ரமணரைத் தேடி -1


ரமணரைத் தேடி -1

மதுரை அருகே ஒரு கிராமத்தில் டிசம்பர் 30 1879ல் தோன்றியவர் ரமண மகரிஷி. திருச்சுழி என்னும் அந்த கிராமத்தில் சுந்தரம் என்பவரது மகனாகத் தோன்றினார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வெங்கடராமன் என்பதாகும். பதினாறாவது வயதில் ரமணருக்கு ஒரு நாள் கடுமையான மரண பயம் தோன்றியது.

மறுநாள் ஒரு சிறிய கடிதத்தில் தமது ஆன்மீகத் தேடல் பற்றிக் குறிப்பிட்ட  அவர் மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் வாங்கும் அளவு பணம் எடுத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். கையில் இருந்த மிச்சக் காசு மற்றும் உடைகளை வீசி எறிந்து ஒரு கோவணத்துடன் தவம் செய்யத் துவங்கினார். அவரது தவம் முதலில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் ஆயிரங்கால்  மண்டபத்தில் துவங்கி பின்னர் தரைக்குக் கீழ்த் தளமான பாதாள லிங்கேச்வரர் சன்னிதியில் தொடர்ந்தது.

பாதாள லிங்கேஸ்வரர் சன்னிதியைப் பார்த்தால் அது எவ்வளவு குறுகியது என்று தெரியும். அதில் அவர் தவம் செய்யும் போது கோயில் சிதிலமடைந்ததாகவே இருந்தது. பூச்சிகளால் கடிக்கப் படுவது கூடத் தெரியாமல் தவத்தில் இருந்த அவர் பின்னாளில் காலில் புற்று நோயால் பாதிக்கப் பட்டார்.

பின்னர் அருணாசல மலையில் பல இடங்களில் தவம் புரிந்த அவருடன் 1916ல் அவரது தாயார் வந்து மற்ற சீடருள் ஒருவராக இணைந்தார். இதுவும் “நான் யார்?” என்னும் கேள்விக்கான விடையை மறை நூல்களில் தேடாமல் தானே தேடி அறிந்ததும் நமக்கு புத்தரை நினைவு படுத்தும்.

1920களில் ரமண ஆசிரமம் சிறிய அளவில் அவரது தம்பியின் முயற்சியால் தொடங்கப் பட்டது. இதுவும் புத்தரின் வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடியது.

1950வரை இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆன்மீகவாதியான ரமணர் பல நூல்களையும் எழுதினார். அதில் நான் யார் என்னும் கேள்விக்கான விடையுடன் எழுதிய 40 செய்யுள்கள் குறிப்பிடத் தகுந்தவை.

புண்ணீயம் என்று பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வருவோர் பலருக்கு ரமணர் தவம் செய்த குகைகள் மற்றும் அபூர்வ தகவல்கள் தெரிவதில்லை. அவற்றை வரும் பகுதிகளில் காண்போம். (தொடரும்)
(image courtesy wikipedia)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to ரமணரைத் தேடி -1

  1. Pingback: ரமணரைத் தேடி -3 | tamilwritersathyanandhan

  2. Pingback: ரமணரைத் தேடி-4 | tamilwritersathyanandhan

  3. Pingback: ரமணரைத் தேடி – 5 | tamilwritersathyanandhan

  4. Pingback: ரமணரைத் தேடி – 6 | tamilwritersathyanandhan

  5. Pingback: ரமணரைத் தேடி – 7 | tamilwritersathyanandhan

  6. Pingback: ரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள் | tamilwritersathyanandhan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s