நடிகர் விவேக் + முல்லைவனம் = பசுமை வனம்


நடிகர் விவேக் + முல்லைவனம் = பசுமை வனம்

முதலில் முல்லைவனம் பற்றி:

(பின் குறிப்பில் உள்ளது போல) முதலில் Green Kalam Movement பற்றி பத்திரிக்கையில் படித்தேன். தற்செயலாக எங்கள் குடும்பத்தில் குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒரு தொட்டியில் பறவை எச்சம் மூலமாக ஒரு ஆல மரக் கன்று முளைத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. Green Kalam Movement மூலமாக முல்லைவனம் தொலைபேசியில் தொடர்புக்கு வந்தார். அவர் 24.4.2013 புதன் கிழமை திருவான்மியூருக்கு வந்து அதைப் பெற்றுக் கொண்டார். அவரது மற்றும் அன்று எடுக்கப்பட்ட புகைப் படங்கள் அடுத்த பத்திக்குக் கீழே:

இதுவரை விவேக் நடத்தும் Green Kalam Movementக்கே இவர் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கன்றுகளை வழங்கியுள்ளார். Tree Bank என்னும் அமைப்பை அவர் நடத்தி வருகிறார். விதைகள் வினியோகம், மரக்கன்றுகள் சேகரிப்பு மற்றும் இலவச வினியோகம் இவை இவரது பணிகள்:

நாங்கள் கொடுத்த ஆலமரக் கன்று இதுதான்:

நாங்கள் அவருடன் எடுத்துக் கொண்ட படம்:

download

Tree Bank சார்பாக அவரே ஓட்டி வரும் வாகனம்:

download (1)

பதிமூன்று வயது முதல் பசுமைப் பணியில் ஈடுபடும் அவரது மனைவி துர்திஷ்டவசமாக உயிருடன் இல்லை. அவரது மகன் மற்றும் மகள் தாத்தா வீட்டில் வளர இவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தற்காலிகக் கொட்டகையில் தங்கி முழுநேரமும் இதே பணியில் ஈடுபடுகிறார். குறைந்த பட்சம் சென்னைவாசிகள் அவருடன் தொடர்பு கொண்டு தம்மால் இயன்ற அளவு இந்தப் பணியில் பங்கேற்கலாம். அவரது தொலைபேசி எண்:9789892080. Email :gogreentreebank@gmail.com.

அடுத்ததாக நடிகர் விவேக் பற்றி:

சென்னையில் இயங்கும் Green Kalam Movement என்னும் அமைப்பு என்னும் செய்தியை Deccan Chronicle நாளேட்டில் பார்த்த போது நடிகர் விவேக் இதில் ஈடுபட்டது தெரியாது. பெரியவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி பல நகரங்களில் தானே நேரடியாகவோ அல்லது அமைப்புக்களுடன் இணைந்தோ மரக்கன்றுகளை நட்டு பசுமையான சூழலுக்குப் பாடுபடுகிறார் . இதை அந்த இயக்கத்தின் இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்கிறோம். அவர்கள் அதில் வெளியிட்டுள்ள பட்டியல் கீழே:

NAME OF ORGANISATION NO OF PLANTATION DISTRICT
SIRUTHULI 10,000 KOVAI
MAHENDRA GROUPS 75,000 SALEM
SAIRAM 50,000 CHENNAI
CIT 15,000 CHENNAI
VIVEK NARPANI MANRAM 25,000 CUDDALORE
ANNAMALAI UNIVERSITY 1,00 000 CHITHAMBARAM
GREEN PARADISE COMPLEX GREEN KALAM 2,00 000 TRICHY
VIVEK NARPANI MANRAM 10,000 KARUR
JAYATV 25,000 CHENNAI
SHAKTHI MASALA 50,000 ERODE
GREEN CITY 40,000 CHENNAI
TREE BANK C.P. ADITHANAR TRUST 1007 CHENNAI
SWARNA BHOOMI 25,000 KALPAKKAM
SWARNA BHOOMI 25,000 KARAIKKAL
PARK INSTITUTION 1,50 000 KOVAi
ROTARY CLUB RASIPURAM 50,000 SALEM

கொண்டாடப்படும் ஒருவர், அதுவும் சினிமா நடிகர் சமூகப் பணியை மேற்கொள்ளும் போது ஊடகங்களின் மூலம் அது பரவலாகச் சென்றடைகிறது. பலருக்கும் சமூகத் தொண்டுணர்வு விழிப்புறும் வாய்ப்பு அதிகம். விவேக் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள்.

21.4.2013 அன்று புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் ஒரு ஓட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். சமூகப் பணியில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வருதற்கு இது சான்று. புத்தக வாசிப்பைப் பள்ளிகள், குடியிருப்புகள் எல்லா இடத்திலும் ஒரு பழக்கமாக குழ்ந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்தால் அது தானே வளரும். அச்சடித்த புத்தகம் தவிர இணையம் மற்றும் மின்னணு சாதனங்கள் வழி வாசிக்கப் பழக்குவதும் அவசியம்.

         

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s