நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்?


Mehta

நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்?

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு செல்வந்த தனியார் பள்ளி மாணவர்  இந்த ஆண்டு தங்கள் பட்டம் பெறும் நாளில் யார் பேச வேண்டும் என்று தேர்வு செய்த போது, அவர்கள் Nipun மேத்தாவைத் தேர்ந்தெடுத்தார்கள். இது Nipun மேத்தாவின் பேச்சின் சுருக்கம்:

படிப்பு முடிந்து நீங்கள் காலடி எடுத்து வைக்கும் உலகம் முன் எப்போதையும் விட நன்றாக இருக்கிறது. படிப்பறிவின்மை, குழந்தைத் தொழிலாளிகளின் துன்பம், குடிக்க நல்ல தண்ணீர் இன்மை என்னும் நிலையிலிருந்து உலகம் நிறையவே மீண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் மறைந்து ஜனநாயகம் தழைத்து வருகிறது.

மக்கள் கடுமையாக உழைத்து 260 பணி நேரம் சம்பாதித்தால் தான் வாங்க இயலும் 1895 ல் ஒரு மிதிவண்டியை. இன்று அவ்வாறில்லை.

Time magazine

இந்த வாரம், டைம் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி “நான், நான், நான்” (Me,Me,Me). தற்கொலை விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 30% வரை அதிகரித்துள்ளது. இந்தப் பத்தாண்டுகளில் 50% வரை செல்லும். வளிமண்டல மாசு வரலாற்றில் முதல் முறையாக 400 பிபிஎம் தாண்டியுள்ளது. இது ஒரு பனிமலையின் முகடு மட்டுமே.

இன்றைய மிகப் பெரிய சவால் நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் மிகவும் துண்டிக்கப் பட்டு விட்டோம். 4.5 பில்லியன் “பிடிக்கும்” பதிவுகள் உள்ளன முகநூலில் (Face Book). அதன் இணைப்புக்கள் 150 பில்லியன். கடந்த முப்பது வருடங்களை ஒப்பிட முதல் முறையாக அமெரிக்கக் குழந்தைகள் உடல் கோளாறுகளை விட ADHD போன்ற மனநல பாதிப்புக்களுக்குப் பெரிதும் ஆளாகி இருக்கிறார்கள்.

நாம் ஏனோ மின்னணு சாதனங்களிடம் நம் உறவுகளை ஒப்படைத்து விட்டு நிஜ உலக வாழ்வைப் பறி கொடுத்து விட்டோம்.

அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இன்னும் நம்மால் நம்மை மீட்டுக் கொள்ளும் திறனுடன் இதிலிருந்து வெளியே வர முடியும். Sandy Hook பள்ளியில் தம் மாணவருக்காகத் தம் இன்னுயிரை ஈந்த ஆசிரியர்களைக் காண்கிறோம். Boston Marathonல் பந்தய வீரர் பலரும் தம் ஓட்டத்தை முடித்த மறு கணம் காயப்பட்டவருக்காக ரத்த தான வங்கிகளைச் சென்றடைந்ததைக் கண்டோம். ஒரு துரித உணவக பரிசகர் Oklahomaவில் தமது ஒரு நாள் வரும்படி முழுவதையும் சூறாவளி தாக்குதலுக்கான நிவாரணத்துக்கு அளித்தார். அது பலரையும் நன் கொடை வழங்க ஊக்குவித்தது.

எனவே நெருக்கடி தாக்கும் போது நம்முள் பரிவு விழித்தெழுகிறது. தினசரி நடக்கும் பரிமாற்றங்களில் ஏன் ஒட்டுறவே இல்லை. அதை ஏன் நீங்கள் மறுமலர்ச்சி கொள்ளச் செய்யக் கூடாது?

“நான்-நான்-நான்” என்னும் மனநிலையிலிருந்து “நாம்-நாம்-நாம்” என்னும் மேலான நிலைக்கு நாம் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

என்னை பிறருடன் பிணைத்துக் கொண்ட சில தருணங்களை நான் இப்போது நினைவு கூறுவேன்.

