450 குழந்தைகளைக் கொடியவரிடமிருந்து மீட்டது காவல் துறை


child-beggars-banner

450 குழந்தைகளைக் கொடியவரிடமிருந்து மீட்டது காவல் துறை

Juvanile Aid Police காவல்துறையின் குழந்தைகள் பாதுகாப்புக்கான பிரிவு. அவர்கள் தெருவில் திரிகின்ற பிச்சை எடுக்கக் கட்டாயப் படுத்தப் படுகிற குழந்தைகளை மீட்டு அவர்களை உரியவரிடம் ஒப்படைப்பதோ அல்லது நலவாழ்வு மையங்களில் சேர்ப்பதோ செய்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 450 குழந்தைகளை மீட்டனர். 2012ல் 1056 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

பயணத்தின் போது வழி தவறிய குழந்தைகள் உண்டு. இவர்களும் வீட்டில் இருந்து வறுமை அல்லது வருத்தம் காரணமாக ஓடி வரும் குழந்தைகளும் கொடியவர்களின் கையில் பலிகடாவாக எளிதாகச் சிக்கிக் கொள்கின்றனர். பிச்சை எடுக்க, கடுமையான உடலுழைப்பில் கொத்தடிமையாக இருக்க என இவர்கள் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். அவர்களின் உடல் உறுப்புகள் ஊனமாக்கப் பட்டு பிச்சை எடுக்கும் படி கட்டாயப் படுத்தப் படுகின்றனர்.

1098 என்னும் உதவி எண்ணில் தெரிவித்தால் தன்னார்வ நிறுவனங்கள் காவல் துறையுடன் இணைந்து குழந்தைகளை மீட்கின்றனர். இந்த இடத்தில் ஒரு வருத்தமான வியப்பு என்னவென்றால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து சந்திப்புக்களில் நாம் எத்தனை குழந்தைகளைப் பார்க்கிறோம். ஏன் அவர்கள் அடிக்கடி தென்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்?

காவல்துறையில் ஆட்பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசியல் கட்சிகளின் விவகாரங்களிலேயே பெரிதும் அவர்கள் உழைப்பு வீணாவது என்று பல பிரச்சனைகள் உண்டு. அத்தனையையும் மீறி அவர்கள் இத்தனை குழந்தைகளை மீட்டிருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.

கையில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் தாய்(?) எங்கு தென்பட்டாலும் உடனடியாக காவல்துறை ஒரு காப்பகத்தில் சேர்ப்பது நல்லது. அவர் உண்மையான தாயாய் இருக்கும் பட்சத்தில் (DNAபடி) அவருக்கு வருமானத்துக்கு ஒரு வழி செய்து அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். நகராட்சி அந்தஸ்து உள்ள எல்லா ஊர்களிலும் இந்தப் பிரிவு செயற்பட வேண்டும். கோயில்களில் உள்ள அரசு அதிகாரிகளும் இதில் ஈடுபடுத்தப் பட வேண்டும். ஒரு கோயில் அதிகாரி சுற்றுப் புறத்தில் உள்ள பிச்சை எடுக்கும் குழந்தை பற்றித் தகவல் தெரிவிக்காவிட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை என்று அறிவிக்க வேண்டும்.

குழந்தைகள் மீது கூடப் பரிவில்லாதவர் எத்தனையோ நம்மிடையே உண்டு. எனவே அரசாங்கம் அதிரடியாக நூற்றுக்கணக்கில் காணாமற் போகும் குழந்தைகளில் அனேகமாக எல்லோரையுமே காப்பாற்ற முடியும்.

குழந்தைகள் குடும்பத்தில், சமுதாயத்தில், அரசாங்க கவனத்தில் முன்னுரிமை பெறும் போதே வருங்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். 

(image courtesy: http://www.dalitfreedom.org.au , news courtesy: Deccan Chronicle)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s