கண்ணாமூச்சி
ஆழ்மன அடுக்குகளில்
நெருடும்
வடுக்களா
பிரமைகளா அனுமானங்களா
அன்னிய முகச் சலனங்கள்
விட்டுச் சென்ற தடங்களா
ஏதோ ஒன்று
வலி வலிமையாகக்
காரணம்
தற்காலிகமாகத் தவிர்க்கலாம்
தப்பிக்க முடியாது
என்பதே வலியின் அச்சுறுத்தல்
எனது உனது என
இரண்டு வலிகள்
ஏவாள் காலத்திலிருந்து
என் மீட்பராகவே
இருப்பது உனக்கு
வலி மிகுந்ததானது
காத்திருந்து கால்
மரத்துப் போன போது
வலியுடன் சமரசமானது
நிரந்தர விடுதலை
மரணமாயிருக்கலாம்
அவ்வப் போதான விடுதலை
மௌனமாயிருக்கலாம்
சொற்களும் மௌனமும்
விளையாடும்
கண்ணாமூச்சியிலும்
(Image courtesy:blogs.psychcentral.com)
very nice kavithai
Thanks