SLUM DOG MILLIONAIRE திரைப்படக் கருவுக்குக் காரணமானவர்


SLUM DOG MILLIONAIRE திரைப்படக் கருவுக்குக் காரணமானவர்

Hole in the Wall‘ என்னும் பரிசோதனையின் மூலம் ஆசிரியர்கள் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் சேரிக் குழந்தைகள் கணிப்பொறியை இயக்க இயலும் என்பது மட்டுமல்ல, அவர்களால் ஒருவருக்கு ஒருவர் கணிப்பொறி இயக்கதை சொல்லித் தரவும் இயலும் என்று நிரூபித்தவர் சுகதா மித்ரா. இங்கிலாந்தின் நியூ காசில் யுனிவர்சிடியில் பேராசிரியராகப் பணிபுரிபவர். NIITயின் தலைமை விஞ்ஞானியான இவர் இந்தியாவில் DTP என்னும் அச்சு முறையின் முன்னோடி . 90களிலேயே LAN வழியாக பலரும் விவரங்களை பகிரும் முறையை இந்தியாவில் அறிமுகப் படுத்தி Yellow Pages என்னும் விளம்பர நிறுவன யுக்திகளுக்கு வழி கோலியவரும் இவரே.
‘Hole in the Wall’ என்னும் பரிசோதனை இவரால் ஜனவரி 26 1999ல் நிகழ்த்தப் பட்டது. டெல்லி NIIT வளாகத்தை ஒட்டி ஒரு சேரிப் பகுதி இருந்தது. கணிப்பொறி ஒன்றை நிறுவனத்தின் சுவர்கள் வழியே ஓட்டையிட்டு, இணைப்புக் கொடுத்து, வெளிப்புறம் யாரும் புழங்கும் வண்ணம் வைத்து அதை சிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் பார்ப்பதையும், பின்னர் தானே முயன்று, தவறி மீண்டும் முயன்று, கணிப்பொறியை எளிதாக இயக்குவதையும் அவர் கண்டார். ஆசிரியர்கள் இடையூறு செய்யாமல் குழ்ந்தைகள் தாமே கற்கும் முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் இந்தப் பரிசோதனையின் அடிப்படையில் பரிந்துரைத்தார். அது கல்வித் தளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்று அவருக்குப் புகழைத் தந்தது. SLUM DOG MILLIONAIRE படம் Q&A என்னும் நாவலின் திரை வடிவம். அந்த நாவலை எழுதிய விகாஸ் ஸ்வரூப் என்பவருக்கு சுகதா மித்ராவின் பரிசோதனையில் சேரிக் குழந்தைகளில் திறன் வெளிப்பட்டது அந்த நாவலை எழுதத் தூண்டு கோலாக அமைந்தது.

ஆசிரியர்கள் தேவையில்லாத ஒரு கல்வி கற்கும் முறையை நாம் மாணவருக்கு வழங்கத் தவறி விட்டோம் என்பது மித்ராவின் கருத்து. நாம் 200 ஆண்டு பழமையான பிரிட்டிஷ் கல்வி முறையை இன்னும் செயற்படுத்தி வெறும் குமாஸ்தாக்களையே உற்பத்தி செய்து வருகிறோம் என் கிறார் மித்ரா. இப்போது தேவையெல்லாம் சில கேள்விகள் மட்டுமே. அவற்றிற்கான விடைகளை மாணவர் தாமே கண்டுபிடிக்கும் போது அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பது இவரது திடமான பரிந்துரையாகும். கல்வி பண வசதி உள்ளவருக்கு மட்டுமே போய்ச் சேரும் நிலையை இந்தியாவில் “தானே கற்கும் முறை” அறிமுகமாகும் போது, மாற்ற இயலும் என் கிறார் மித்ரா.

TED(Technology, Entertainment, Design) நிறுவனத்தின் 2013 ஆண்டுக்கான சாதனையாளர் விருதைப் பெறுகிறார் மித்ரா. (image courtesy: Wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s