கமலஹாசன் கையில் இருமுனைக் கத்தி


29.1.13 அன்று சேர்க்கப் படும் ஒரு விளக்கம்:

கீழே உள்ள கட்டுரைக்கு கடுமையான கண்டனங்கள் வந்துள்ளன. அதற்கான விளக்கம் இது:

கமலஹாஸன் வணிக ரீதியாக இந்திய பிரிவினை வரலாறை, ஒரு குறிப்பிட்ட சாதியின் சில பண்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டதற்கு, தேவர் மகன் என்னும் படத்தில் என்ன குறை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கலைப் படங்களோடோ அல்லது நல்ல முயற்சி என்று கூறப்படும் படங்களோடோ ஒப்பிடுமளவு கூட தேவர் மகன் வராது. வேறு வழியில்லாமல் கிராமத்தில் வெவ்வேறு பிரிவினர் இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைந்த அளவு பதிவு செய்திருக்கும் ‘முதல் மரியாதை’ என்னும் படத்தை குறிப்பிடலாம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாரதி ராஜா எந்த சாதியையும் தாங்கிப் பிடிக்கவில்லை என்பது தெரிய வரும். அடுத்து “ஹேராம்” என்னும் படத்துக்கு வருவோம். அது வணிகப் படம் தான். இருந்தாலும் விருதுகளை இலக்காக வைத்து ஒரு சிறு முயற்சி இருந்தது (ஒரு கலைப் படம் போலக் காட்டும் முயற்சி). அந்தப் படம் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் வந்த ‘கரம் ஹவா‘ என்னும் படத்தைப் பாருங்கள். ஹேராம் எந்த அளவு போலியானது என்று புரியும். பிறகு கமலஹாசன் பாலச்சந்தர் மணிரத்னம் போன்றோர் செய்வது என்ன என்பது தெரிய வரும். வணிகத்துக்காக வரலாறை (மத உணர்வு உச்சத்தில் இருந்த வரலாறை)  நுனிப்புல் மேயலாம். சாதி உணர்வுகளைப் பயன்படுத்தலாம். அரசியல் லாபத்துக்காக ஒரு வணிகப் படத்தை முடக்கக் கூடாது. இதுதானே இந்தக் கட்டுரையை எதிர்ப்பவர் சொல்ல வருவது? (கீழே உள்ள கட்டுரை முதலில் வெளியாகி கண்டனத்துக்கு உள்ளானது)

கமலஹாசன் கையில் இருமுனைக் கத்தி

கமலஹாசனும் மற்ற சினிமாக்காரர்களும் ஒரு இருமுனை கொண்ட கத்தியை மிகத்திறமையாகப் பயன்படுத்தி வந்தனர். இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். பண்பாட்டுக் குறியீடுகளை, மத நம்பிக்கைகளை வியாபார ரீதியாகப் பயன்படுத்தும் உள்நோக்கம் என்பது ஒரு முனை. மறுமுனை அதற்கு கலை என்னும் பெயர் சூட்ட குறைந்த பட்ச முயற்சி செய்வது. இந்தக்கத்தியை பெரிய அருவாளாக  தேவர் மகனிலும், ஒரு துப்பாக்கியாக ஹேராமிலும் அவர் உயர்த்தினார். வர்த்தக ரீதியாக இந்தியப் பிரிவினை வரலாறு பயன்படுத்தப் பட்டது ஹேராமில். அதாவது கோட்ஸேவுக்கு காந்தியைக் கொல்லும் அளவு ஏன் கோபம் வந்தது என்று கதாநாயகன் வழியாக விலாவாரியாக சொல்லப் பட்டு இறுதியில் தமது முஸ்லிம் நண்பர் மூலமாக மனமாற்றம் ஏற்படுகிறது கதாநாயகனுக்கு. படம் வெளிவந்ததும் பல கண்டனங்களில் கோட்ஸே தரப்பு மிகவும் நியாயப் படுத்தப்பட்டதாக எதிர்ப்பு எழுந்தது. தேவர் மகன் படம் அந்த சமூகத்தின் நம்பிக்கைகள சம்பிரதாயங்கள் மற்றும் வீரம் இவை பயன்படுத்தப்பட்டன. மகாபாரதத்தின் மறு சுழற்சியே தேவர் மகன். தென்மாவட்டங்களின் உண்மை நிலையை சித்தரிக்காமல் தேவர் மகனில் ஒரு தலைப் பட்சமான கதை இருந்தது என்பது ஒரு நியாயமான கண்டனம். பல தமிழ்ப் படங்களில் கீதை சொல்லும் பாதையில் கதாநாயகன் எதிரிகளை அழிப்பார். முருகா வெற்றி வேல் வீர வேல் என்று  ஒருவர் வெட்டித் தள்ளுவார். வன்முறைக்கு நியாயம் ஏற்படுத்த சாதி மத உணர்வுகள் பயன்படுத்தப் பட்ட தருணங்கள் தமிழ்சினிமாவில் மிக மிக அதிகம். மற்ற மொழிக்காரர்களும் சளைத்தவர்களல்ல.

