MBAவா? உனக்கு ஓட்டுப் போட மாட்டோம்


580349_10151687072964612_866988197_n

MBAவா? உனக்கு ஓட்டுப் போட மாட்டோம்

மக்கள் ஒரு நல்ல லட்சியம் உள்ள தென் சென்னையில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் கற்பித்த பாடம் இது. முதலில் நாடாளுமன்றத் தேர்தல் பின்னர் சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் மக்கள் “டெபாஸிட்” திரும்ப வரும் அளவு மக்கள் ஓட்டுப் போடா வில்லை. என்றேனும் ஒரு நாள் கல்வி அமைச்சராகும் கனவுகளை சுமக்கிறார் சரத்பாபு என்னும் இளைஞர். ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மனம் சோர்ந்து அதிலிருந்து வெளியேறி சுயேட்சையாகப் போட்டி இட்டவர்.

இவர் கல்வி அமைச்சராகும் தகுதி உள்ளவரே. அம்மாவுடன் சேர்ந்து இட்டிலி விற்கும் ஏழ்மை நிலையிலிருந்து , BITS Pilaniயில் எஞ் ஜினீயரிங் படிப்பு, IIM Ahmedabadல் MBA படிப்பு என்று போராடி வென்றவர். நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கும் வழியை விட்டு சுயதொழில் முனைவராகி Foodking Caterers என்னும் வெற்றிகரமான நிறுவனத்தை இயக்கி வருகிறார். MTV Youth ICON & EXAMPLE TO YOUTH ஆகிய இரு விருதுகள் இவர் பெற்றவை. எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் ஏழைக் குழைந்தகள் படிப்புக்குப் பண உதவி ஆகிய வழிகளில் சமூக சேவையையும் செய்து வருகிறார்.

இளமையில் வறுமையே கொடிது என்பார் ஔவையார். அதனுடன் போராடி ஜெயித்ததோடு நில்லாமல் சுயதொழில் தொடங்கி இருக்கும் இவர் கண்டிப்பாக இளைஞர்களுக்கு நல்ல உதாரணமே. அரசியல் பெரிதும் படித்தவர்களால் புறக்கணிக்கப் படுவதால் தான் பல தேர்தல்களில் தகுதி இல்லாதவர்கள் தராதரம் இல்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு பதவியில் தான் எப்படிப்பட்டவர் என்பதை நிரூபித்தும் காட்டுகின்றனர்.

குடும்பப் பின்னணியை மீறி வெல்லவேண்டுமானால் அதற்கு ஒப்பற்ற மனத்திண்மை வேண்டும். ஜெயித்த பிறகு சமூகம் முன்னேறும் மனப்பாங்கு இருப்பது அரிதான ஒன்று. இரண்டுமே இவரிடம் உள்ளன. ஏழ்மை-பசி இல்லாத இந்தியாவுக்காகப் பாடுபடுவதே தம் நீண்டநாள் கனவு என்னும் சரத்பாபுவின் முக நூல் பதிவுகளில் ஜாதி அரசியலைக் கண்டிக்கும் பதிவுகளைக் காண்கிறோம்.

இளைய தலைமுறையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் இவர். வாழ்த்துக்கள்.

(News Courtesy: Deccan Chronicle, Image Courtesy: Face Book)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s