கருவி


tamil, tamil short story, modern tamil literature

கருவி

சிறுகதை (மே 2011 சங்கு இதழில் வெளியானது)

சத்யானந்தன்

என் தங்கையின் திருமணம் முடிந்த சில நாட்களில் ஒரு நாள் முடி வெட்டிக் கொள்வதற்காகக் காத்திருந்த போது ராஜ நாயகம் என் அருகில் வந்து அமர்ந்தார். “????? அந்தப் ?????? தங்கவேலு, உங்க உறவுக்காரரா?” என்றார்.

“இல்லை. என்னுடன் படித்தவர்”

“பல பெரிய ஆளுங்க தொடர்பு அவருக்கு உண்டு. எல்லாக் கட்சிக்காரங்களுக்குமே அவரு வேண்டப் பட்ட???ச்சே” என்றார்.

“நட்பு முறையில் தான் அவருக்கு அழைப்பு அனுப்பியிருந்தேன்”

“அவரோட பேருக்கு மின்னாடி பந்தல் என்கிற பேரு எப்பவும் சேந்து பந்தல் தங்கவேலுன்னு தான் சொல்வாங்க. பெரிய மாநாடுகள், பொதுக்கூட்டம் எல்லாம் ஏற்பாடு ஆகும் போது அவர் அனேகமா அங்கே இருப்பாரு” என்றபடி தங்கவேலு புராணத்தை அளந்தார்.

தங்கவேலு பெயர் அடிபட்டதும் எனக்கு ஒரு சிக்கலான பிரச்சனை நினைவுக்கு வந்தது.

நான் குடியிருந்த வீட்டுக்காரர் என்னைக் காலி செய்யும்படி அவசரப் படுத்திக் கொண்டே இருந்தார். சென்னையில் வீடோ திருமணமோ தரகர் அன்றி ஒரு அணுவும் அசையாது. என் மனைவியோ தெரிந்தவர் மூலம் தேடலாம் என்று பரிந்துரை செய்தாள்.

எதிர்பார்த்த படியே என் மனைவியின் பரிந்துரை வேலைக்கு ஆகாமல் மேலும் சிக்கலாய், குறைந்த காலக் கெடு உள்ளதாய் பிரச்சனை என் தலையில் தான் வந்து விடிந்தது. ‘டிராவல்ஸ்’ வைத்து நடத்தும் என் பிழைப்பே முக்கால் வாசி நாட்களைச் சாப்பிட்டது.

இந்த நிலையில் தான் தங்கவேலுவும் அவனது மனைவியும் நான் சில நாட்கள் முன்பு எதிரும் புதிருமாய் சந்தித்த போது விடுத்திருந்த அழைப்பை ஏற்று என் வீட்டுக்கு ஒரு நாள் விஜயம் செய்தனர். அவர்களால் மிகவும் கவரப் பட்ட என் மனைவி அவர்களது உதவியைக் கேட்டாள்.

அதற்கு முன்பு நான் தங்கவேலுவிடம் தொலைபேசியில் பேசியது உண்டு. ஆனால் சென்ற வாரம் முழுதும் பலமுறை அவனைத் தொடர்பு கொள்ள முயன்றும் இயலவில்லை. அடுத்த முறை அவன் போனை எடுத்தாலே நீ முயற்சி செய்தது போதும் எனச் சொல்ல இருந்தேன்.

முடி திருத்திக்கொண்டு வெளியே வந்ததும் என் ‘மொபைலி’ல் இருந்து அவனது எண்ணை இணைத்தேன். அவன் அழைப்பை ஏற்கவே இல்லை.

வீட்டுக்கு வந்து குளியலறையில் நுழையும் முன்பே என் மனைவி ‘உங்க ப்ரண்டு கிட்டே பேசினீங்களா?’ என்று தொடங்கினாள். அவளுக்கு என்ன பதில் சொல்ல. எனக்கும் தெரியும் இரண்டுமாதமாக வாடகை வாங்க மறுத்து வீட்டுச் சொந்தக்காரர் முன்பணத்தில் கழித்துக் கொண்டு இருந்தார்.

