கதகளி ஒப்பனைக்குக் காப்புரிமை வாங்க வேண்டுமோ?


File:Kathakali Performance Close-up.jpg

கதகளி ஒப்பனைக்குக் காப்புரிமை வாங்க வேண்டுமோ?

ஒரு கதகளிக் கலைஞர் தெருவில் வந்து நடனமாடி குளிர்பானம் குடித்து, பிறருக்கும் வழங்குகிறார். ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியத்தன்மை கொண்டதாகத் தனது தயாரிப்பைக் காட்டுவதற்காக ஒரு உயர்ந்த கலையின் குறீயிட்டை வணிக ரீதியாகப் பயன்படுத்தி இருக்கிறது. அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் மீது பாயும் முன் தமிழ் நாட்டின் இரு மிக உயர்ந்த “கலைஞர்கள்” நினைவுக்கு வருகிறார்கள்.

சிவாஜி என்று ஒரு சினிமா வந்தது. அதில் ஒரு இசைக்கருவி விற்பனை நிலையத்தில் அந்த இசைக்கருவிகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் படும். (என் மகன் என்னைக் கட்டாயப் படுத்தித் தொலைக்காட்சியில் பார்க்க வைத்தான்). இசைக் கலைஞர்கள் தம் உயிரினும் மேலாக நேசிக்கும் கருவிகளை உடைப்பதைக் காட்சிப் படுத்திய மூளை தமிழ்நாட்டின் சாபம்.

கிரேஸி மோகன் என்று மற்றொரு கலைஞர். அவர் கமல்ஹாசன் என்னும் அதிமேதாவியுடன் இணைந்த படங்களுள் ஒன்றில் நவீன ஓவியங்களைக் கன்னாப் பின்னா என்று கிண்டலடித்திருப்பார்.

டெல்லியில் இருந்த காலத்தில் லலித் கலா அகாதமி, ஸ்ரீராம் ஆர்ட் கேலரி இவை மண்டி ஹவுஸ் பகுதியில் உள்ளவை. சாகித்ய அகாதமி மாலை ஆறு மணிக்கு சார்த்தி விடும். அதன் பின் இந்த அரங்கங்களில் உள்ள நவீன ஓவியப் படைப்புக்களைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம். எனக்கு அந்த ஓவியங்களைப் புரிந்து கொண்டு ரசிக்க மிகவும் ஆசை. எனவே ஒரு இளம் ஓவியர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் நவீன ஓவியம் கற்பனைகளின் சாத்தியத்தின் விரிவை சித்திரத்தில் காட்டுபவை. உங்கள் கற்பனை வளத்தை ஒத்து அது ரசிக்கப் படும். கலைஞரின் மனதில் எழுந்த கற்பனையையும் தாண்டி வேறு புரிதல்கள் உங்களுக்கு அதைப் பற்றிக் கிடைக்கக் கூடும் என்றார். ஆயில், அக்ரிலிக், ஆயில் ஆன் கான்வாஸ், ஆயில் ஆன் பேப்பர், கொலாஜ் என பல விதமான ஒவிய மற்றும் ஓவியமும் சிற்பமும் இணையும் வடிவங்களில் நாம் படைப்புக்களைக் காண்கிறோம். பல வேறு தனி மனித முரண்களை, சமுதாயப் புதிர்களை ஓவியங்கள் ஆழ்ந்த ரசனைக்கு உரிய படைப்புக்களாகக் காட்சிப் படுத்து

இன்று ஒரு நவீன ஓவியர் இயங்குகிறார் என்றால் அவர் குடும்பத்தை, சொந்த வாழ்க்கையை மறந்து விட்டார் என்றே பொருள். வெண்ணிமலை என்னும் ஓவியருடன் எனக்குப் பழக வாய்ப்பிருந்தது. என் இட மாற்றத்தில் தொடர்பு விட்டுப் போனது. அவர் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் ரோடில் ஒரு மாடியில் தம் பணிகளை செய்து வந்தார். கொஞ்ச நாள் வேலைக்குப் போவார். கான்வாஸ், பெயிண்ட் வாங்குமளவு பணம் சேர்த்து மீண்டும் ஓவியங்களை வரைவார். கண்காட்சிக்குக் கடன் வாங்கி அவர் செலவு செய்ததுண்டு. அவரது தாயார் உடல் நலமில்லாமல் சென்னையில் மருத்துவம் பார்த்த போது மட்டுமே அவர் குடும்பம் பற்றிக் கவலைப் பட்டார். நான் பழகிய காலத்தில் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கிராபிக்ஸ் , அனிமேஷன் துறையில் தேர்ந்தவர். நிறைய சம்பளம் தரும் வேலையைத் துறந்து அவர் ஓவியம் எழுதியதைப் பார்த்தேன். ஏன் வெண்ணிமலை இரண்டையும் செய்யலாமே என்று கேட்டதற்கு ” இதுதான் சார் என் ஜீவன்” என்றார். என்னால் அப்படி எழுத்தே உயிராக வாழ முடியாமற் போனது என்று அவரைப் பார்த்தபோது சுயபச்சாதாபம் வேறு ஏற்பட்டது.

நாம் நம் கலைஞர்களை, நம் நாட்டுப் புறக் கலைஞர்களை மதிப்பதில்லை. அந்தக் கலைகளை ஊன்றி ரசிக்க முடியாத படி சங்கர், கிரேஸி மோகன், பாலச்சந்தர் போன்ற கலையில் இமையம், எவரெஸ்ட்டுக்களால் மழுங்கடிக்கப் பட்டு வீணாய்ப் போனவர்கள்.

பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தை எப்படி நொந்து கொள்வது?

 

(image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s