கோயம்பத்தூரின் ஈர நெஞ்சம்
“36 நேரு தெரு” என்பதைத் தவிர எதுவுமே சொல்லத் தெரியாமல் மனநலம் பாதிக்கப் பட்டிருந்த பதின்களில் இருந்த இளம் பெண். அவரை மீட்டார் மகேந்திரன். நான் கு வருடங்களுக்கு அதை மட்டுமே பேசுவார் அந்தப் பெண். எப்படியோ அவரது பெற்றோரிடம் அவரை சேர்பித்தார். பெற்றோரைக் கண்ட பின்னர்தான் அந்தப் பெண் மன அழுத்தம் மாறி கடகடவெனப் பேசத் துவங்கினார். மனநலம் பாதித்த நிலையில் குடும்பத்தை விட்டுத் தாம் பிரிகிறோம் என்று தெரியாமல் காணமற் போனவராக கோயம்பத்தூர் வீதிகளில் பரிதாபமான நிலையில் இருந்தோரை மீட்பதை ஒரு சேவையாக செய்து வரும் அவர் இதுவரை 25 குடும்பங்களின் பெற்றோருடன் அவர்கள் தேடிய குழந்தைகளை சேர்த்து வைத்திருக்கிறார். ஒரு தந்தை தம் மகன் இறந்து விட்டார் என்று முடிவு செய்திருந்த போது தம் பிள்ளை திரும்பி வந்ததும் மகேந்திரனுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியாமல் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
ஈர நெஞ்சம் என்னும் அமைப்பை நடத்தும் மகேந்திரன் ஒரு சுயதொழில் முனைவர். இந்த அமைப்பு சாலைகளில் அனாதரவாகத் திரியும் மனநலம் பாதிக்கப் பட்டவரை மீட்டு, குளிக்க வைத்து, புதிய உடைகள் அணிய வைத்து பாதுகாப்பாகக் காப்பகங்களில் சேர்ப்பதோடு நிற்காமல் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாருடன் அவர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றது.
தமது சகோதரிகளில் ஒருவரும், சகோதரி ஒருவரின் மகனும் மனவளர்ச்சி குன்றியவராகப் பட்ட பாடுகளைக் கண்ட மகேந்திரன் சமூகத்தில் இவ்வாறு துயரப்படும் உடன்பிறவாச் சகோதரருக்கு உதவ எண்ணியே “ஈர நெஞ்சம்” என்னும் அமைப்பைத் துவங்கினார். விபத்தாலா அல்லது இயல்பாகவே மனநலம் பாதிக்கப் பட்டவரா என்று பரிசோதித்து அவர்களிடமிருந்து ஊர் உறவு பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதே இவர்களது முயற்சி. முற்றிலும் தன் விவரங்களைக் கூற முடியாத அளவு பாதிக்கப் பட்டவர்கள் காப்பகங்களை விட்டு உறவுகளுடன் சேர முடியாமல் போய் விடுகின்றனர்.
மகேந்திரனின் மனித நேயம் மிக்க தொண்டுப் பணியில் கிட்டத்தட்ட 50 நண்பர்களும் நல்மனம் கொண்டோருமானவர் துணை நிற்கின்றனர். நாமும் அவரது பணியில் பங்களிக்கும் வாய்ப்பை நோக்குவோம். அவருக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள். தொடர்பு எண்: 9600400120. (News Corutesy: Deccan Chronicle)
(Image Courtesy: http://www.facebook.com/photo.php?fbid=238684519589844&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater)