இனமில்லை அன்புக்கு – – மனதைத் தொடும் புகைப்படங்கள்


இனமில்லை அன்புக்கு — மனதைத் தொடும் புகைப்படங்கள்

கலிபோர்னியாவில் ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரு புலி மூன்று குட்டிகளை ஈன்றது. குறைப்பிரசவத்தில் மிகவும் சிறிய வடிவில் பிறந்த மூன்று குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பிரசவவலியில் இருந்து மீண்டபின் புலியின் உடல்நிலை மோசமாகி பலவீனமாகிக் கொண்டே வந்தது. நோய் எதுவும் தொற்றி இருக்கவில்லை. மிருக வைத்தியர்கள் குட்டிகளை இழந்த சோகத்தில் கடுமையான மன அழுத்தத்தில் தாய்ப்புலி பலவீனமாகி வருகிறது. இப்படியே விட்டுவிட்டால் செத்து விடும் என்று கருதினார்கள்.

பிறந்து சில நாளே ஆன புலிக்குட்டிகளைக் கொண்டு வந்து இந்தத் தாய்ப்புலியின் அரவணைப்புக்கு விட்டால் கண்டிப்பாக அது மீண்டும் நடமாடி உடல் நலம் தேறும் என்று பரிந்துரைத்தனர். துரதிஷ்ட வசமாக எங்கும் பச்சைக் குழந்தையான புலிக் குட்டிகள் கிடைக்கவில்லை. சில சமயம் வேற்று இனக் குட்டிகளை ஆடுகள், மாடுகள் அரவணைத்ததுண்டு. ஒரு புலி அவ்வாறு செய்ததில்லை. பரிட்சித்துப் பார்த்துப் புலியின் உயிரைக் காக்க எண்ணி புலி தவிர்த்த பிற இனங்களில் குட்டிகளைத் தேடினார்கள்.

ATT0001931

அப்போது ஐந்து பன்றிக் குட்டிகள் மட்டுமே கிடைத்தன. அவற்றின் மீது புலிகளின் தோலை சுற்றிப் புலியிடம் விட்டார்கள்.
அடுத்த படங்களைப் பார்ப்போம். நம்ப முடியாது தான். ஆனால் அது தான் நடந்தது. புலி அந்தக் குட்டிகளை அரவணைத்து அவற்றுடன் விளையாடி உடல் நலம் தேறியது. அவைகளுக்கு எந்த ஊறும் செய்யவில்லை.

ATT0001623

ATT0002244

ATT0002512

 

 

‘டிஸ்கவரி சானலி’ல் என்ன பார்க்கிறோம்? அடர்ந்த காட்டில் எங்கேயோ மேயும் மான்களை மோப்பம் பிடித்து அறியும் திறன் பெற்றது புலி. இந்தக் குட்டிகளைக் கண்டிப்பாகத் தாய்ப்புலி தன் இனம் இல்லை என்று நொடியில் உணர்ந்திருக்கும். ஆனாலும் அதன் தாயன்பு இன உணர்வை எளிதில் கடந்து சென்றது.

மொழி, இனம், மதம், நாடு என்று மனித இனம் பிரிவுக்கும் போருக்கும் வெறுப்புக்கும் எத்தனையோ அடிப்படைக் காரணங்களைக் கொண்டு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் போரும் கொலையுமாக ரத்தக் கறை படிந்த வரலாற்று ஏடுகளையே உருவாக்கியது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் மிருகத்தனமான என்னும் அடைமொழியையே நீக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மனித நேயம் எப்போது விழிக்கும் நம்முள்? எப்போது உய்யும் மனித குலம்?

புகைப்படங்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றிகள்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

2 Responses to இனமில்லை அன்புக்கு – – மனதைத் தொடும் புகைப்படங்கள்

  1. padangal theriyavillaiye?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s