ஊடகங்களால் பிழைத்த குழந்தையின் உயிர்
ஊடகங்கள் எதிர்மறையான அல்லது பரபரப்பான விஷயங்களையே வெளியிட்டு அரசியல்வாதிகளின் பரஸ்பர தாக்குதல்களுக்கு முக்கியத்துவம் தந்து வரும் வேளையில் ராஜஸ்தான் ஜெய்புரில் ஒரு ரிக்சா ஓட்டுனர் தாயை இழந்த சின்னஞ்சிறு சிசுவை தன்னுடன் சைக்கிள் ரிக்சாவில் வைத்து அலைந்து வந்தார். பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த அந்தக் குழந்தையின் நிலை கண்டு இரங்கியவர்கள் தந்த தகவல்கள் மூலம் தாமினி ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுப் பல நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்து பிறகு இயல்பு சுவாசத்துக்கு வந்து தற்போது வாய்வழி உணவு ஏற்குமளவு தேறியுள்ளாள். 17 லட்சம் ரூபாய் பல நல்ல இதயம் கொண்டவர்களால் அவளுக்கென வழங்கப் பட்டு அது ஒரு நிரந்தர வைப்பாக வங்கியில் சேமிக்கப் பட்டு உள்ளது. சமூகத்தின் நல்ல மனப்பாங்கு வெளிப்பட வாய்ப்பளித்தது ஊடகங்கள் செய்த நேர்மறையான பணியினாலேயே. (நன்றி ஹிந்து)