வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே- தலாய் லாமா


ராஜ பட்சே பௌத்த மத வழி நடப்பவர் பற்றிய ஒரு தவறான உதாரணம். சரியான உதாரணம் 14வது தலாய் லாமா.

பௌத்த மதத்தின் மகாயானப் பிரிவில் திபெத்தின் “கெலுக்பா” பாரம்பரியத்தில் புத்த பிட்சுக்களின் தலைவருக்கு தலாய் லாமா என்று பெயர். அந்தப் பாரம்பரியத்தில் 14ஆவது தலாய் லாமா சீனம் திபெத்தை ஆக்கிரமித்து பௌத்த மத நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் என்று அறிவித்த போது 1959ல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். உலகமெங்கும் அவர் பௌத்தமதக் கோட்பாடுகளின் சாராம்சத்தை உபதேசித்து வருகிறார். இவரது ஆன்மீக பின்னணிக்காகவும், திபெத் மட்டும் உலக மக்களுக்கு அவர் தரும் நன்நம்பிக்கைக்காகவும் அவருக்கு 1989ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே என்பது பற்றிய ஒரு எளிய ஆனால் ஆழ்ந்த விளக்கத்தை அவர் தருகிறார்.

பிறந்த நாள் முதலே யாருக்கும் மகிழ்ச்சியாக வாழ்வதே விருப்பம். அதுவே சரியானது. தனி மனித மகிழ்ச்சிதான் சமூக அமைதிக்கு வழி வகுக்கிறது.  எந்த சமூகத்தவருக்கு, எந்தப் படிப்புப் பின்னணி உள்ளவருக்கும், எந்தக் கொள்கை வழி நடப்பவருக்கும் இது பொருந்தும்.

மகிழ்ச்சி அல்லது துன்பம் இரண்டையும் நாம் இரு பிரிவில் காணலாம். மனம் சார்ந்தது, உடல் சார்ந்தது. கடுமையான நோய்வாய்ப்படும் தருணத்தில் உடல் சார்ந்த துன்பம் மிகவும் மேலோங்கித் தென்படும். மற்ற தருணங்களில் அதாவது வாழ்வின் பெரும்பான்மை நாட்களில் நாம் உடலைப் பொருட்படுத்துவது இல்லை. மனம் கொள்ளும் துன்பமே நம்மை மிகவும் பாதித்து வருத்ததுக்கு உள்ளாக்குகிறது.  எனவே நம் முயற்சி யாவும் மன அமைதி நோக்கி இருக்க வேண்டும். அதற்கான எளிய வழி ஒன்று தான். பிறர் நலம் பேணும் குணம் நம்மிடம் இருக்கும் போது மன அமைதி தானே வந்து சேரும். மாறாகத் தன்னலம் மன அமைதியைக் குலைக்கும். பிறர் நலம் பேணுவது என்னும் வாழ்க்கை முறை நமக்கு ஒரு ஆன்மீக பலத்தை அளிக்கிறது. அதுவே தடைகளைத் தாண்டிச் செல்ல, இறுதியாக வெற்றி பெற நமக்கு மாபெரும் சக்தியையும் திசையையும் அளிக்கிறது.

எந்த ஒரு மதத்தின் சாராம்சமுமே நல்ல மனம். அன்பும் பரிவுமே மானுட இனத்தின் மதமாகும்.  மதத்தின் சிக்கலான கோட்பாடுகள் நல்ல மனத்துடன் வாழ்வதற்குக் குறுக்கே வருமானால் அவற்றைப் புறந்தள்ள வேண்டும். ஏனெனில் அவை வெறுப்பை விதைப்பவை.

உறவு, நட்பு, சுற்றம் என்னும் வட்டத்தில் நாம் காட்டும் அன்பு பற்றுதலின் அடிப்படையில் ஆனது. இந்தப் பற்றுக்கான அடிப்படைகள் மாறும் அல்லது மறையும். அப்போது அந்த அன்பும் மறையுல் அல்லது தேய்வுறும். மாறாக, பிறர் நலம் பேணும் மாண்பு (altruism) ஒன்றே உலக அமைதிக்கு வழி வகுக்கும். வறியோருக்காகவும், துன்பப்படுவோருக்காகவும் வருந்தி அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் பரிவு என்றும் நிலைத்திருக்கும். அது பற்றுக்களின் அடிப்படையில் அன்றி மனித நேயத்தின் அடிப்படையில் அமைவதாகும். ஆன்மீகத்தின் அடிப்படையும் அதுவே. இந்த ஆன்மீக நிலையில் மட்டுமே மனம் சமனில் இயங்குகிறது. அப்போது எந்த பிரச்சனையையும் தெளிவாக அணிகி, பொறுமையாக எதிர்கொண்டு தீர்கமாகத் தீர்ப்பது சாத்தியம் ஆகிறது. ஆன்மீகம் இல்லாத மனப்பாங்கு பதட்டமும், சஞ்சலமும் வன்முறையும் கொண்டதாக இருக்கிறது. இந்த மனப்பாங்கே போர்களில் முடிகிறது. எனவே பரிவும் அன்புமான வாழ்க்கை முறை நம் அன்றாட நடவடிக்கைகளில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. இது புரிந்து விட்டால் துன்பத்துக்கு இடமில்லை. (News courtesy: Deccan Herald, Image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதே- தலாய் லாமா

  1. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s