டெல்லி பலாத்காரம் – சில கசப்பான பாடங்கள்


The private chartered bus in which the paramedic student was gangraped on December 16

டெல்லி பலாத்காரம் – சில கசப்பான பாடங்கள்

ஓடும் பஸ்ஸில் மாணவியை பலாத்காரம் செய்து அவரையும் அவரது நண்பனையும் ஓடும் பஸ்ஸில் இருந்து வெளியே வீசிய பேருந்து நிழல் பின்னணி உள்ளது. டெல்லியில் குற்றவாளிகள் நடத்தி வந்த பேருந்து சேவை தெற்கு டெல்லியில் இரண்டு பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பேருந்தாகும். அந்தப் பேருந்து உரிமம் இல்லாமல் ஓட்டியதற்காக 6 முறை பறிமுதல் செய்யப் பட்டது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 6 முறை அபராதம் விதிக்கப் பட்ட பேருந்து. கடைசியாக ஜூலை 2012ல் அந்தப் பேருந்து பறிமுதல் செய்யப் பட்டது. அப்போது அவர்கள் 2200 ரூபாய் அபராதம் கட்டி மறுபடி இயக்கத் தொடங்கினர். டெல்லியில் காரில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு விவரம் தெரியும். ஓட்டுனர் மட்டும் முன்னிருக்கையில் இருப்பவர் ‘பெல்ட்’ ஐ இருக்கையுடன் பொருத்தி அணியாவிட்டாலே அபராதம் உண்டு. எப்படி  இந்தப் பேருந்து தொடர்ந்து குற்றம் நடக்கும் நாள் வரை உரிமம் இன்றி இயக்கப் பட்டது? இந்தப் பின்னணி உள்ள ஊழியரையும் வாகனங்களையும் வைத்திருக்கும் முதலாளிக்கு 9 பேருந்துகள் உள்ளன. உள்ளே இருப்பவரைக் காண முடியாத படி கண்ணாடிகளில் மறைப்புச் சுருள் ஒட்டியிருக்கும், திரை போட்டிருக்கும் தனியார் பேருந்துகள் விதிமீறலாகவே அப்படி இயங்கின. அதுவும் கண்காணிக்கப் படவில்லை. சம்பந்தப் பட்ட அனைத்து அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு எச்சரிக்கப் பட வேண்டும். அரசு இயந்திரம் ஊழலுக்கும் மற்றும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கும் உட்பட்டு மிகவும் எளிதாக நம்மைத் தப்பிக்க விடும் என்பது குற்றவாளிகளுக்கும் அந்தப் பேருந்து முதலாளிக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.

அந்தப் பெண்ணும் இளைஞனும் சாலையோரம் குற்றுயிரும் காயமுமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த போது பலரும் அவ்வழியே வாகனங்களில் சென்றிருந்தும் யாரும் அவர்களைக் காப்பாற்றும் உத்வேகத்துடன் மனிதநேயத்துடன் செயற்படவில்லை. பெருநகரங்களில் மனித நேய மாண்பு மரித்துப் போனதுவோ? இது அடுத்த கசப்பான உண்மை.

போராட்டக்காரர்களால் தாக்கப் பட்ட காவலர்களில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். அரசாங்கம் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளாக சிலரையேனும் அழைத்துப் பேசி எடுக்க இருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி ஊடகங்கள் வழி எடுத்துக் கூறி இருந்தால் இந்த நிலை இருந்திருக்காது. அரசாங்கம் திசை தெரியாது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பது இன்னொரு கசப்பான உண்மை.

கொல்கத்தாவை சேர்ந்த ஆண் பாராளுமன்ற உறுப்பினர் இன்னொருவர் பெண் பாராளுமன்ற உறுப்பினர் இருவருமே பெண்களை இழிவு படுத்தும் விதமாகப் பேதி இருப்பது பெண்களின் பாதுகாப்பு பற்றியும் அவர்களுக்கு தம் தேர்வின் படி இரவில் நடமாடும் உரிமை இருக்க வேண்டும் என்பது பற்றியும் எந்த ஆதரவான எண்ணங்களும் இல்லை என்பது அடுத்த கசப்பான உண்மை.

பலாத்காரப் படுத்தப் பட்ட பெண் இப்போது உயிரையும் இழந்து விட்டார். அவரது பலியில் தொடங்கியேனும் பல உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்கட்டும். (photo courtesy: India Today)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s