Give

முதன்மையானது “கொடை” – கொடுக்கும் வழங்கும் பண்பு-

நீங்கள் எல்லோரும் பிறப்பதற்குப் பல காலம் முன்பு வெளியான Wall Street என்னும் படத்தில் காட்டப் படுவது போல ஆசை அதாவது முன்னுக்கு வரும் ஆசை, வெல்ல வேண்டும் என்னும் ஆவல் முக்கியமானது தான்.

நான் உங்கள் வயதில் இருக்கும் போது “சிலிகான் வேல்லி” யில் .com தொழில் ராட்சச வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. Service Space என்னும் நிறுவனத்தை நான் தொடங்கி லாப நோக்கற்ற அமைப்புக்களுக்கு இலவசமாக இணைய தளத்தை வடிவமைத்துக் கொடுக்கத் தொடங்கினேன். ஆயிரக்கணக்கில் நாங்கள் இணைய தளங்களை இலவசமாக அமைத்துக் கொடுத்ததைக் கண்ட ஊடகங்கள் “இவர்களுக்கு உள் நோக்கம் இருக்கிறது. பின்னாளில் பெரிய அளவு லாபத்துக்காக சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனை பிடிக்க இருக்கிறார்கள் ” என்று எங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் நாங்கள் எந்தவிதத்திலும் அந்த சேவையைப் பணமாக்க முயற்சிக்காத போது “இவர்களுக்கு வியாபார நுணுக்கம் தெரியவில்லை” என்றே பலரும் கருத்துத் தெரிவித்தனர். எங்கள் நோக்கம் பெருந்தன்மையுடனும் பரந்த மனப்பான்மையுடனும் ஒரு சிறிய சேவையை லாப நோக்கற்ற நிறுவனங்களுக்குத் தருவதாக மட்டுமே இருந்தது. “கர்மா கிச்சன்” என்னும் ஒரு உணவகத்தை நாங்கள் தொடங்கி “உங்கள் உணவுக்கான தொகை ஏற்கனவே உங்களுக்கு முன் வந்தவரால் கொடுக்கப் பட்டு விட்டது. நீங்கள் பின்னால் வருபவருக்காகக் கொடுக்கலாம்” என்னும் செய்தியுடன் நடத்திய உணவகத்தைக் கண்டு பலரும் நகைத்தனர். ஆனால் இன்று உலகில் பல இடங்களில் அந்த உணவகத்தின் கிளைகள் உள்ளன.

Harvardல் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் இருநூறு பேருக்கு திடீரெனப் பணம் வழங்கப் பட்டு அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது தர்ம காரியங்களுக்குக் கொடுக்கலாம் என்று ஒரு முடிவெடுக்கும் வாய்ப்புக் கொடுக்கப் பட்டது. பெரும்பான்மையினர் அதைக் கொடுத்து விட்டனர். நம் இயல்பு கொடுப்பதே ஒழிய தனக்கெனவே எடுத்துக் கொள்வதல்ல. யோசிக்க யோசிக்கத் தான் பணத்தைத் தனக்கெனவே வைத்துக் கொள்ளும் எண்ணம் வருகிறது.

பொருளாதாரக் கோட்பாடுகள் அனைத்தும் மனிதன் தன்னலமாக மட்டுமே செயற் படுவான் என்னும் அனுமானத்தில் எழுதப் பட்டுள்ளன. அது தவறு – மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், அன்னை தெரசா இவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் உலக சரித்திரத்தில் இடம் பெற்று நமக்குத் தரும் செய்தி – மனிதன் கொடுக்கும் இயல்புள்ளவன் என்பதே.

