கல்வியில் அரசியல் பகுதி – 2


http://puthu.thinnai.com/?p=13346

கல்வியில் அரசியல் பகுதி – 2

சத்யானந்தன்

Share

யார் மேய்ப்பர்?

தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு “எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?” . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது தென்படும். மாநில நிர்வாகம் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் மோசம் அல்லது சுமார் என்ற அளவே இருக்கும்.
உயர்கல்வி நிறுவனங்கள் தொட்ங்குவதற்கான ஒப்புதல் மற்றும் அந்தக் கல்வி நிறுவங்களைக் கண்காணிப்பது, தரவரிசைப் படுத்துவது இவை எல்லாமே மத்திய அரசிடமே இருக்கின்றன. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகமே UGC (University Grants Commission) என்னும் அமைப்பின் மூலம் இதைச் செய்கிறது. UGC க்குக் கீழே AICTE (All India Council for Technical Education) மற்றும் MCI (Medical Council of India) உட்பட Architecture, Nursing என பல வகை தொழில் சார்ந்த படிப்புக்களுக்கும் தனித் தனி இலாகாக்கள் உள்ளன. Engineering கனவே 99% என்பதால் இந்தத் தொடரில் அது சம்பந்தப் பட்டவற்றை மையப் படுத்துகிறோம். UGCன் அமைப்பு (Engineering ஐப் பொருத்த வரை) கீழ்கண்டவாறு உள்ளது.

Ministry of Human Resource Development
|
|
UGC –> NAAC
|
AICTE –> NBA

UGC -University Grants Commission
NAAC-National Assessment and Accreditation Council
NBA -National Board of accreditation

மேலே குறிப்பிட்டுள்ள NAAC – NBA இரண்டுமே கல்வி நிறுவங்களில் தகுதியான ஆசிரியர் இருக்கிறாரா LAB Library போன்ற வசதிகள் நிர்ணயித்த தரம் குறையாமல் இருக்கின்றனவா, ஆராய்ச்சிப் பணிகள் (தனியார் பல்கலைக் கழகத்துக்கு மட்டும்) நடக்கின்றனவா என்பதையெல்லாம் கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றன. முதலாவது UGC க்குக் கீழும் இரண்டாவது AICTEன் கட்டுப்பாட்டிலும் உள்ளவை. இவை இரண்டுமே தமது கண்டுபிடிப்புக்களை ஒட்டி, தர வரிசையும் செய்கின்றன.

இப்படி இரண்டு அமைப்புக்கள் ஒரே அமைச்சகத்தின் கீழ் ஒரே வேலையைச் செய்ததில் “யார் மேய்ப்பர்?” என்னும் அதிகாரப் போட்டி எழுந்தது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க UGC AICTE ஆகிய இரு அமைப்புக்களும் மோதல் போக்கைத் துவங்கின. உச்ச கட்டமாக 2008, 2009ல் சில கல்லூரிகளில் துவங்கப் பட்ட Engineering MBA படிப்புக்களை அங்கீகாரமற்றவை என AICTE அதிரடியாக அறிவித்தது. சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சித் தரம் நிர்ணயித்த அளவு இல்லாததால் அந்த பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப் படும் என்றும் அறிவித்தது. மாணவர் போராட்டங்களுக்கும், பல நீதிமன்றங்களில் வழக்குகளுக்கும் இது வழிகோலியது. குறிப்பாக வழக்குகள் UGC AICTE இரண்டின் அதிகார விளிம்பு பற்றியும், ஒரு கல்லூரியின் அல்லது பல்கலைக்கழகத்தின்அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் AICTEக்கு உண்டா என்ற கேள்விகளையும் எழுப்பின. வழக்குகள் நிலுவையில் இருந்த போது ஊடகங்களில் வெளியான ஒரு தகவல் அண்ணா பல்கலைக் கழகமே AICTE ஒப்புதல் இல்லாமலேயே பல படிப்புக்களைத் துவங்கி விட்டது என்பது.

அரசாங்கத்துக்கு எதிரான வழக்குகளில் இரண்டு முக்கியமான அம்சங்களே தீர்ப்பின் அடிப்படையாகின்றன. ஒன்று எழுப்பப்பட்ட பிரச்சனை அரசின் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது. இரண்டாவது வழக்கை நீதி மன்றம் விவாதத்திற்கு ஏற்கும் பட்சத்தில் அரசு தனது கொள்கை, அல்லது நிலைப்பாடு இது என எதைச் சமர்ப்பிக்கிறதோ அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மேல் விசாரணையை நடத்தும். எனவே அரசாஙகம் எடுக்கும் நிலைப்பாட்டில் கிட்டத்தட்ட தீர்ப்பின் திசை தெரிந்து விடும். அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு UGCக்கு சாதகமாக அமைந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் AICTE தொழில் நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு சம்பந்தப் பட்ட கண்காணிப்பை மேற் கொண்டு தரத்தை உறுதி செய்யும். UGCஏ ஒட்டுமொத்த கல்வித்துறையின் (உயர்கல்வி) நிர்வாக முடிவுகளை மேற் கொள்ளும் என்றும் தீர்ப்பாகியது.

பின்னாளில் அமைச்சர் ஒரு பேட்டியில் “எந்தக் கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தி அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் UGCக்கு இல்லை” என்று கூறினார். ஒரு கல்லூரியில் தரம் சட்டதிட்டங்கள் நிர்ணயித்த அளவுக்கு இல்லை என்னும் பட்சத்தில் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவிலோ அல்லது ஒட்டுமொத்த கல்லூரியிலோ சேர்க்க அனுமதியில்லை என்பதான ஒழுங்கு முறையே சம்பந்தப் பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக உறுதி செய்யப் படுகிறது.

நாம் மேலே குறிப்பிட்டதெல்லாம் சட்டதிட்டங்களின் படி மத்திய அரசின் அமைப்பும் வழிமுறைகளும்.

கட்சி அரசியல் என்று வரும் போது சின்ன ஐயா தமது அதிகாரத்தைப் பயன்படுத்தியது அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது என்பவை ஊடகத்தில் ஏற்கனவே வெளிச்சமானவை. பல Engineering கல்லூரிகள் மாநில அரசில் ஆட்சி செய்யும் கட்சியை ஒட்டி துவங்கப்பட்டது தமிழகத்தில் கண்கூடு. சென்னையின் மிகப் பெரிய நிகர் நிலைப் பல்கலைக்கழகத் தாளாளர் அரசியல் பிரவேசம் செய்தது கல்விக்கும் அரசியலுக்கும் உள்ள பிணைப்பை நிரூபிப்பதே.

அன்னிய நேரடி முதலீடு தொலைதொடர்புத் துறையில் அனுமதிக்கப் பட்ட போது TRAI (Telecom Regulatory Authority of India) என்னும் ஒழுங்காணையமும் காப்பீட்டுத் துறையில் அதே காரணத்திற்காக IRDA(Insurance regulatory and development authority) என்னும் அமைப்பும் ஏற்படுத்தப் பட்டன. கல்வித் துறையில் அன்னிய நேரடி முதலீடு என்னும் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்பும் ஆணையம் ஏற்படுத்தப் பட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் துவங்கப் படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே அது தள்ளி வைக்கப் பட்டுள்ளது. (தொடரும்)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s