மாநில அரசின் தபால் பட்டுவாடா – கசப்பான பின்னணி


Sect fleets.jpg

மாநில அரசின் தபால் பட்டுவாடா – கசப்பான பின்னணி

டீஸல் விலை பெரிய கொள்முதல் வாடிக்கையாளர்களுக்கு உயர் விலை என்று இரட்டை விலையை மத்திய அரசு அறிவித்த போது தான் ஒன்று வெளிப்படையானது. இதனால் பாதிக்கப் படும் மாநில போக்குவரத்துக்கழகங்களின் நட்டம் அதிகரிக்கும் என்பதைப் பற்றி மத்திய அரசு எந்த அக்கறையும் கொள்ளவில்லை என்பதே அது. மக்கள் விரும்புவது அரசு மூலம் ஏதேனும் சலுகையே. மத்திய அரசு தருகிறதா மாநில அரசு தருகிறதா என்பது பற்றி அவர்கள் கவலை கொள்ள அவசியமில்லை. இந்த இரண்டு அரசுகளும் எதிர் எதிர் திசையில் செல்வதே பல துறைகளில் நிதர்சனம்.

தபால் விஷயத்துக்கு வருவோம். மாநில அரசு (தமிழ் நாடு) நட்டத்தில் இருக்கும் தனது போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பைத் தபால் பட்டுவாடாவுக்குப் பயன் படுத்த முடிவெடுத்துத் தொடங்கியுள்ளது. இதனால் தனியாரின் “ஆம்னி பஸ்” நிறுவனங்கள், மற்றும் மத்திய அரசின் தபால் துறை இருவருமே தமது வருவாயை ஓரளவு இழக்க நேரிடும். தனியாரை விட்டு விடுவோம். மத்திய அரசின் தபால் துறை இப்போது நட்டத்தில் தான் இயங்குகிறது. ஆனால் கிராமப்புறங்களில் தபால் துறை மட்டுமே வங்கி, தபால், காப்பீடு எல்லாம் தர வல்ல ஒரே கற்பக விருட்சமாய் உள்ளது. எந்த தனியார் ‘கூரியர்’ நிறுவனம் சென்றாலும் நாம் ஒன்றை கவனிக்கலாம். அதிக பட்சம் சிறு நகரின் உள்ள முகவரி மட்டுமே அவர்கள் சேவைக்குள் வரும். கிராமங்கள் இல்லை. இதன் மறுபக்கமாக உலக அளவில் நாம் அனுப்பும் பார்சல்கள் தபால் துறை வழியே துரிதமாக, குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பாகப் போய்ச் சேருகின்றன. வெளிநாட்டில் வாரிசுகள் இருக்கும் பெற்றோருக்கு இது அத்துப்படி.

வருவாயோ வர்த்தக நிறுவனங்கள் தமக்குள் அனுப்பும் பார்சல், தபால் இவற்றில் தான் உள்ளது. இதை தனியார் கூரியர், ஆம்னி பஸ்கள் தட்டிச் செல்ல தபால் துறையோ ஆள் பற்றாக்குறையால் தனது சேவையையும் விஸ்தரிக்க இயலாமல், கிராம சேவையையும் கைவிடமால் தத்தளிக்கிறது.

தமிழ் நாடு அரசு தனது போக்குவரத்துத்துறையின் நட்டத்தை ஓரளவேனும் குறைக்க தபால், பார்சல் சேவையைத் துவக்கி உள்ளது.

ஆள் பற்றாக்குறையில் தவிக்கும் தபால் துறை மாநில அரசின் போக்குவரத்துத் துறையை ஒரு வர்த்தகப் பங்காளி ஆக்கி (Business partner) இருவருமே பலன் பெறும் பரஸ்பர வெற்றிச் சூழலை (Win Win situation) உருவாக்கி இருக்க இயலும். சிறு தபால் நிலையங்களைத் தனியார் நடத்தும் அளவு ஆளும், பணமும் இல்லாமல் தவிக்கிற தபால் துறை ஏன் இதைச் செய்யக் கூடாது?  எந்த “டெண்டர்” குழப்பம் அல்லது சலுகை காட்டிய குற்றச் சாட்டு வரவே வாய்ப்பில்லை. இரண்டுமே அரசு நிறுவனங்கள். இருவருமே குக்கிராமம் வரை செல்லும் கட்டமைப்பு உள்ள தனித்துவம் பெற்றவர். ஆனால் இரு துருவங்களாக ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு மோதுகின்றனர்.

மக்கள் நலப் பணிகள், உள் நாட்டுப் பாதுகாப்பு இவற்றிலும் இதே போக்கு நீடிப்பதால் நட்டம் மக்களுக்கே.

(image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s