நான் தாம்பரத்தில் மட்டுமே வீடு தேடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. நான் வைத்திருக்கும் ‘ட்ராவல்ஸ்’ அந்த இடத்தில் தொடர்ந்து பயன்படுத்தும் சில ‘ரெகுலர் கஸ்டமர்ஸ்’ஸைக் கொண்டிருந்தது. வேறு இடம் போனால் தாம்பரம் வந்து போகும் நேரம் என் தொழிலை மிகவும் பாதிக்கும்.

அன்று ஞாயிறு என்பதால் தெரு முனையில் தென்படும் தரகர்கள் அலைந்து திரிந்தவாறு இருப்பார்கள். என் வண்டிகள் எல்லாமே வாடகைக்கு வெளியே போயும் இருந்தன. அதனால் சற்றே நேரம் ஒதுக்கி வீடு வேட்டையை முடிக்க நினைத்தேன். முடிந்தால் அவளையும் அழைத்துப் போய் காட்டி விட்டு எதேனும் ஒரு வீட்டைப் பிடித்து முன் பணமும் கொடுத்து விடலாம்.

எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தது. பல குடியிருப்புகளின் ‘செக்யூரிட்டி’ அல்லது ‘வாட்ச் மேன்’ இதில் உற்சாகமாக ஈடுபட்டு வந்தார்கள். இன்று அந்தக் குடியிருப்பில் இருந்து துவங்கி ஒரு சுற்று போய் வர முடிவெடுத்தேன். என் மனைவியோ மட்டனுக்கு மசாலா அரைப்பதில் வெகு நேரம் ஆக்கிக் கொண்டிருந்தாள். எனவே தனியே கிளம்பினேன்.

20 25 குடியிருப்புகள் உள்ள அந்த வளாக ‘வாட்ச் மேன்’ ” ஒரு ‘சிங்கிள் பெட் ரூம் ப்ளாட்’ இருக்கிறது ” என்றார். ஐந்தாயிரம் ரூபாய் வாடகை. ஐம்பதாயிரம் ‘அட்வான்ஸ்’. ‘வீட்டைப் பாக்கலாமா?’ என்றேன். உடனே அவர் தம் கையிலிருந்த மொபைல் ‘போனை எடுத்து சில பொத்தான்களை அழுத்தினார். வீட்டின் ஹால், ஒற்றைப் படுக்கையறை , இரு குளியலறைகள் மற்றும் சமையலறையின் படம் ‘மொபைலின்’ திரையில் விரிந்தன. இப்படி படம் காட்டினால் என் மனைவி ஏற்க மாட்டாள். ‘உள்ளே போயி பாக்க முடியாதா?’ என்றேன். இப்போ உங்க மாதிரியே இன்னும் ரெண்டு பேரு வர்றேன்னிருக்காங்க. ஒரு அவர் பொருத்து வாங்க. உள்ளே இட்டுக்கினு போயிக் காட்டுறேன். ஓணர் கிட்டே நீங்க ஒரு நாள் பிக்ஸ் பண்ணிக்கிங்க. அவரு வருவாரு. அது வரை கமிஷனா ஒரு ஆயிரம் ரூபா தரணும். பிறகு ‘பிக்ஸ்’ பண்ணிட்டீங்கன்னா அரை மாச வாடகையை கமிஷனா தரணும். ‘ ‘கொஞ்சம் அதிகமா கேக்கறீங்க.’ என்றேன். ‘போ ஸார் அவனவன் ஒரு மாசத்து வாடகைக்கி மேலவே கமிஷனு வாங்குறான்’ என்றார். ‘சரி. இன்னும் ஒரு மணி நேரத்தில வீட்ல அவ்ங்களோட வர்றேன்’ என்றேன். ‘உடனே பிக்ஸ் பண்ணுங்க ஸார். சாயங்காலத்துக்குள்ளே எப்பிடியும் பிக்ஸ் ஆயிடும்” என்றார்.

