அற்ப ஜீவிகள் பக்கமிருந்து….


கட்டுரை

அற்ப ஜீவிகள் பக்கமிருந்து….

(8.12.05 தினமணி நாளிதழில் வெளியானது. நடிகை குஷ்பு கற்பு பற்றி தெரிவித்த கருத்து பற்றிய விவாதங்களின் ஊடே எழுதப்பட்டது)

சத்யானந்தன்

ஒரு சாதாரண மனிதன் இரண்டு வகைக்குள் வருகிறான். ஒன்று மேற்கத்திய கலாசாரத்தை ஆராதிப்பவன் அல்லது கீழை நாட்டுக் கலாசாரத்தில் ஊறியவன். ஒருவர் எவ்வளவு மெனக்கெட்டாலும் இந்த இரண்டில் ஒன்று என்பது வெளிப்படும். ஊசலாடுவது வேறு. அது தற்காலிகமானதும் கூட.

கீழை நாட்டு அறிவு ஜீவிகள் பெரிதும் மீட்பர்களான பீடத்தில் அமர விரும்புகின்றனர். கற்றறியாத -கல்வி மற்றும் மனமுதிர்ச்சியில்லாத- அற்ப ஜீவிகளை – மீட்க, பெருந்தன்மையுடன் அறிக்கைகள் விடுகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் தாகூர் இரண்டு வணக்கத்துக்குரிய உதாரணங்கள். இவர்கள் இருவருமே பத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரியருடன் பிறந்து வளர்ந்தவர்கள்.

குடும்பம் என்னும் அமைப்பு கொடுத்த அரிய பொக்கிஷங்கள் தான் கீழை நாட்டு சான்றோரும் வேறு சில நல்ல மரபுகளும்.

தனது அண்ணி உடன் கட்டை ஏறும்படி கட்டாயப் படுத்தப் பட்ட போது ராஜாராம் மோகன் ராய் கொதித்தெழுந்ததோடு ‘சதி’ சனாதனவாதிகளை மீறி நிறுத்தப்பட ஒரு துவக்கம் ஏற்பட்டது.

இந்துத்துவம் வேறு. கீழை நாட்டுக் கலாசாரப் பொதுத்தன்மை அதையும் உள்ளடக்கி குடும்பம், சமூகம் என விரிவது.

கீழை நாடுகளில், குறிப்பாக நம் நாட்டில், வர்ணாசிரம தர்ம அடிப்படையில் ‘தலித்’துகள் உரிமை மறுக்கப் படுவதும் பெண்ணடிமை செய்யப் படுவதுவும் இன்றும் சர்வ சகஜம். அதை எதிர்த்துப் பேசி விவாதித்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நெடுங்காலம் போராடி புதிய சமுதாயம் உருவாக வேண்டும்.

அதே சமயம் இஸ்லாமிய, ஜைன, பௌத்த மற்றும் இந்து கலாசாரத்தில் குடும்பம் என்னும் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ள இடம் பேணப் பட வேண்டும்.

மனச் சிதைவும் கெட்ட பழக்கங்களுமாய் வன்முறையாளனாய் பல குழந்தைகள் மேலை நாடுகளில் வளர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் விவாகரத்து.

ஒரு பெண்ணுக்குத் தன் கணவன் மற்றும் குழந்தைகள் ஆதரவு குடும்பம் என்னும் நிறுவனத்தில் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல, குடும்பம் என்னும் நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கிறது.

குடும்பத்தின் உள்ளே, அலுவலகத்தில், பணி இடத்தில் என எல்லாவிதத்திலும் பெண்ணுரிமை பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள், பிரசாரங்கள் கல்வி மூலமாகவே நடக்கவியலும். நடக்க வேண்டும்.

குடும்பம் என்னும் நிறுவனத்தை ஒரு நிமிடம் மறந்து விடுவோம். பொருள்கள், உடை, குடியிருக்கும் இடம், மற்றும் தான் நேசிக்கும் ஆண் / பெண் மீது பெண்/ஆணுக்கு உடமைப் பற்று இருப்பது இயல்பு.

ஆயுதம் ஏந்திய வன்முறை அளவு போவது இந்தப் பற்று. குடும்பம் என்னும் நிறுவனத்தில் சற்றே சிக்கலான இந்தப் பற்றுக்கு ஓர் ஆரோக்கியமான, அனைத்து வயதினருக்கும் ஏற்ற நன்மை பயக்கும் தீர்வு உள்ளது.

அறிவு ஜீவிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெண்ணின் உடலின் மீது ஆணின் ஆதிக்கம் என்று கொடி பிடிக்கிறார்கள். ஆனால் ‘ஷேவிங் க்ரீம்’ முதல் ‘ஷூ பாலீஷ்’ வரை பெண் உடலைக் காட்டி வரும் விளம்பரங்கள் பற்றி வாயே திறப்பதில்லை.

உலகமயமாக்கல் பக்க விளைவு அல்லது பின் விளைவாக, அழகிப் போட்டிகளில் ஆர்வம் அதிகமாகி செயற்கைச் சாதனங்களால் உடல் அழகை பேணும் ஆர்வம், வளரும் இளந்தலைமுறைப் பெண்களுக்கு ஆரோக்கியமானதா என்ற கேள்வி விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது.

ஓர் அரசியல்வாதி எழுப்பியதாலேயே ஒரு விஷயம் நிராகரிக்கப்படக் கூடாது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் உரிமை, பாதுகாப்பு இதெல்லாம் குடும்பம் என்னும் நிறுவனத்தை உடைத்துக் கடாசிய பின் எங்கும் தென்படாது. கட்டுப்பாட்டுக்கு உள்ளே தான் சுதந்திரம் இருக்கிறது என்பது ஜென் துறவி சுஸூகியின் தெளிந்த தீர்க்கமான கருத்தாகும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s