ரமணரைத் தேடி -2


ரமணரைத் தேடி -2

HPIM3478
ரமணர் தவம் புரிந்த அருணாசலம் என்னும் திருவண்ணாமலையில் பல ஞானிகள் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் என்று அழைக்கப் படும் யோகி ராம் சரத் குமார், பப்பாஜி என பலரின் பெயர்களையும் நாம் கேள்விப் படுகிறோம். ஆனால் ரமணர் அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து மக்களின் தொல்லைகளால் அவதிப் பட்டார். தனிமையில் தவம் செய்ய என மலையின் ஒவ்வொரு இடமாக, போகப் போக இன்னும் உயரமான இடங்களுக்கு சென்றார். அதனாலேயே ரமணர் எந்த அளவு தமது தவத்தில் விடாப் பிடியாக இருந்தார் என்பதை நாம் அறிந்து வியக்கிறோம். முதன் முதலில் ரமணர் கோயிலை விட்டு சற்றே உயரமான இடம் என்று தேடிச் சென்றது பவளக் குன்று. பூச்சிகளால் மிகவும் கடிக்கப் பட்டு உடல் நலிவுற்றிருந்த ரமணரை பாதாள லிங்கேஸ்வரர் சன்னிதியிலிருந்து வெளியே அழைத்து வந்தவர் சேஷாத்திரி சுவாமிகள். அவரின் உதவியுடன் ரமணர் பவளக் குன்றை சென்றடைந்தார்.

பவளக் குன்று நகரின் மையத்தில் அமைந்துள்ளது.  திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்குப் போகும் சாலைக்கு சின்னக்கடை வீதி என்று பெயர். பெரிய ஆஞ்சனேயர் கோயில் என்னும் கோயிலைத் தாண்டி வரும் போது இடதுபுறம் ஒரு சந்தில் மேலே உள்ள புகைப் படம் போல ஸ்ரீபவளக் குன்று மடாலயம் என்னும் சிறிய வளைவின் பலகையைக் காணலாம். அது அடிவாரம். மேலே நாம் போகும் போது நாம் காணக் கூடியது குடியிருப்புக்கள். திருச்சி மலைக் கோட்டை சென்றவர்களுக்கு அங்கே மலை, கோயில், குடியிருப்புக்கள் இவை அனைத்தும் மிகவும் அருகருகே இருப்பது தெரியும். பவளக் குன்றின் மேலே நாம் செல்லும் போது இது போன்ற குடியிருப்புக்களை முக்கால்வாசி தூரம் காண இயலும். பவளக் குன்றின் மேலே அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

HPIM3508

பார்வதி தேவியார் இந்த பவளக் குன்றில் தவம் இருந்ததால் அதன் முடிவில் சிவபெருமான் தேவியாருடன் அர்த்த நாரீஸ்வரராக மாறினார் என்பது புராணம். ரமணரின் தாயார் முதன் முதலில் இங்கே வந்துதான் அவரை தமது குடும்பத்துக்குத் திரும்ப வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கீழ்காணும் புகைப்படத்தில் அவர் தம் தாயாருக்கு என்ன பதில் கூறினார் என்பதைக் காண்போம்.
HPIM3517
மிகவும் மனதை உருக வைப்பது இது. 1899ல் தன்னைத் தேடி வந்த தனது தாயை சமாதானம் செய்ய என்று அவர் விதிப்படி தான் எதுவும் நடக்கும். எனவே நாம் மௌனமாயிருப்பதே நல்லது என் கிறார். மக்கள் அதிகம் வருவதே இல்லை. பூஜை செய்பவர்கள் மிகவும் குறைந்த நேரமே மாலையிலும் காலையிலும் வரும் போது கதவு திறந்திருக்கும் என்றார். மிகவும் சிறிய கோயிலின் நுழைவில் இடது புற சுவரில் மேலே உள்ள புகைப் படத்தைக் காண்கிறோம். சரி இந்தக் கோயிலுக்கு எப்போது போகலாம்? காலையில் 7.30 முதல் ஒன்பது வரையில் மற்றும் மாலையில் 5.30 முதல் 6.30 வரை என்று அறிவிப்புப் பலகை கூறுகிறது.
HPIM3525
நாம் மேலே காண்பது கோயிலின் பிரதான வாயில் புகைப்படம் .உள்ளே அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி மையத்திலும் வலது பக்கம் ரமணர் தவம் புரிந்த குகையும் உள்ளன என்று காவல் துறையில் வேறு பணிக்காக அங்கே வந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ரமணர் அதிகநாள் இருந்த குகைகள் ஒரே பகுதியில மேலே கீழே என்பது போல் வரும். இது ஒன்றே தனித்தது. தொடர்ந்து பிற குகைகளைப் பற்றி தொடர்ந்து காண்போம்.

(photo images courtesy: http://richardarunachala.wordpress.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு, பயணக் கட்டுரை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ரமணரைத் தேடி -2

  1. Pingback: ரமணரைத் தேடி -3 | tamilwritersathyanandhan

  2. Pingback: ரமணரைத் தேடி-4 | tamilwritersathyanandhan

  3. Pingback: ரமணரைத் தேடி – 5 | tamilwritersathyanandhan

  4. Pingback: ரமணரைத் தேடி – 6 | tamilwritersathyanandhan

  5. Pingback: ரமணரைத் தேடி – 7 | tamilwritersathyanandhan

  6. Pingback: ரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள் | tamilwritersathyanandhan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s