மன்மோகன் சிங் – 80


மன்மோகன் சிங் – 80

இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு  80 வயது ஆகிறது. ஆக்ஸ்போர்டில் பொருளாதாரப் பட்டப்படிப்பு முடித்து 1966-69 வருடங்களில் ஐநா அமைபில் பணியைத் தொடங்கியவர், எல் என் மிஸ்ரா என்னும் காங்கிரஸ் மந்திரியின் தேர்வாக வெளிநாட்டு வணிக இலாகாவில் Advisor என்னும் பரிந்துரையாளராகப் பணியை 70களில் தொடங்கி பொருளாதாரத் துறையில் RBI Governor, Chariman Planning Commission என பல பதவிகளை 1991 வரை வகித்தவர். பின்னர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பொருளாதார சீர்திருத்தங்களை மனதில் கொண்டு இவரை நிதி அமைச்சராக்கினார். அரசாங்க அதிகாரியாக இருந்த சிங் 90களிலிருந்து அரசாங்கத்தின் அங்கமாக ஆனார். 2004ல் திருமதி.சோனியா காந்தி பிரதமராவதற்கு எதிர்ப்பு எழுந்த போது பிரதமரானவர் இன்றுவரை தொடர்கிறார். இவரை அரசியல்வாதியாக யாரும் கருதவில்லை. நேர்மையாளராகவே பலராலும் கருதப்படுகிறார். முழுப் பெரும்பான்மையில்லாத இரண்டு அரசுகளின் பிரதம மந்திரியாக செயற்படும் போது பல அரசியல் சதுரங்கங்களையும், மதக் கலவரம், பயங்கரவாதம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என நிம்மதி இல்லாத கால கட்டத்திலேயே இவரது பொறுப்பு இருந்தது. இவ்வளவு மூப்பிலும் முக்கியமான பொறுப்பை வகிக்கும் அதுவும் பொம்மலாட்டக் கயிறுகளின் வசதியில்லாத முனையில் இருந்து செயற்படும் இவரது பொறுமை வியப்பளிக்கிறது. 2014 முதலாவது இவருக்கு ஓய்வெடுக்கும் உரிமை கிடைத்து நலமாக வாழட்டும். 80 வயது அரசியலில் சிகரம் எட்டும் நிலையாக பலருக்கு அமைந்திருக்கிறது. ஆனால் இவர் அரசியல்வாதி ஆகாமலேயே ஓய்வின்றி உழைக்கும் ஒரு அரிய உதாரணம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s