மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள்


553494_356836781076910_544996420_n

544801_433283533432234_1964107509_n

மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள்

C R Engineering College என்னும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கார்த்திக் என்னும் மாணவர் (புகைப்படத்தின் இடது கோடியில் உள்ளார்) தம்முடன் அறுபது மாணவர்களை சேர்த்துக் கொண்டு “தொடர்வோம்” என்னும் அறக்கட்டளையை ஏற்படுத்தி சமூக நலப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சினிமாவில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு தவறாக சித்தரிக்கப் படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் இந்த இளைஞர்களின் தொண்டுள்ளம்.

வருமானமில்லாமல் படிப்பு, பரிட்சை என்னும் பளு இருக்கும் மாணவர்களால் என்ன செய்ய இயலும்?

அரசு மருத்துவமனை, முதியோரில்லம், அனாதை ஆசிரமம், ஏழைக் குழந்தைகளுக்கான இல்லங்கள் இங்கே உள்ள ஆதரவற்றவர்களுக்கு இவர்கள் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு சிறிய அளவில் ஏதேனும் உதவிகள் செய்வது என்று துவங்கினார்கள். டெங்க் ஜூரத்தால் மதுரை மிகவும் பாதிக்கப் பட்ட போது மருத்துமனைகளுக்குச் சென்று ரத்த தானம் செய்தார்கள். 163 மாணவர்கள் ரத்த தானம் செய்ய இவர்கள் எடுத்த முயற்சியே காரணம். இது தொடர்ந்து நடக்க வேண்டும் என்னும் அடிப்படையில் அறக் கட்டளையை உருவாக்கினார்கள். கார்த்திக்குடன் வேலம்மாள் கல்லூரியின் விக்னேஷ் மற்றும் மீனாட்சி சஞ்சனா ஆகியோரும் இணைந்தனர். குழந்தையாய் இருக்கும் போதே தன் தந்தையை இழந்த கார்த்திக் தமது தாய் உழைத்துத் தம்மை வளர்த்த போது வாழ்கையின் சவால்களை நேரில் கண்டவர். அவருக்கு ஆதரவற்றோருக்கு உதவும் எண்ணம் தம் குடும்பம் போராடிய காலத்தில் உருவானது.

எளிய பணியாக இது வரை செய்திருக்கலாம். செய்திருப்பவர்கள் இளைஞர்கள். பணத்தையும் நேரத்தையும் வீணடிக்க இப்போது எவ்வளவோ வழிகள் உண்டு. தொண்டு என்னும் பணியை இவர்கள் ஏற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

“விளையும் பயிர் முளையிலேயே”. இந்த இளைஞர்கள் மதுரைக்குப் பெருமை சேர்க்கிறார்கள். (News Courtesy: Deccan Chronicle; Image Courtesy:http://www.facebook.com/ThotarvomArakkattalai )

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to மதுரைக்குப் பெருமை சேர்க்கும் மாணவர்கள்

  1. மிக்க நன்றி உங்களது ஆதரவுகளும், ஆசிர்வாதமும் தான் எங்களை மென்மேலும் தொடர வைக்கின்றது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s