செய்தித்தாள் வீசும் பையனின் வியாபார மூளை


Newspaper vendor from Bangalore walks into IIM-Calcutta

செய்தித்தாள் வீசும் பையனின் வியாபார மூளை

நாம் மேலே காணும் படத்தில் இருப்பவர் தான் அந்த செய்தித்தாள் வினியோகிக்கும் பையன். சிவகுமார் என்னும் இவரது வாழ்க்கை எந்த ஒரு இளைஞருக்கும் பாடமாக, முன் மாதிரியாக அமையக் கூடியது.

ஒரு லாரியை கடன் தொகையில் வாங்கி அதைத் தானே இயக்கி வந்த சிவகுமாரின் அப்பாவால் தவணைகளை செலுத்த முடியவில்லை. குடும்பம் கடனில் தத்தளித்தது. கடன் கொடுத்தவர்கள் தினசரி வந்து மிரட்டி விட்டுப் போவது வாடிக்கை.

தான் எதாவது சம்பாதித்தாக வேண்டும் என்னுமளவு 8 வயதான சிவகுமாருக்குப் புரிந்தது. ஆனால் எப்படி சம்பாதிப்பது? அம்மா தொடுத்துக் கொடுக்கும் பூச்சரங்களை தெருவோரம் நின்று விற்பான். ஆனால் அதில் நிலையான வருமானமில்லை.

இந்த நிலையில் தான் செய்தித்தாள் போடும் வேலை கிடைத்தது. அதில் வரும் 150 ரூபாய் (15 வருடம் முன்பு) குடும்பத்துக்கு எவ்வளவோ உதவியாக இருந்தது. பள்ளிப் படிப்பில் மிகுந்த ஈடுபாடு உள்ள சிவகுமார் அதை விடாமல் படித்து வந்த போது சோதனையாக ஒன்பதாவது வகுப்பு வரும் போது அவனுடைய அப்பா மிகவும் நொடித்துப் போய் பள்ளிக் கூடக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர் நல்ல நிலையில் இருந்த போது தனியார் பள்ளியில் சேர்த்திருந்தார். பள்ளிக் கூடத்தில் சிவகுமாரை பணம் கட்டிய பிறகே பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

படிப்பில் மிகவும் ஆர்வமுள்ள சிவகுமார் தான் செய்தித்தாள் போடும் வீடுகளில் ஒருவரிடம் தயங்கித் தயங்கிக் கடனாக பணம் தரும்படி கேட்டான். அவர் தயங்கினார். அப்போது அவன் அவரிடம் “நீங்கள் என்னைப் பற்றி விசாரித்து, பிறகு முடிவு செய்யுங்கள்” என்று கூற அவரும் பள்ளிக் கூடத்தில் சென்று விசாரித்த போது அவர்கள் அந்தப் பையன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் என்று உறுதி செய்தார்கள். கிருஷ்ண வேத வைஸ்யா என்னும் நல் மனம் கொண்ட அந்த மனிதர் கடனாக இல்லாமல் தானே முன்வந்து சிவகுமாரின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்றார்.

ஆனால் வீட்டுச் செலவுக்குப் பணமில்லை. அப்போது தான் சிவகுமாரின் மூளை வேலை செய்தது. தான் கூடுதல் நாளேடுகளை விற்றுக் கொடுப்பதாக தன் முதலாளியிடம் முன்மொழிந்தான். அவர் அதற்கு ஏற்றது போல “கமிஷன்” தர ஒப்பினார். 50 செய்தித்தாட்களை முதலில் கூடுதலாக விற்றுக் கொடுத்தான். புதிய குடியிருப்புக்களைக் கண்டறிந்து மாலையில் அவர்களிடம் பேசி புதிய வாடிக்கையாளர்களைப் பிடிப்பான். பின்னர் மறு நாள் காலை முதல் அங்கே நாளேட்டை வீசுவான். ஆறு மணிக்குள் நாளேடு அவர்களிடம் சென்று சேருவதால் அவனுக்கு நல்ல வரவேற்பு. இப்படியே 500 வரை அவனால் போக முடிந்தது.

விடியற்காலை 4 மணிக்கு எழுந்து 500 குடியிருப்புப் படி ஏறி வீட்டுக்கு வந்தால் பள்ளிக் கூடத்துக்கு நேரமாகி விடும். காலை உணவு உண்ணாமல் ஓடுவார். கல்லூரி வந்த பிறகு முதல் வகுப்பில் மட்டும் கடைசி இருக்கையில் அமர்ந்து கொஞ்சம் தூங்கி தன்னை சரி செய்து கொள்வார். கல்லூரி வந்த பிறகு உதவிக்கு சில சிறுவர்களை வைத்து தானே “ஏஜென்ட்” ஆக உயர்ந்தார். சொற்ப வருமானம் தான்.

“என்ஜினீயரிங்” பட்டப் படிப்பில் “கம்ப்யூட்டர் சயன்ஸ்” வரை படிக்க அந்த கிருஷ்ண வேத வியாஸா” உதவினார்.

இன்று சிவகுமார் CAT தேர்வில் வெற்றி பெற்று IIM Calcuttaவில் நிதித் துறையில் மேலாண்மைக் கல்விக்குத் தேர்வாகி இருக்கிறார் சிவகுமார்.

தனக்கு ஒருவர் உதவியது போல வருங்காலத்தில் தான் பத்து பேருக்காவது உதவ எண்ணுகிறார்.

தன்னை முடக்க நினைத்த சூழ்நிலைகளால் சளைக்காமல் போராடி வென்ற இவர் எந்த ஒரு இளைஞருக்கும் நல்ல முன்னுதாரணம். வாழ்த்துவோம். (News and Image Courtesy: TOI)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சரித்திர நாவல் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to செய்தித்தாள் வீசும் பையனின் வியாபார மூளை

  1. சிறுவயதில் நானும் பேப்பர் போட்டுதான் எனது வாழ்கையை தொடங்கினேன் சிவக்குமரைபோல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s