றி. போராட்டமான இன்றைய வாழ்வில் நீங்கள் வெல்வீராக.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s