மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா?


Gnani Photo

(Image courtesy: http://www.gnani.net/)

மாணவர்கள் ஊடகங்களில் நடக்கும் விவாதங்களை அவதானிக்கிறார்களா?

60களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் மாணவரின் மிகப் பெரிய எழுச்சியாக சமீபத்தில் இலங்கைத் தமிழருக்கு எதிரான போர்க்குற்றங்களை கண்டித்த போராட்டங்கள் இருந்தன. அரசியல் சார்பற்றே பெரிதும் மாணவரின் பங்களிப்பு இருந்தது.

மாணவர் சமூக ஆர்வலர்களாக, சமூக நலனில் அக்கறை உள்ளவராக உருவாக இது ஒரு நல்ல துவக்கம். மாணவர்கள் இந்தக் கால கட்டத்தில் ஊடகங்களில் நடந்த பல விவாதங்களை அவதானித்திருந்தால், இலங்கை, இந்திய, தமிழ்நாட்டு அரசியல் பற்றியும், வரலாறு பற்றியும், வெளியுறவுக் கொள்கை பற்றியும், உலக அளவில் ஐநா சார்ந்த, சாராத அமைப்புகள் பற்றியும் நிறையவே தெரிந்து கொண்டிருக்கலாம். 60, 70களில் அச்சில் வருவது மட்டுமே ஊடகமாக இருந்தது. அப்போது பல கட்டுரைகளை, நூல்களை வாசிக்கும் பழக்கம் ஆசிரியராலும் பெற்றோராலும் வலியுறுத்தப் பட்டு மாணவருக்கு அது ஆழமான அஸ்திவாரமாக அமைந்தது. அனேகமாக எல்லா மாணவருமே இடது சாரி அதாவது கம்யூனிஸக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு தோழர்கள் வாயிலாகப் பல உலக இலக்கியங்களையும் வாசிப்பது நிகழ்ந்தது. ( பின்னாளில் பணி இடத்தில் தொழிற்சங்கத்தில் சேர்ந்து அதில் உள்ள அதிகார அடுக்குகளால் ஏற்படும் மன வருத்தமும் உலக அரங்கில் / இந்தியாவில் இரட்டை நிலைப்பாடுகளை இடதுசாரிகள் எடுக்கும் போது வரும் வருத்தமுமே தொடர்ந்து கம்யூனிஸ்டாகப் பலர் இயங்காமற் போனதற்குக் காரணம். )

இன்றைய (எழுச்சி பெற்ற) இந்த இடத்தில் இருந்து மாணவர் நல்ல மனமுதிர்ச்சி பெறுவது மிகவும் அவசியமாகிறது. இந்த மாணவர்களுக்கு ஒருவேளை அவர்களை ஆயுதம் ஏந்திய போராட்டதுக்கு யாரேனும் அழைத்தால் அதை நிராகரிக்க நிறைய மனப்பக்குவமும், வாசிப்பின் அடிப்படையிலான விழிப்புணர்வும் தேவை. இலங்கைப் போராட்டம் ஏன் காந்தியடிகளும், மாண்டேலாவும் பெற்ற வெற்றிகளைப் பெறவில்லை? ஆயுதப் போர், தமிழின எதிரிகள் இதை நசுக்க வசதியான தளம் அமைத்துக் கொடுத்ததே காரணம். சமீபத்தில் மாணவர் நடத்திய போராட்டம் அமைதியான முறையில் நடந்ததைப் பல அறிஞர்கள் ஊடக விவாதங்களில் பாராட்டினர். இந்த அமைதியே மத்திய அரசு தம் நிலைப்பாட்டில் மாற்றம் கொள்ளக் காரணமாகும்.

ஊடகங்களில் நடந்த விவாதங்களில் மூத்த பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலுருமான ஞாநி , “புதிய தலைமுறை” யில் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானது. கடந்த 30 ஆண்டுகளில் நம்மால் இலங்கைத் தமிழர் பிரச்சனை, இந்தியாவின் பிரச்சனை, அதாவது இந்திய அரசு முன்னுரிமை தரும் பிரச்சனை என்று நிறுவத் தவறி விட்டோம் என்று அவர் வாதிட்டார். அது மிகவும் சரியானது. தமிழக அரசியல் நடவடிக்கைகளைத் தாண்டி இந்திய அளவில் நம்மால் நம் பங்காளிகளான இலங்கைத் தமிழரின் பிரச்சனையை எடுத்துச் செல்ல இயலவில்லை. இது ஒரு கூட்டான தோல்வி.

ஞாநியின் கருத்துக்கு ஒரு மறுபக்கம் உண்டு. அதாவது நம் பிரச்சனையை நாம் எடுத்துச் செல்லவில்லை; செயலிழந்தோம் என்பது ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் பிற மாநிலங்களில் நடந்த மதக் கலவரங்களின் போது நாம் பெரிய அளவில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மும்பையில் , குஜராத்தில், ஒரிஸ்ஸாவில், கர்நாடகத்தில்  சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த கலவரங்களை நாம் கண்டித்து ஒரு மனித சங்கிலி கூட அமைக்கவில்லை. அப்படி நடந்த எதிர்ப்பும் சிறுபான்மைக் கல்வி நிறுவங்கள் சிலர் ஒழுங்கு செய்த ஒன்றே. இவற்றிற்கு முன்னால் 1984ல் இந்திரா காந்தி அம்மையார் கொலையுண்ட போது நடந்த கலவரங்களுக்கு நாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

என் மொழி பேசும் இனம் அழியும் போது மட்டுமே என் மனித நேயம் விழித்தெழும் என்பது எவ்வளவு குறுகிய அணுகுமுறை? இந்த மனப்பாங்கு மாற வேண்டும். நாம் இந்தியப் பிரஜையாக, உலகக் குடிமகனாக எல்லா அநீதிகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். நம் மனித நேயமும் அறச் சீற்றமும் நம் இனம் என்று குறுகாமல் மனித இனம் என்று விரிய வேண்டும்.

மாணவர்கள் ஊடகங்களில் சினிமா, சினிமாத் துண்டுகளைக் காணாமல், செய்திகள், விவாதங்கள் இவற்றைக் கூர்ந்து கவனித்து, அதில் தனக்குப் புரியாத அல்லது விட்டுப் போன விஷயங்களை இணைய தளத்தில், புத்தகங்களில் தேடி தனது அறிவை வளப்படுத்தி, தனது மன முதிர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித் தான் புரிந்து கொண்டவை பற்றி நேரிலும், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத் தளங்கள் வழி விவாதிக்க வேண்டும்.

ஒரு பெரிய மாற்றம் தமிழ் நாட்டில் இந்தியாவில் நிகழப் போகிறது. அதற்கு சரியான திசையை மாணவரின் வரலாறு, பண்பாடு மற்றும் அரசியல் பற்றிய அறிவே தீர்மானிக்கும்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s