சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண்


சாதனையாளர் விருது பெற்ற தமிழக தலித் பெண்

CII (Confederation of Indian Industries) அகில இந்திய அளவில் குறுந்தொழிலில் வெற்றி கண்டதற்கான சாதனையாளர் (Exemplar 2013) விருது தமிகத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்னும் தொழில் முனைவருக்குக் வழங்கப் பட்டுள்ளது. இவர் தலித். வேலூர் மாவட்டம் படவேடு கிராமத்தவர். வாழை நார் நிறைய கிடைக்கும் அவரது பகுதியில் வாழை நார்களைக் கொண்டு இழை (Fibre) செய்ய Srinivasan Services Trust என்னும் நிறுவனம் அவருக்கும் அவரது கிராமத்தில் சிலருக்கும் பயிற்சி அளிக்க முன்வந்தது.   பெங்களூரில் பயிற்சி என்பதால் யாரும் முன்வராத போது தனியே அவர் சென்று பயிற்சி எடுத்தார். நாளொன்றுக்கு நூறு ரூபாய் ஊதியம் கூட உத்திரவாதமாகக் கிடைக்காத நிலையில் இருந்த அந்த கிராமத்தினர் முனியம்மாள் அவர்களின் தலைமையில் இன்று 250 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இதுவரை 2000 பேருக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். அதில் 200 பேர் சுற்றுப்புற கிராமப் பெண்கள்.

தலித்துகள் எப்போதும் அரசை சார்ந்திருப்பவர்கள். அவர்களுக்குக் கருணை தேவை – என்பது போன்ற கருத்துக்கள் அரசியல்வாதிகளால் பரப்பப் பட்டவை. அவர்களை ஒதுக்கி வைக்காமல் அமைப்புக்களும், சமூக, தொழில் நிறுவனங்களும் அவர்களிடம் உள்ள திறமையை வெளிக் கொணர்ந்தால் அவர்கள் குறுந்தொழில் முனைவர்களாக உயருவர் என்பதற்கு இது ஒரு சான்று. விதவையும் தலித்துமான இவரிடம் தலைமைக் குணங்கள் உள்ளதை இந்த விருது நிரூபித்திருக்கிறது. இவரை முன்னுதாரணமாகக் கொண்டு பல பெண்கள் மேன்மையுறுவர்.

சமுதாயம் துண்டு பட்டு நிற்க பல வரலாற்று, அரசியல் காரணங்கள் இருக்கலாம். மனித நேயமும் சாதனை எல்லோருக்கும் சாத்தியம் என்னும் நன்னம்பிக்கை மட்டுமே அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) வளர்ச்சிக்கு வழி வகுக்கும். முனியம்மாளுக்கு வாழ்த்துக்கள்.

(News courtesy: Deccan Herald, Image courtesy:http://www.cii.in/)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s