இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்


இந்த சாதனைப் பெண்ணின் பெற்றோர் போற்றுதற்குரியவர்கள்

க்ருஷ்ணா பாட்டில் என்னும் இளைஞர் இந்தியாவில் மிக இளம் வயதில் எவெரெஸ்ட் சிகரத்தை எட்டிய பெண். 2009ல் அவர் நிகழ்த்திய இந்த சாதனையில் அவர்களது பெற்றோர் அளித்த பங்களிப்பு மகத்தானது. ஒரு நடுத்தரக் குடும்பம் தன் பெண் குழந்தையின் எவரெஸ்ட் சிகரம் எட்டும் முயற்சிக்கு அவரை ஊக்குவித்து ஆதரவு தந்ததே மிகவும் சிறப்பானது. அவர்கள் எவரெஸ்ட் ஏறும் முயற்சிக்கு ஆகும் 30 லட்சம் ரூபாய் செலவுக்கென வங்கியில் கடன் வாங்கிப் பெண்ணின் சாதனைக்கு உதவியிருக்கிறார்கள். க்ருஷ்ணா மலையில் ஏறிச்செல்லும் போது குழு உறுப்பினர் ஒருவரை பனிப்பெருக்கு காவு வாங்கியது. மற்றொருவர் மாரடைப்பு ஏற்பட்டு வான்வழியாக மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். உயிரைப் பணையம் வைத்தாலும் சாதிக்கும் பெண் குழந்தையின் முயற்சிக்குத் துணை நின்றது மட்டுமல்ல. மிகப்பெரிய கடனை அதற்காக வாங்கி அவரை அனுப்பி வைத்தது பெற்றோரின் ஆதரவு எந்த அளவு இருக்க முடியும் என்பதற்குச் சான்று. சாதனைக்குப் பின் வங்கி அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம் என வெகுமதியாக்கியதும் பல மாநில மத்திய அரசு விருதுகள் அவருக்குக் கிடைத்ததும் வெற்றிக்குப்பின் நிகழ்ந்தன. ஆனால் இதையெல்லாம் அனுமானித்து அவர்கள் பெண் குழந்தைக்கு ஆதரவு அளிக்கவில்லை. தோல்வியோ வெற்றியோ என்ன ஆனாலும் நம்மால் இயன்ற எல்லாவிதத்திலும் பக்கபலமாக நிற்பது என்னும் அவர்களின் தீர்மானம் மிகவும் போற்றுதற்குரியது. இத்தைகைய பெற்றோர் ஒரு பெண் குழந்தையைக் குன்றில் இட்ட விளக்காக மிளிரச் செய்யும் போது அந்தச் சுடர் பல விளக்குகளை ஏற்றி பெண்களின் தன்னம்பிக்கைக்குக் காரிருளில் வழி காட்டுவதாக அமைகிறது.

பெண் குழந்தையின் படிப்புக்குச் செலவு செய்யும் போதே திருமணத்துக்கு எனத் தனி வைப்பை ஒதுக்கி ஒரு அளவு படிப்பில் அவர்களை நிறுத்தி விடுவது பெரும்பான்மைப் பெண்ணைப் பெற்றோரின் மனப்பாங்கு. எவ்வளவு வேண்டுமானாலும் படி என்று செலவு செய்து ஊக்குவிப்போர் சற்றே மேலானவர். ஆனால் இத்தகைய சவால் மிகுந்த சாதனைக்கும் துணை நிற்கும் பெற்றோர் நம்பிக்கை நட்சத்திரங்கள். இன்று சுயமுன்னேற்றப் பேச்சாளராகவும் பல பெண்களுக்கு இந்த சாதனைப் பெண் வழிகாட்ட இந்தப் பெற்றோரே காரணம். இந்தியச் சூழலில் சாதனைப் பெண்கள் பெற்றோர், கணவன் இவர்களது ஆதரவின்றி சாதிப்பது கடினமான ஒன்று. இவர் சாதித்திருப்பது இளம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களது பெற்றோருக்கும் முன்னுதாரணம். சமூகத்தின் பாதியான பெண்கள் சாதிக்கும் போது சமூகம் நிமிர்கிறது. அந்தப் பெண்கள் பின்னாளில் குழந்தைகளை பலசாலிகளாக, வெற்றியாளர்களாக உயர்த்தும் அடித்தளமும் அமைந்து விடுகிறது. இந்த சாதனையாளரையும் அவரது பெற்றோரையும் வாழ்த்துவோம். (News courtesy: Deccan Chronicle) Image courtesy :(http://www.facebook.com/krushnaamountaineer)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s