Dirty Pictureலிருந்து சுத்தமான இந்தியாவுக்கு
காந்தியடிகள் பிறந்த தினத்தை ஒட்டி சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு மஹாராஷ்ட்ராவின் வார்தா மாவட்டத்தில் இருந்து பிகார் வரைக்கும் நிர்மல் பாரத் யாத்ரா என்னும் பிரசார ஊர்வலத்தை அறிவித்துள்ளது. கிராமப்புறங்களில் சுத்தம், சுகாதாரம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்துள்ள இந்த முயற்சி குறித்த ஊடகங்களுக்கான சந்திப்பில் Dirty Picuture என்னும் படத்தில் நடித்துள்ள வித்யா பாலன் என்னும் நடிகை பங்கு பெற்றதால் இந்த செய்தி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. அனேக ஊடகங்களில் இது மக்கள் கவனத்தைப் பெறும். பெரும்பாலான நடிகைகள் விஷயத்தில் அவர்களது புகழ் அல்லது Market என்பது ஐந்து வருடம் கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. அதற்குப் பிறகு சின்னத்திரை என்று இடம் மாறினாலும் அதிலும் முழுநேரம் பணிபுரியும் அளவு வாய்ப்பில்லாத அளவு ஏகப்பட்ட போட்டி. அனேகமாக அவர்களின் பொழுது தீராத மன அழுத்தடத்திலேயே கழிகிறது. 40 வருடங்களுக்கும் முன்பு அழகுக்காகவும் நாட்டியத்துக்காகவும் புகழ் பெற்ற ஹிந்தி நடிகையும் தமிழில் நடிப்புக்காகப் புகழ் பெற்ற் ஒரு நடிகையும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி பலியும் ஆனார்கள். இன்று தற்கொலைகள் அதிகமாகி இருப்பதைக் காண்கிறோம். நல்ல புகழோடு இருக்கும் போதே அரசோ அல்லது தன்னார்வு நிறுவனங்களோ எடுக்கும் சமூதாய மேம்பாட்டுக்கான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் எத்தனை வயதானாலும் ஊடக கவனம் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். உருப்படியாக சமூகத்துக்காகப் பணிபுரிந்த மன நிறைவும் கிடைக்கும். சமுதாயமும் நல்ல விஷயங்களோடும் நடிகைகளைத் தொடர்பு படுத்தும் ஆரோக்கிய மனநிலைக்கு மாறும். காலாவதியான பேட்டரி போல தூக்கி எறியப்பட்ட ஏமாற்றத்தோடு வாழ்நாளைக் கழிப்பதை விட இது நல்ல மாற்று வழி.