காலச்சுவடு மார்ச் 2013- ஊடகம் + ஆவணம் – 2


காலச்சுவடு மார்ச் 2013- ஊடகம் + ஆவணம் – 2

சிறு பத்திரிக்கைகள் இலக்கியம் மட்டுமே பேசிக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. பல சமகால வரலாற்றுப் பதிவுகளை ஆவணப் படுத்தும் பணியையும் ஒரு விவாத மேடையை உருவாக்கும் முனைப்பையும் காலச்சுவடு ஒரு முன்னோடியாக வெளிப்படுத்தியது. காலச்சுவடின் சாதனைகளில் இவை முக்கியமானவை. அந்த விதத்தில் இரண்டு கட்டுரைகள் ஏறத்தாழத் தொடர்புடையவை வெளியாகி உள்ளன.

முதல் கட்டுரை பி.ஏ.கிருஷ்ணனின் “பெரியார்: ஒரு பார்வை” என்னும் கட்டுரை. அவர் ‘சங்கம் 4’ மற்றும் தமிழ் மையம் இணைந்து நடத்திய விழாவில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழ் ஆக்கம் இது. சென்னையில் 2012 ஜனவரி 8ல் நிகழ்த்திய உரையை இப்போது பதிப்பது ஆவணப்படுத்தும் மற்றும் விவாதங்களைத் துவக்கும் விதமானதாகும். மிகவும் நீண்ட இந்தக் கட்டுரை பெரியாரின் பல்வேறு ஆளுமைப் பண்புகளையும் அவரது செயல் முறைகளையும் பல விதமாக அலசுகிறது. ஜின்னாவுடனும், பிரிட்டிஷாருடனும் அவர் தனி திராவிட நாடு என்னும் முயற்சியில் பேச்சு வார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. பெரியார் அரசியல் வாழ்க்கையை இவ்வாறு பிரித்துக் காட்டுகிறார் கிருஷ்ணன்:
1920-27 : காங்கிரஸ், 27-34: சுயமரியாதை இயக்கம், 34-44- நீதிக் கட்சி, 49- திராவிடர் கட்சிப் பிளவு, 52- கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவு, 54-காமராஜருக்கு ஆதரவு, 67க்குப்பின் – திமுகவுக்கு ஆதரவு. எல்லாக் காலத்திலும் கடவுள் மறுப்பையும் பிராமண எதிர்ப்பையும் அவர் தொடர்ந்து வந்தார். இட ஒதுக்கீட்டுக்குத் தமிழ் நாடு முன்னோடியாக அமைய பெரியார் முக்கியக் காரணம். கிருஷ்ணன் பெரியாரின் பாதையைப் பற்றியும் வழிமுறைகளைப் பற்றியும் விவரிக்கும் கருத்துக்கள் பெரியார் பற்றிய ஒரு தெளிவான பிம்பம் சாத்தியமில்லை என்பது போல அமைந்துள்ளது. மனு தர்மத்தில் பெரியார் காட்டிய மேற்கோள் தவறான மொழிபெயர்ப்பு என்றும், ஜின்னா அவருக்கு எழுதிய கடிதத்தின் முழுப்பகுதிகளை வெளியிடாமல் தனக்குச் சாதகமான பகுதிகளை மட்டும் வெளியிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பழ அதியமானின்  “சேரன்மாதேவி குருகுலம்” கட்டுரை ஏன் முந்தைய கட்டுரையுடன் தொடர்புடையது? பெரியார் வ.வே.சு ஐயர் நடத்திய குருகுலத்தில் இருந்த பாகுபாட்டைக் கண்டு இனி பிராமணர் பேணிவரும் வருணாசிரம தர்மத்தைத் தகர்த்தெரிவது என்ற முடிவுக்கு வந்தார். கம்யூனிசத் தலைவர் ஜீவாவும் இந்த குருகுலத்தை விமர்சித்தவர்.  “சேரன்மாதேவி குருகுலம்” என்பது நூல் வடிவத்தில் வந்துள்ளது. அதன் சில பகுதிகள் காலச்சுவடு இதழில் வந்துள்ளன. இரண்டு விஷயங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. ஒன்று வவேசு ஐயர் காந்தியடிகளின் வழிமுறைகளில் சமத்துவத்தை எடுத்துக்கொள்ளாமல் விட்டார் என்பது. இரண்டாவது இதைக் கண்டவுடன் அதை நிறுத்த வழியில்லாமல் கமிட்டி எல்லாம் அமைத்து அறிக்கை எல்லாம் தயார் செய்து அந்தக் காலப் பெரிய தலைவர்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது. சமூக நீதி என்பது இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்வது என்னும் நீர்த்துப் போன பிம்பம் சமீபத்திய விபரீதம். இத்தகைய ஆவணங்கள் சமூக நீதி என்படு வருணாசிரம தர்மத்தில் ஊரிய பல தலைமுறைகளுக்கு தம் மனப்பாங்கை இப்போதேனும் மாற்றிக் கொள்ள வழிகாட்டும்.

புனைவிலக்கியத்துக்கு குறைந்த இடம் தான். வினயசந்திரனின் “நதியல்லாமலாகிறான்” என்னும் கவிதையில் நண்பனின் மரணம் ஏற்படுத்தும் ரணம் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. செந்தியின் ஐந்து கவிதைகளில் ஆழமில்லை. இருந்தாலும் “மயிலைப் பார்க்கும் போதெல்லாம் அது ராணி திலக்கின் மயிலாகவே தெரிகிறது” என்னும் பதிவில் சமகால படைப்பாளியைக் குறிப்பது நெகிழ்ச்சி தருகிறது. தமிழ் புனைவுகளில் ஒரு வித்தியாசமான பதிவு இது. இதற்கு முன் இவ்வாறான சகபடைப்பாளி குறித்த குறிப்புகள் வந்திருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு தனிப் பரிமாணம் உண்டு.

அய்யாவின் மிதிவண்டி என்னும் சுகுமாரனின் சிறுகதை காதல் திருமணங்கள் கூட ஜாதி உணர்வை வேரோடு மனதில் இருந்து நீக்கி விடுவதில்லை என்று நிறுவுகிறது. தனது கணவனை ஜாதி அடிப்படையில் நடுத்தர வயதில் மனைவி வைய கணவன் மனமுடைகிறார். ஆசிரியரான அவர் இருகரை வேட்டி, மேல் துண்டு அணிபவர். அதற்கு பள்ளியில் எதிர்ப்பு- அது சிறுபான்மையினர் பள்ளி என ஒரு அரசியல் வரலாறும் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது.

மொத்தத்தில் விஸ்வரூபம் விழுங்கிய பக்கங்களை பிற பதிவுகள் ஈடுகட்டி விட்டன. நல்ல வாசிப்புக்காக காலச்சுவடுக்கு நன்றி

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s