ஏன் கூடாது?
தொலைதொடர்புத் துறை, காப்பீட்டுத் துறை இவை எல்லாவற்றிலும் நுழைந்த அன்னிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் நுழைந்து விட்டது. இதற்கு ஊடகங்களே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. குறிப்பாக பத்திரிக்கைகள். ஏனெனில் அடுத்து அந்தத் துறையில் தான் அன்னிய முதலீடு வருகிறது. உலக மயமாக்கமும் பன்னாட்டு நிறுவனங்களும், பொரி கடலை விற்கும் தெருவியாபாரி தொடங்கி, இனிப்பு விற்பவர், உள்நாட்டு குளிர் பானம் விற்பவர், கைவினைப் பொருள் செய்வோர் என ஏழை எளியோரையும் பல சிறிய பெரிய இந்திய நிறுவனங்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட போது ஊடகங்களுக்கு இவ்வளவு சொரணை ஏற்படவேயில்லை. போகிற போக்கில் நம் தலையிலேயே கையை வைத்து விடுவார்களோ என்றதும் இந்த எதிர்வினை.