இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் 109+


get out of jail free photo: My father-in-law needs a get out of jail free card DSC01025.jpg

இத்தாலியில் உள்ள இந்தியக் கைதிகள் >109

(கட்டுரை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இத்தாலி அனுப்ப மாட்டோம் என்னும் நிலைப்பாடு எடுத்த போது எழுதப்பட்டது)

செய்திகளின் படி இத்தாலியில் 109க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். வெளியுறவுத்துறை ராஜ்ய சபாவுக்கு 2010ல் தெரிவித்தபடி இத்தாலி குற்றங்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளது. இவர்களுக்கு இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. மறுபக்கம் தமது நாட்டுக்கு இரு கொலைக் குற்றவாளிகள் வந்த பின் அவர்களை நீதிமன்ற விசாரணைக்காக அனுப்ப இத்தாலி மறுத்து விட்டது. இதை ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்கிறது.

மனித நேய மீறலின் ஆகச்சிறந்த உதாரணமாக உள்ள இலங்கை என்ன தைரியமாக உலக நாடுகளை எதிர் கொள்கிறது! 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர் இங்கே, லட்சக்கணக்கான படித்த இந்தியர் வெளி நாட்டில் இப்படி ஒரு பெரிய நாடு, ஜனநாயக நாடு, உலக நாடுகள் (குறைந்த பட்சம் வியாபார நோக்கிலாவது) மதிக்கும் நாடு நம்மால் ஏன் நம் மக்களுக்காக வெளிநாடுகளை எதிர்த்து உலக அளவான மன்றங்களில் போராட இயலவில்லை? ஒவ்வொரு ஏவுகணை அல்லது செயற்கைக் கோள் விண்ணில் பாய்ந்த உடன் நாம் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம். நம்மால் ஏன் நமது மக்களின் நியாயமான உரிமைகளுக்காக வெளி மண்ணில் அரசு பூர்வமாகக் கூடக் குரல் கொடுக்க முடியவில்லை?

அரசுக்கே இத்தாலியில் வாடும் கைதிகள் விவரம் தெரியவில்லை என்றால் அவர்களுக்கு சட்ட உதவியோ நிதி உதவியோ செய்ய அங்கே உள்ள இந்தியரோ இங்கே உள்ள உறவினரோ விரும்பினால் கூட முடியாது.

நான் ஒரு வலிமையான நாடு. எங்கள் மக்களை நான் என்னாளும் கைவிட மாட்டேன். உங்கள் நடவடிக்கைகளை எங்களிடம் நீங்கள் மறைத்து எங்கள் மக்களை என்னாளும் சிறையில் அடைக்க முடியாது என்று ஏன் நாம் எழுந்து நிற்கவில்லை? நம் வெளியுறவு நடைமுறைகளை வலிமையானதாக, நிச்சயமாகப் பலன் தரும் வெற்றிகரமானதாக உடனடியாக சரி செய்தாக வேண்டும்.

நமக்கு நம் மண்ணின் மீது நம் தேசத்தின் மீது பற்று வேண்டும். அரசுக்கும் நம்மைக் காப்பற்றும் கடப்பாடு வேண்டும். (செய்தி- நன்றி: TOI) (Image Courtesy:http://media.photobucket.com)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s