ஒபாமாவின் உதவி வேண்டாம் என்று நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் ஆனந்த் குமார்
வாழ்க்கையுடன் போராடி, தலை நிமிர்ந்து வறிய மாணவருக்கு உதவும் ஆலமரமாக உயர்ந்து நிற்கிறார் பிகாரின் ஆனந்த் குமார்.
பப்படம் விற்கும் குடும்பத்தின் வறுமைப் பின்னணியில் ஒரு மகன் கேம்பிர்ட்ஜில் படிக்க ஆசைப் படலாமா? கூடாது. அது தான் பீகாரில் பாட்னாவைச் சேர்ந்த ஆனந்த் குமாருக்கு நிகழ்ந்தது. கணித மேதை ராமானுஜத்தைத் தன் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டார் ஆனந்த். பட்டப் படிப்பு முடியும் போது கணிதத்தில் பல ஆராய்ச்சிகளைச் செய்து அந்த ஆராய்ச்சியின் நுட்ப விவரங்கள் in Mathematical Spectrum and The Mathematical Gazette ஆகிய உலக அளவு பிரபலமான விஞ்ஞான இதழ்களில் வெளிவந்தன. அவற்றை கேம்பிரிட்ஜுக்கு அனுப்பினார். அவர்கள மேற்படிப்புக்கு அவரை சேர்த்துக் கொண்டனர். ஆனால் தமது படிப்புக்கு உதவி செய்யும் யாரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. பல இடங்களில் முயன்றும் அவரால் உதவிக் கரத்தைக் காண இயலவில்லை.
இந்த மேதை தந்தையின் எதிர்பாராத மரணத்துக்குப் பின் தம்பியைப் படிக்க வைக்க பப்படம் விற்கும் தொழிலைப் பாட்னாவில் செய்து வந்தார். பகல் முழுதும் கணிதத்துக்காகச் செலவிடுவார். இரவில் பப்படம் விற்று வருவார். அவரது தம்பி பனாரஸ் ஹிந்து யுனிர்வசிடி, வாரணாசியில் படித்து வந்ததால் அவருடன் வாரக் கடைசி இரண்டு நாட்களில் தங்கி அங்கேயிருந்த நூலக;த்தில் கணிதப் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுத்துத் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
Ramanujam School of Mathematics (RSM) என்னும் பெயரில் ஒரு சிறிய அறையை 500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்களை போதிக்க ஆரம்பித்தார். இரண்டு மாணவருடன் தொடங்கிய அந்த நிறுவனம் மூன்றே ஆண்டுகளில் 500 மாணவர்கள் என்னும் இலக்கையும் தாண்டியது. 2003ல் IIT-JEE தேர்வில் சாதிக்க விரும்பிய ஒரு ஏழை மாணவருக்கு இலவசமாக படிப்பு சொல்லிக் கொடுத்த போதுதான் இது போலப் பல ஏழை மாணவர்கள் பயன் பெற Super 30 program என்னும் நலத் திட்டதை உருவாக்கினார். 2002 முதல் 2011 என்னும் பத்தாண்டு காலத்தில் 270 ஏழை மாணவருக்குப் பயிற்சி கொடுத்தார். அவர்களில் 236 மாணவர் ஐஐடியில் நுழைந்தனர். அனைவரும் ஆனந்த் குடும்பம் அளவு ஏழைகள். சிறுவியாபாரிகள், ஆட்டோ ஓட்டுபவர்கள் அல்லது வீட்டு வேலை செய்வோரின் பிள்ளைகள்.
சூப்பர் 30 என்னும் இந்த முயற்சி உலக அளவில் அறியப்பட்டது. TIME magazineல் இதைப் பற்றி வாசித்த பிறகு அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா நிதி உதவி செய்ய முன்வந்தார். இந்தியாவிலும் உலக அளவிலும் பல தனி நபர், தனியார் நிறுவனம், அரசுகள் அவருக்கு நிதி உதவி செய்ய முன் வந்தார்கள். ஆனால் இவை எதையும் ஆனந்த் ஏற்கவில்லை. and ex-Miss Japan Norika Fujiwara ஒரு குறும்படத்தை இவரது தொண்டு பற்றித் தயாரித்து வெளியிட்டார். BBC அவருக்கு கௌரவம் தரும் விதமாக அவரைப் பற்றிய ஒரு தொடரை ஒளிபரப்பியது.
Indian Institute of Management Ahmedabad மாணவரிடையே தமது பணி குறித்து உரை நிகழ்த்தினார் ஆனந்த். Best of Asia 2010, பட்டியலில் ஆனந்தைச் சேர்த்து டைம் பத்திரிக்கை அவரைப் பாராட்டியது. அவர் பெற்ற விருதுகளில் S. Ramanujan Award for 2010 by the Institute for Research and Documentation in Social Sciences (IRDS) in July 2010 குறிப்பிடத்தக்கது.
தன் அறிவு, ஆற்றல் இவை நம் நாட்டு ஏழை எளியவரைப் போய்ச் சேர வேண்டும் என்னும் அவரது லட்சியம். தாம் ஏழ்மையில் வாடியதை மறக்காமல் பிற ஏழைப் பிள்ளைகளைத் தம் சொந்தம் போல முன்னேற உதவிக்கரம் நீட்டும் அவரது தொண்டுள்ளம், வாழ்க்கையில் போராடி வென்ற அவரது மனத்திண்மை இவற்றை நாம் இந்தியாவின் பெருமைக்குரிய வரலாற்றின் ஏடுகளில் கண்டிப்பாக சேர்க்கலாம். இவரை அறிமுகம் செய்த Face Book நண்பர்களுக்கு நன்றி.