வீடு திரும்பும் போது என் வளாக வாயிலில் தங்கவேலுவின் கார் நின்றிருந்தடு. ‘நியுமராலஜி’க்காக அவன் 3333 என்ற எண்ணை வைத்திருந்ததும் அது ஃபோர்டு ஐகான் என்பதும் என் நினைவில் இருந்ததால் நான் உடனே அந்த வண்டியை அடையாளம் கண்டு விட்டேன். தங்கவேலு என் மனையாளிடம் மீண்டும் நம்பிக்கை அளித்திருப்பான். ஏனோ அந்த ‘செக்யூரீடி’ தமது ‘மொபலை’ உபயோகித்த லாவகம் மனதில் தோன்றி மறைந்தது.

நான் வீட்டில் நுழைந்த உடனேயே ‘உனக்கு வீடு பார்ப்பது என் பொறுப்பு. நம்பு’ என்றான். புன்னகைத்தேன். காபி அருந்திய பின் அவன் வேண்டுகோளுக்கிணங்கி அவனுடன் கிளம்பினேன். என் மனைவியும் சேர்ந்து கொண்டாள்.

தாம்பரம் பேருந்து நிலையம் தாண்டி வலது பக்கத்தில் ஒரு குடியிருப்பில் எங்கள் வண்டி நின்றது. ‘ஒரு கட்சி மீட்டிங் விஷயம். என்கிட்டே வேலை செய்யிற பையன் புதுசு. என்னான்னு ஒரு நிமிஷம் பாத்திட்டுப் போயிடலாம்” என்றான். அவன் நிறுத்திய இடம் ஒரு அரசு பள்ளி மைதானம். அந்த மைதானத்தில் மூன்று லாரிகள் நிறைய ஆட்கள் ஆண்களும் பெண்களுமாய் இருந்தார்கள். தமிழ் நாடு போலவே தெரிய வில்லை. ஒரு இளைஞன் ஓடி வந்தான். ‘மொத்தம் அஞ்சு லாரி ஆச்சே? இன்னும் ஏன் கிளம்பல? நீ ஏன் போன்ல முழு விவரம் சொல்லாம உடனே வாங்க அப்பிடிங்கற. ‘ இரண்டு கேள்விகளை அடுத்து அடுத்து எய்து தங்கவேலு முந்திக் கொண்டான்.’ அவனுக ஏதோ இந்தியில பேசுராங்க.நான் அந்தக் காரணத்தை உங்க கிட்டே போன்ல சொன்னேனே’ இளைஞன் பதிலளித்தான். ‘ஒரு ஆளை இட்டா. சாரு கிட்டே பேசச் சொல்லு ‘ என்றான் தங்கவேலு. ‘ஒரு கட்சி மீட்டிங்குக்காக இந்த ஆளுங்களைப் பிடிச்சுக்கிட்டு வந்தேன். என்னா விவரமின்னு கேளு’ என்றான் தங்கவேலு என்னைப் பார்த்து. ஒரளவு சிவப்பாய் பரட்டைத்தலையுடன் குர்த்தா பைஜாமா உடையில் வெற்றிலைக் கறை படிந்த வாயுடன் இரண்டு நடு வயது ஆண்கள் வந்து கும்பிட்டு என்னிடம் பேசினர்.

“அவங்க கட்டிடத் தொழிலாளி. அவங்களுடைய கடப்பாறை, மண்வெட்டி, பாண்டு எல்லாத்தையும் வேற லாரியிலே ஏத்திட்டீங்களாம். அது காணோமேன்னு பதட்டப்படறாங்க” என்று மொழிபெயர்த்தேன்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s