யுவராஜ் சிங் அல்லாதவர் பற்றி
யுவராஜ் சிங் புற்று நோயிலிருந்து மீண்டது மட்டுமன்றி மீண்டும் உலக கிரிக்கெட் தளத்திற்குத் திரும்பி ஒரு நல்ல முன்னுதாரணத்தைத் தந்திருக்கிறார். அவரை அரவணைத்த கிரிக்கெட் வாரியம் மற்றும் ஊடகமும் பாராட்டுக்கு உரியவரே.
சாதாரண ஜனங்களில் பணவசதி உள்ளோர் ஏழைகள் இருவருமே ஒரு பெரிய சவாலுக்கு உள்ளாகின்றனர். குடியிலிருந்து மீண்டவர், போதைப் பழக்கம் அல்லது மனநிலை பாதிப்பிலிருந்து மீண்டவர், மாற்றுத் திறனாளிகள், விவாகரத்து பெற்ற பெண் என பலரும் தம்மை சமுதாயம் புறக்கணிப்பதை சகித்து மேலும் போராடி வெல்லும் கட்டாயத்தில் இருக்கின்றனர். வசதி உள்ளவர்களை இந்தப் புறக்கணிப்பு பெரிதும் பாதிக்கிறது. வசதியில்லாதவரை பொருளாதாரப் பிரச்சனைகளும் சேர்ந்து நோக அடிக்கின்றன.
ஜாதி, மதம் பேசும் அமைப்புக்களில் இப்படி பாதிக்கப் பட்டவருக்கு எந்த உதவியும் செய்யும் இடம் இல்லை. தனது மற்றும் அந்த அமைப்புக்களின் அதிகார பலத்திற்கு வழி தேடும் வலிமையானவருக்கு மட்டுமே அங்கு வரவேற்பு உண்டு. நான் முதியவானாகி விட்டேன். நான் பாவம் இல்லையா என்று சுய பச்சாதாபத்திலேயே முழுகிக் கிடக்கும் படித்தவர் கூட இவர்களுக்காக எதையும் செய்யத் தயாரில்லை. உன்னால் முடியும். உன் வலி எனக்குப் புரிகிறது என்னும் ஆறுதல் தரும் வார்த்தையும், வழிகாட்டும் அமைப்பும் தேவைகள்.