Ruby Bridges என்னும் சிறுமியைப் பாருங்கள்:

14.11.1960 அன்று- முழுவதும் வெள்ளைக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆறு வயதான ரூபி ஒரே கருப்பு இன மாணவியாகச் சேர்ந்தாள். எந்த ஒரு ஆசிரியரும் அவளுக்குப் பாடம் நடத்த முன் வரவில்லை. திருமதி ஹென்றி என்னும் ஒரே ஒரு ஆசிரியை மட்டும் ரூபியிடம் அன்பு காட்டினார். அவர் ரூபியை மௌனமாகப் பொறுமை காக்கும்படி கூறினார். ரூபிக்கு கொலை மிரட்டல்கள் வரும். அவள் வகுப்புக்குப் போகும் வழியில் அவள் மீது பொருட்கள் வீசி எறியப் படும் வசவுகள் ஒலித்த படியே இருக்கும். ரூபி திருமதி ஹென்றியின் அறிவுரைப் படி எதுவும் பேசாமல் தன் வழியில் போய்க் கொண்டிருப்பாள். ஒரு நாள் திருமதி ஹென்றி தள்ளி இருந்து கவனித்த போது ர்ருபியின் உதடுகள் அசைவது மட்டும் தெரிந்தது. திருமதி ஹென்றி ரூபியிடம் ” நான் உன்னைப் பொறுமையாக மௌனம் காக்கச் சொல்லியிருந்தேனே. ஏன் அவர்களிடம் பதிலளித்தாய்? அவர்களிடம் என்ன கூறினாய்?” என்று வினவினார். ரூபி ” நான் சத்தமின்றி இறைவனிடம் இவர்களை மன்னிக்கும்படி வேண்டினேன். அதுவே உதடசைவு. அவர்கள் அறியாமல் செய்கிறார்கள். மன்னியும் என்று வேண்டினேன்”. ஆறு வயது சிறுமியிடம் இவ்வளவு பெருந்தன்மை என்றால் மனித மனதின் மாண்பு பற்றி நாம் மிகக் குறைவான மதிப்பே கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

என்றுமே தீர்ந்து போகாத பணம் நம்மிடம் உண்டு. அதுவே அன்பு. பரிவு என்னும் பெரிய கடலில் நீங்கள் அனைவரும் ஆழ்ந்து பல கொடுப்பது என்பது எந்த அளவு வளமானது என்பதை உணருங்கள்.

Receive

இரண்டாவது நற்குணம் – பெற்றுக் கொள்ளுதல்:

Service Space நிறுவனத்தில் நீல் மற்றும் திலான் என்னும் பதினான்கு வயதான இரு சிறுவர்கள் intern பயிற்சிக்காக வந்திருந்தார்கள். இருவருக்கும் “30 நாட்கள் அன்பு என்னும் சவால்” என்னும் Project கொடுக்கப் பட்டது. சிறிய சிறிய அன்பு காட்டும் செயல்களை அவர்கள் செய்யத் துவங்கினர். சைக்கிள் “டயர் பஞ்சர்” ஆன ஒரு சக மாணவருக்கு உதவுவது, அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவுவது, யாரேனும் ஒரு குழந்தையை மிரட்டினால் அந்த நேரம் அந்தக் குழந்தைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது , தங்களுக்குக் கிடைத்த பரிசையெல்லாம் ஒரு ஏழைக் குழந்தைக்குக் கொடுத்து விடுவது என்று தொடங்கி, அன்பு காட்டுவதே அவர்களுக்கு அன்றாடப் பழக்கமாக அவர்களின் இயல்பாக ஆகி விட்டது. மாற்றுத்திறனாளிகளான சில மாணவர் ஒரு நடன விருந்தில் பங்கேற்க விரும்பினர். ஆனால் அவர்களால் அந்த அரங்கிற்குள் நுழைய இயலவில்லை. சிறுவன் நீல் தனது சகாக்களுடன் சென்று அவர்களைச் சுற்றி நடனம் ஆடினான். அவர்கள் அனைவரும் மிகவும் மனம் மகிழ்ந்தனர்.

ஒரு நாள் நீல் ஆழ்ந்த யோசனைக்குப்பின் என்னிடம் “இப்படி எல்லாம் செய்யும்போது நான் மிகவும் சுயநலமாக இருக்கிறேன் என்றே தோன்றுகிறது” . அது உண்மை தான். தலாய் லாமா “அன்பு காட்டுங்கள். சுயநலமாய் இருங்கள்” என்றார். அதற்கு என்ன பொருள்? கொடுக்கும் போது அன்பை செலுத்தும் போது கொடுப்பவர் மனம் பன்மடங்கு மகிழ்ச்சி அடைகிறது.

