சண்டிகரின் ராக் கார்டன் – தனிமனிதக் கனவின் பிரம்மாண்டம்


சண்டிகரின் ராக் கார்டன் – தனிமனிதக் கனவின் பிரம்மாண்டம்

கட்டிட உருவாக்கம், மாரமத்துப் பணி செய்யும் அரசுத் துறையின் ஒரு சாதாரண  ஊழியரிக்கு உள்ளே ஒரு பிரம்மாண்டமான நகரை, சிற்ப வடிவங்களுடன் நிர்மாணிக்கும் கனவு இருந்திருக்கிறது. அதை அவர் ரகசியமாக 1957 முதல் 1975 வரையிலான 18 ஆண்டுகளில் உடைந்த தள ஓடுகள், கண்ணாடித் துண்டுகள், மட்பாண்டங்கள், செங்கற் துண்டுகள், வீசப்பட்ட துணிகள், கட்டிடங்களிலிருந்து உடைக்கப்பட்ட பொருட்கள், மின்சாதன மிகுதிகள் இவற்றைக் கொண்டு சண்டிகர் புற நகர்ப் பகுதியில் நேக் சந்த் என்னும் சாதாரண ஊழியர் உருவாக்கிய மனித, பறவை மற்றும் விலங்கு உருவங்கள் 12 ஏக்கர் பரப்பில் 1975ல் அரசால் கண்டுபிடிக்கப்பட்டன. சுக்ரான் என்னும் ஏரியின் அருகே வனப் பிரதேசம் என்று அறிவிக்கப் பட்டதால் அது நடமாட்டமின்றி இருந்தது. சுக்ரான் ஏரியின் பெயரால் சுக்ரானி என்னும் ஒரு கனவு நகரை அவர் நிர்மாணித்தார். அங்கு ஏற்கனவே இருந்த பாழடைந்த கோட்டைகள் கட்டிடங்களை இணைக்கும் சாலைகளை ஏற்படுத்தினார். வழியெங்கும் இந்த சிற்பங்கள் உடைந்த தளஓடுகள் பதிக்கப் பட்ட பக்கவாட்டு சரிவுகள் மீது வைக்கப் பட்டன. செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏரியிலிருந்து இணைப்புக் கொடுத்து உருவாக்கினார். முதலில் அரசு இந்த அனுமதியில்லாத கட்டிடம் மட்டும் நூற்றுக்கணக்காண் சிற்பங்களை அழிக்க நினைத்தது. பின் மக்களின் ஏகோபித்த விருப்பத்துக்கு இணங்கி அவருக்கு 50 உதவியாளர்கள் தரப்பட்டு நிர்மாணம் அரசுச் செலவில்40 ஏக்கர் விரிந்து முழுவடிவம் பெற்றது. புகைப்படத்தில் நாம் காண்பது தற்போதைய வடிவம். உலக அளவில் ஒரு தனிமனிதரின் பிரம்மாண்டமான கலைப்படைப்பு வடிவம் இது.

சிற்பக் கலை நுட்பங்களை அவர் கற்றிருந்தால் ஒருவேளை அவர் இன்னும் ரசிக்கத்தக்க ஒரு வடிவத்தைக் கொண்டுவந்திருக்கக் கூடும். இருந்த போதும் இப்படி ஒரு கனவை ஒற்றை மனிதராக 18 வருடங்கள் அவர் உருவாக்கி இருக்கும் சாதனை தனிமனிதக் கனவுகளுக்கு இருக்கும் வலிமையை, அதன் பிரம்மாண்டத்தைக் காட்டுகின்றன. அவருக்குள் இருந்த ஒரு கட்டிடக் கலைஞன் எப்படி அமைதியாக ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செயற்பட்டிருக்கிறான் என்பது மிகவும் அயர வைக்கும் வியப்பு. சண்டிகர் குளிர்கால உச்சத்தில் -2 டிகிரி செல்ஷியஸ் கோடையில் 45 46 என உச்சத்தைத் தொடும் தட்பவெட்பம் கொண்டது. இந்தமாதிரியான சூழலில் அந்த மனிதர் அயராமல் தன் கனவை நினைவாக்க 18 ஆண்டுகள் பாடுபட்டிருப்பது அற்புதமே. தனிமனிதனின் ஆற்றல் அவன் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் விட மிகவும் பெரிய ஆக்க சக்தி கொண்டது எனபதற்கு ராக் கார்டன் ஒரு உதாரணம். 90கள் வரை அரசால் பராமரிக்கப் பட்ட இந்தக் கலை நகரத்தை Rock Garden Society என்னும் தன்னார்வ அமைப்பு பராமரித்து வருகிறது.  (images courtesy :http://www.nekchand.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to சண்டிகரின் ராக் கார்டன் – தனிமனிதக் கனவின் பிரம்மாண்டம்

  1. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s