பிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது?


800px-Giraffe_Family

பிறந்த குட்டியை ஏன் ஒட்டகச் சிவிங்கி மீண்டும் மீண்டும் உதைக்கிறது?

Gary Richmond எழுதிய “A view from the Zoo” என்னும் புத்தகத்தை மேற்கோள் காட்டி போர்ச்சுகீசிய எழுத்தாளர் Paulo Coehlo தாய் ஒட்டகச்சிவிங்கிகள் ஏன் தம் குட்டிகளைப் பிறந்த உடன் உதைத்துத் தள்ளுகின்றன என விளக்குகிறார். பிறந்த குட்டி தாயின் வயிற்றில் இருந்து கீழே விழுந்தவுடன் எழுந்திருக்கவே திணருகிறது. தாய் அதை கவனித்துக் கொண்டே இருக்கிறது. பிறகு தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருக்கும் குட்டி மீது வலுவான ஒரு உதையை ஒரு காலால் அளிக்கிறது. மறுபடியும் விழுந்த குட்டி மீண்டும் தட்டுத் தடுமாறி எழ, அதை மீண்டும் உதைக்கிறது தாய். இப்போது சற்றே விரைவாகவும் தன்னம்பிக்கையுடனும் குட்டி எழுந்திருக்கிறது. தாய் விட்டு விடுகிறதா ? இல்லை. பல முறை அதை உதைத்துத் தள்ளி, இறுதியில் அது சர்வ சாதாரணமாக எழுந்து நடமாடும் போது பெருமிதத்துடன் அதை அரவணைக்கிறது. சரி அப்படி என்ன அவசரம்? பின்னாளில் சிறுத்தை, புலி அல்லது வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் போது விழுந்து விட்டால் நொடியில் எழுந்து ஓடத் தெரிய வேண்டும். பிறந்த உடனே அது கற்றுக் கொள்ளாவிட்டால் பின்னர் வாய்ப்பே இல்லை. வாழ்க்கையில் அடிபட்டவர்கள், தாமும் தம் வாரிசுகளும் எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் மன வலிமையை, போராடும் குணத்தை வளர்த்துக் கொள்கின்றனர். அப்படி வளர்த்துக் கொள்ளாதோர் கீழ் நிலையிலோ அல்லது பிரச்சனைகளிலோ உழன்றபடியே நின்று விடுகின்றனர்.

Paulo Coehlo பகிர்ந்து கொள்ளும் வெனிசுவேலா நாட்டுக் கதை ஒன்று. ஒரு அரசன் அமைதியை ஒரு ஓவிய வடிவில் வரையச் சொல்லி ஒரு போட்டி வைத்தான். அமைதியை நன்றாகப் பிரதிபலிக்கும் ஓவியத்துக்கே முதல் பரிசு என்றும் அறிவித்தான். பல ஓவியங்கள் போட்டிக்கு வந்தாலும் இரண்டு ஓவியங்களை இறுதி கட்ட தேர்வுக்கு அவன் தேர்ந்தெடுத்தான்.

முதல் ஓவியத்தில் பசுமையான மலைகள். தெளிவான வானம். அங்கங்கே வெண் மேகத் திட்டுகள். கீழே பெரிய விரிந்த ஏரி. அதன் ஓரத்தில் ஒரு வீடு அதில் இருந்து மெல்லிய புகை. நல்ல உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது. அமைதி நிலவுகிறது.

இரண்டாவது ஓவியத்திலும் மலைகளே பின்னணியில். கற்பாங்கான கூர்மையான சிகரங்கள். மேலே கருமையான வானம். வெட்டி ஒளிரும் மின்னல்கள். கருமேகங்கள். சூறைக்காற்றில் அலைப்புறும் மரம் செடி கொடிகள். ஒரு பாறையின் பிளவில் ஒரு சிறிய கூடு. அதில் ஒரு பறவை அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறது.

மன்னன் இரண்டாவது ஓவியத்துக்கே பரிசளித்தான். அமைதி என்பது சூழ்நிலையைப் பொருத்தது அல்ல. எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப் படாமல் நம் நெஞ்சில் உறைவதே அமைதி. அதுவே உண்மையான அமைதி. (நன்றி: Deccan Chronicle)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s