அந்த இருமுனைக் கத்தி கொஞ்சம் கமலஹாஸன் கையையே கீறி விட்டது.

கலாசார பயங்கரவாதம் என்று கமலஹாசன் சாடும் இன்றைய நிகழ்வுகள் அவரது விஸ்வரூபம் படம் வெளிவந்த பிறகே தெளிவாகும்.

மதத்தை சினிமாக்காரர்கள் (கமலஹாஸன் உட்பட) வர்த்தக வெற்றிக்குப் பயன்படுத்தினர். மதக் குழுக்கள் சினிமாவைத் தம் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துகின்றனர். வருத்தப்பட வேண்டியது சினிமாவுக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்களே

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கமலஹாசன் கையில் இருமுனைக் கத்தி

  1. Jahit says:

    அய்யா வணக்கம்,
    கடந்த ஒரு வாரமாக தெரிந்தோ தெரியாமலோ விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமல் பட விவகாரம் தேவையான ஒன்றா என்றால்? இல்லை என்று சொல்லும் ஒரு கூட்டம், தேவைதான் என்று கூறும் மற்றொரு கூட்டம்…..

    தமிழகத்தில் தலையெழுத்து வருங்காலத் தலைவர்களை கோடம்பாக்கத்திலிருந்து தேடும் அவலம் என்று மாறுகிறதோ அன்றுதான் தமிழகத்தின் தலையெழுத்தும் மாறும்.

    முஸ்லிம் சகோதரர்கள் என்னை காயப்படுத்தி விட்டனர் என்று கமல் கூறுகிறார்
    சினிமா நாட்டின் புண்ணியச்சித்திரமா? கமல் என்றும் தனிமனிதன் தன் கஜானாவை நிரப்பிக் கொள்ள எடுத்திருக்கும் வியாபார யுக்திதான் இது. அதற்கான கதை களம் நிறையவே இருக்க, மதங்கள் சார்ந்த சம்பவங்களை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் என்ன வேண்டிக் கிடக்கிறது.

    சில சினிமாக்களிலும் சரி, பொது மேடைகளிலும் சரி நியாயமாக பேசி அனியாயமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறார் அவர்.

    கமல் அவர்களுக்கு,
    உனக்கு பின்னால் உள்ள கூட்டத்தை பார், சினிமாப் பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம் தான் தெரியும், இவர்கள் மேதாவிகள் அல்ல (நீ அதி மேதாவி) என்று தனது சினிமாவில் வசனமாக தெரிவித்தவர்தான் அவர்.

    300க்கும் மேற்பட்ட ஆதரங்களை தன் கை வசம் வைத்துக் கொண்டு தான் இந்த படத்திற்கு திரைக்கதை எதியுள்ளார் கமல், அப்படி என்றால் அவர் சொல்லுவது போல இது சினிமா அல்ல, மக்களுக்குத் தரும் ஆவணப்படமாக எடுத்துக் கொள்ளலாமா?

    சினிமாக்காரர்களுக்கு தேவையில்லாமல் தரும் விளம்பரங்களும், விமர்சனங்களும்…… பாவம் தமிழர்கள்……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s