ரஜினிகாந்தின் பன்ச் டயலாக் – ஒரு நோயின் அறிகுறி


ரஜினிகாந்தின் பன்ச் டயலாக் – ஒரு நோயின் அறிகுறி

உச்சநீதிமன்றம் மறுபடியும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை குறிப்பாகப் பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்களைப் பாதுகாக்க கண்காணிப்புக் கேமராக்கள் போன்ற நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் முக்கியமானதாகக் கருதுகிறது.  பெண்களைப் பாதுகாக்க அல்லது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் செய்யும் ஏற்பாடுகள் ஒரு கூடுதலான உதவியே. ஆனால் அடிப்படையில் பெண்கள் குறித்த பரிவும் மரியாதையும் கொண்ட அணுகுமுறையே தேவைப் படுகிறது. இது ஒரு நல்லவிதமான மன மாற்றத்தைக் கோருகிறது. சட்டம் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக அமைப்புக்களின் கட்டுப்பாடு எந்த அளவு உதவும் என்பது கேள்விக்குறியே.

மதத் தலைவர்கள், ஜாதித் தலைவர்கள், பட்டி மன்ற நடுவர், பேராசிரியர் போன்று பண்பாட்டு அடிப்படையில் ஆண்களின் கவனத்தைப் பெறுபவர்கள்  பெண்களின் உரிமைகளைப் பற்றி, அவர்களை கௌரவமாக நடத்துவது, அவர்கள் வங்கொடுமைக்கு ஆளாவது சமுதாயத்துக்கே இழுக்கு என்பவை பற்றிப் பேச வேண்டும். ரஜினிகாந்த் படையப்பா என்னும் படத்தில் “அதிகமாக கோபப் படும் ஆணும் அதிகமாக ஆசைப்படும் பெண்ணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல” என்று பேசும் பன்ச் டயலாக் நல்ல உதாரணம். எந்த விதமான ஆழ்ந்த பொருளுமில்லாத பிதற்றலான அப்போதைக்குக் கைத்தட்டல் பெற்று ஆணின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதான இது போன்ற குப்பைகள் இளம் விடலை ஆண் மனதில் வேரூன்றி விடுகின்றன. ஆணாதிக்க மனப்பாங்கு என்னும் காலகாலமாக ஊன்றி விட்ட நோயின் அறிகுறி இத்தகைய வெட்டியான பயனற்ற பிதற்றல் வசனங்கள்.

ஆணும் பெண்ணும் சமம். நாசூக்குகள் மற்றும் மென்மையான உடல் மற்றும் மன அமைப்பால் பெண்களிடம் பழகும் போது  (அதிகமான கவனிப்பு மிகுந்த ) நட்பான மரியாதையான அணுகுமுறை அவசியம் என்பதை சினிமா நடிகர்கள் வலியுறுத்த வேண்டும்.  பெண்கள் பெருமளவில் பணிபுரியும் கால கட்டம் இது. அவர்களின் பங்களிப்பு குடும்பம் மட்டும் சமூகத்தில் மிகவும் ஆக்க பூர்வமானது. இரண்டில் ஒரு பங்கான அவர்களுக்கு சதா வன் கொடுமை என்பது சமூகம் இன்னும் முன்னேறவில்லை முற்போக்காக சிந்திக்கவில்லை என்பதற்கே அடையாளம். சினிமா நடிகர்கள் தமது படங்களில் ஆணாதிக்கக் கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும்.  பெண்கள் உரிமைகள், பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான வன் கொடுமைத் தடுப்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வில் நாம் வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது. (Image courtesy: Wikipedia)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ரஜினிகாந்தின் பன்ச் டயலாக் – ஒரு நோயின் அறிகுறி

  1. Rajendraprabhu says:

    Very nice article

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s