ரமணரைத் தேடி – 5


HPIM2804

ரமணரைத் தேடி – 5

ரமணர் காலப் போக்கில் இன்னும் அதிக உயரம் என்ற அடிப்படையில் சென்று தியானம் புரிந்திருக்கிறார். குகை நமச்சிவாயவில் சொற்ப நாட்களே இருந்த ரமணர்  1901 முதல் 1916 வரை அவர் விரூபாட்ச குகையில் இருந்தார். 14ம் நூற்றாண்டில் விரூபாட்சர் என்னும் முனிவர் இக்குகையில் தியானம் புரிந்தாரரென்பது நம்பிக்கை. இந்தியத் தொல்பொருள் துறையால் இக்குகை புராதனமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இக்குகையை மிகவும் நிசப்தமான தியானக் கூடமாக காத்து வரும் ரமணாசிரமத்தை நாம் மிகவும் பாராட்ட வேண்டும்.

குகை நமச்சிவாய என்னும் குகையிலிருந்து மிகவுமே உயரமான இடம் விரூபாட்ச குகை. கூடுமான வரை அதிகாலையில் ஏறத் துவங்கி அங்கே அதிக வெய்யிலுக்கு முன் சென்றடைவது நல்லது.  மேலே செல்லும் வழி ஓரளவு அகலமாகவே இருக்கும் . மிகவும் செங்குத்தானது. யாரிடமும் அதிகம் விசாரிகத் தேவையில்லை. முலைப்பால் தீர்த்தம் என்னும் இடத்தில் மட்டும் சிறு குழப்பம் இருக்கலாம். அங்கே வலது பக்கம் ஒரு வழி போகும் அதை விட்டு விட வேண்டும். மேலே செல்லும் போது சற்றே இடது புறம் ஒரு சிறிய கோவிலைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதன் பின் குழப்பமில்லை. முலைப்பால் தீர்த்ததில் யாரும் குளிக்கக் கூடாது என்று எழுதி வைத்ததாலோ என்னமோ ஏகப் பட்ட பண்டாரங்கள் குளிப்பதைக் காணலாம். அங்கே வன இலாகா ஊழியர் மற்றும் மக்கள் நடமாட்டமும் இருப்பதால் யாரிடமும் விசாரித்து அறிவதும் எளிதே.

HPIM2803
நாம் மேலே காண்பது அதன் முன் தோற்றம். கட்டுரையின் துவக்கத்தில் உள்ளது தியானம் செய்யும் குகையின் தோற்றம். இரண்டாவது கதவின் உள்ளே கிட்டத்தட்ட நூறு சதுர அடி உள்ள குகை. ஒரு விளக்கு வெளிச்சதில் தியானம் புரியும் போது மனம் குவிந்து மனம் அமைதிப்பட்டு நாமே தியானத்தில் லயிப்பதை உணர முடியும். ரமணர் தொடர்பான குகைகள் அனைத்திலும் நம்மை மிகவும் ஈர்ப்பது இக்குகையே.இறுதியாக நாம் காணப் போகும் குகையும் இருப்பதிலேயே அதிக உயரமானதும் ஸ்கந்தாஸ்ரமம். அதை அடுத்த பகுதியில் காண்போம்.

தொடர்புடைய பதிவுகள்:
ரமணரைத் தேடி -4 –  https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-4/

ரமணரைத் தேடி -3 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-3/

ரமணரைத் தேடி -2 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-2/

ரமணரைத் தேடி -1 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/12/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-1/

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
Image | This entry was posted in பயணக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ரமணரைத் தேடி – 5

  1. Pingback: ரமணரைத் தேடி – 6 | tamilwritersathyanandhan

  2. Pingback: ரமணரைத் தேடி – 7 | tamilwritersathyanandhan

  3. Pingback: ரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள் | tamilwritersathyanandhan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s