ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார்


Chinua Achebe - Buffalo 25Sep2008 crop.jpg

ஆப்பிரிக்க இலக்கியத்தின் தாத்தா Chinua Achebe காலமானார்

நைஜீரியாவின் இக்போ பழங்குடியினரின் வழக்கில் வாய்மொழியாகவே பாரம்பரியமாக இருந்து வந்த கதைகள், மற்றும் சொலவடைகளைத் தமது கற்பனையின் ஊடாகப் பின்னி நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர் சினுவா அக்கெபே. அவர் எழுதிய முதல் நாவல் “Things Fall Apart”. இது இக்போ இன மக்கள் பிரிட்டிஷாருடன் போராடியதை விவரிக்கும் நாவல். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. காலனியாதிக்கத்தை ஆப்பிர்க்கப் பழங்குடியினரின் கண்ணோட்டத்தில் இலக்கியமாகப் பதிவு செய்த முதல் ஆங்கில நாவல் இது. நைஜீரியாவில் அடுத்து அடுத்து ராணுவப் புரட்சியில் ஆட்சி ஆயுதமேந்தியவர் வசம் சென்ற போது அவற்றின் கசப்பைத் தம் படைப்புக்களில் பதிவு செய்தார். 1987ல் வெளியான Anthills of the Savannah, நாவல் நைஜீரிய மக்களின் வலியை வெளிப்படுத்தும் நாவலாகும். ஆரம்ப காலத்தில் அதாவது 1960களில் நைஜீரிய வானொலிப் பொருப்பாளராக மேற்குக்கும் ஆப்பிரிக்காவுக்கும் பாலமாகத் திகழ்ந்தார். 1990ல் ஒரு கார் விபத்தில் மோசமாக பாதிக்கப் படும் வரை அவர் இலக்கியப் பணி தீவிரமாயிருந்தது. நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் எனப் பல இலக்கிய வடிவங்களில் அவரது பதிவுகள் இருந்தன. நெல்சன் மண்டேலா இவரது இலக்கியங்களை வாசித்து “சிறையின் சுவர்களை அவை இல்லாமற் செய்தன” என்று பாராட்டினார். உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு கௌரவர முனைவர் பட்டமளித்துப் பாராட்டின. அவர் பெற்ற பல விருதுகளில் The Man Booker International Prize 2007 குறிப்பிடத்தக்கது. நிறவெறியை, இன வெறியை மிகவும் கண்டித்தவர் அவர் என்பதாலேயே அவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை என்ற கருத்தும் உண்டு. இறுதி நாட்களில் அவர் அமெரிக்காவின் Brown Universityல் பேராசிரியராகப் பணியாற்றினார். 22.3.2013 அன்று காலமான போது அவருக்கு வயது 82. வரலாற்றின் முக்கியமான திருப்பு முனைகளை எழுத்து நிர்ணயிக்கிறது. கருப்பர்களின், பழன்ங்குடியினரின் வரலாற்றில் அத்தகைய எழுத்து அவருடையது. அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். (Image Courtesy: Wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s