ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்


ஏழ்மையை, மாற்றுத் திறனை எதிர்கொண்டு ஜெயித்த சுகில்

“கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிதே இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். ஏனெனில் இளமை கனவுகள், சாதிக்கும் லட்சியங்கள் முளைவிடும் காலம். அப்போது வறுமை ஒருவரை மனதளவில் முடக்கிப் போடுவதால் அதைத் தாண்டி வர இயலாமல் நின்று விடுவோரே அதிகம்.

வறுமையான குடும்பப் பின்னணி மற்றும் ஒரு கையை மட்டுமே இயக்கி வாழ வேண்டிய கட்டாயம். இவை இரண்டையும் எதிர்கொண்டு போராடி வென்று வரும் மாற்றுத் திறனாளி சுகில் ஈரோடில் பாலி டெக்னிக் படிப்புடன் ‘ஷட்டில் பாட்மிண்டன்’ என்னும் விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டார். விளையாட்டில் இவர் காட்டிய திறமையையும் ஆர்வத்தையும் கண்டு இவரது ஏழ்மைப் பின்னணியைக் கருத்தில் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளித்தார் செந்தில் வேலன். 2011ல் தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, 2012 தேசிய அளவில் நான்காம் இடம், 2013ல் ஒரிசாவின் நால்கோட் கிளப் நடத்திய போட்டியில் அகில இந்திய அளவில் ஒற்றையர் பிரிவில் முதல் இடம். இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2020ல் பாரா ஒலிம்பிக்கில் இடம் பெறும் லட்சியத்துடன் முனைந்து உழைக்கிறார்.

வெற்றிக்குப் பெரிய எதிரி மனத்தடைகளும், தோல்விகளில் துவண்டு வெளியேறும் பலவீன மனப்பாங்கும். இவற்றைக் கடந்து வருவது எளிய செயல் அல்ல. 22 வயதே ஆகும் இந்த இளைஞரின் மன உறுதியும் லட்சிய வெறியும் நல்ல உடல் அமைப்பு இருந்தும் இலக்கில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகும். இந்த இளைஞர் போன்ற தமிழர்கள், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர்கள். இவருக்குப் பக்க பலமாக இருக்கும் பயிற்சியாளர் செந்தில் வேலனையும், இதை அரைப்பக்க செய்தியாக வெளியிட்ட தினமணியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். (செய்தி மற்றும் படம் நன்றி தினமணி)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s