2012ல் அழியாத உலகம் 2013ல் விழித்தெழட்டும்


(image courtesy : 123rf.com)

2012ல் அழியாத உலகம் 2013ல் விழித்தெழட்டும்

நல்வாழ்த்துக்கள்… இனிய புத்தாண்டு என்று உண்மையான அன்புடன் பல நல்லிதயங்கள் புத்தாண்டு வாழ்த்துக் கூறும் போது அன்புடன் நன்றி கூறுகிறோம். அதே சமயம் நல்ல வசதி வாய்ப்புள்ளவருக்குள் சம அந்தஸ்து என்னும் அடிப்படையில் பெரிதும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதே மரபாக உள்ளது. நம்மிலும் நலிந்தோரையும் உள்ளடக்கிய (inclusive) வளர்ச்சியையும் நலமான வாழ்வையும் கனவு காணும் நல்மனம் கட்டுரையாசிரியருக்கும் அனைவருக்கும் 2013ல் அமையட்டும்.

2012ல் உலகம் அழியவில்லை. அந்தமூட நம்பிக்கையின் கண்டுபிடிப்பை நம்பியோர் விழித்தனரோ தெரியாதௌ. ஆனால் மனித உரிமைகள் அழிந்ததுவோ என்று மனம் நடுங்கும் வண்ணம் பெண்களும் சிசுக்களும் பெரும் வன்முறைக்கு ஆளானது கண்டு மனம் வருந்தினர் நல் மனம் கொண்டோர். ஆயிரக் கணக்கான ஆண்டு பின்னணி உள்ள மனித இனம் இந்த விலங்கு குண வன்முறைகளினின்று தன்னைக் காத்துக் கொள்ள வல்லதே. மறுபக்கம் ஊழலும் செயலின்மையும் அரசு அமைப்புக்களைச் சூறையாடுவதும் காணப் பட்டது. இதையும் எதிர்த்து தன்னை மேம்படுத்திக் கொள்ள இந்திய சமூதாயம் 2013ல் விழித்தெழட்டும்.

“நம் மூதாதையர்களிடமிருந்து உலகை நாம் பரம்பரைச் சொத்தாகப் பெறவில்லை. நம் குழந்தைகளிடமிருந்து இரவல் வாங்கியுள்ளோம்”  ( We have not inherited earth from our forefathers but borrowed it from our children) என்னும் சிந்தனையைத் தூண்டும் பொன்மொழியை நினைவு கூர்வோம். இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக அழிக்காது வரும் தலைமுறைக்கும் மிச்சம் வைக்கும் பசுமைச் சிந்தனை கொண்டு ஆக்கமாக செயல் படுவோரின் செய்தியை நாம் பரந்து எடுத்து செல்வோம். மனித் நேயம் மிக்க நல்ல சமுதாயச் சூழலை நம் குழந்தைகள் பெற நாம் சாதி, மத, இன பேதம் தாண்டி உழைப்போம்.

இருகோடுகளில் ஒரு கோடு பெரிதானால் மற்றது சிறிதாகும். கலை, இலக்கியம், சமூக நலம் பேணும் சிந்தனை என்னும் தடம் நீண்டால் மட்டுமே மொழிவெறி, மத வெறி , இனவெறி , பாலியல் பலாத்காரம் செய்யுமளவு குரூரமான சிந்தனை என்னும் தடம் சிறுத்துப் போய் இருந்த இடம் தெரியாமலும் போகும். ஊடகங்கள் ஆக்கபூர்வமான  சமூக ஆர்வலரின் பணிகள், பசுமையான உலகம், மனித நேயமுள்ள உலகம் என்னும் வழியில் நாம் அடையும் முன்னேற்றம் இவற்றை மையப்படுத்தி நம்பிக்கையை வளர்க்கட்டும். வதந்திகள், வன்முறைகள், நிழலுலக செயல்களுக்குத் தரும் இடத்தை  சமூகம் உருப்பட உழைப்பவருக்குக் கொடுக்கட்டும் ஊடகங்கள். 2013 மற்றும் வரும் ஆண்டுகள் எல்லாமே மனித நேயம் உயர்ந்து குரூரம் தேய்ந்து அழிந்து போகும் நல்ல ஆண்டுகளாக அமைய பிரார்த்தனை செய்வோம். வாழ்வோம். வாழ விடுவோம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s