ஆராய்ச்சிகள் காட்டுவது என்னவென்றால் மக்கள் அன்பு மயமாக நெருங்கிப் பழகும் போது அவரர்களது இதயத் துடிப்புகள் ஒன்றிணைந்தது போல ஒரே மாதிரி சீராக இருக்கின்றன – உடலால் தொட்டுக் கொள்ளாமலயே.

கூட்டிக் கழித்தால் விடை 0 என்று வரும் கணக்கு அல்ல மகிழ்ச்சி. நான் புன்னகைத்தால் என் கணக்கில் ஒரு புன்னகை குறையாது. கூடும். நான் அன்பு செலுத்த செலுத்த அன்பு எனக்குள் மிகுந்து விடும். வெளியே கொடுக்கும் போது உள்ளே அன்பு சேருகிறது. இது என்ன ஒப்புமை என்பதை நாம் ஆழ்ந்து யோசித்தால் இதன் விடை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றாய்த் தென்படும்.

ஒரு விஷயம் மிகவும் தெளிவானது – நாம் வெளிப்புறத் தோற்றம் பற்றி மட்டுமே கவனமாயிருந்தால் நாம் பதவிகளையும் பொருட்களையும் தேடி அவற்றின் பின் அலைவோம். அது வெறுமையையே கொடுக்கும். நாம் நம் உள்ளேயுள்ள உண்மையுடன் தொடர்பில் இருந்தால் நம் மனதில் மகிழ்ச்சி, நல்ல குறிக்கோள் மற்றும் நன்றி இவையே இருக்கும்.

மூன்றாவது நற்குணம் : நடன அசைவு போல இயங்குவது-

நாம் கொடுப்பது வாங்கிக் கொள்வது என்னும் கணக்கை எப்போதுமே பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் மகிழ்ச்சியின் தாளம் தவறி விடுகிறது. நல்ல நடனமாடும் திறனுடையவர்களின் பயிற்சி தன் பாத உடலசைவுகளை சரியாக வைத்துக் கொண்டு பின் உடன் நடனாமாடுபவருடன் இணைந்து ஆடுவது. அதாவது தான் பிசகாமல் இருப்பதன் மூலம் மற்றொருவருடன் இணைந்த நடனத்தைத்தப்பில்லாமல் ஆடுவது. கொடுப்பதும் அப்படியே – நம் தரப்பிலிருந்து தர வேண்டியவற்றைத் தந்த படி இருப்போம். நல்ல அன்பான மனித உறவுகள் தாமே நம்முடன் இணையும்.

உதாரணத்துக்கு என்னுடைய நண்பர்களில் ஒருவர் – நல்ல வெற்றிகரமான தொழிலதிபர்- அவரை எடுத்துக் கொள்வோம். உணவின் மீது நல்ல ருசி உடைய அவர் நல்ல உணவங்களில் சாப்பிடுபவர். அவர் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் அன்று திருமண நாளோ வேறு எந்த விசேஷ நாளோ என அங்கே உணவருந்த வரும் ஒரு ஜோடிக்கான தொகையை செலுத்தி விடுவார். தனது விவரங்களைத் தெரிவிக்கக் கூடாது என்று உணவக சிப்பந்திகளிடம் கூறி விடுவார். பல வருடங்கள் அவர் இப்படி செலவு செய்தார். ஆனால் ஒரு முறை அந்த ஜோடி அவரை சந்தித்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தி மிகவும் பிடிவாதம் பிடித்ததால் அவர் அவர்களை சந்திக்கச் சென்றார். அந்த ஜோடியில் மனைவியானவர் “நாங்கள் மாற்றுத் திறனாளிகளுக்குத் தொண்டு செய்து எங்கள் வருமானம் முழுவதையும் செலவு செய்து விடுகிறோம். வருடம் முழுவதும் பணம் சேர்த்து இன்று இந்த உணவை உண்ண வந்தோம். தாங்கள் எங்களுக்குச் செய்த உதவி எங்களை நெகிழ வைத்தது. நாங்கள் எத்தனையோ பேருக்கு சிறு சிறு உதவிகளைச் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கும் ஒருவரு உதவும் போது அது மனித இனத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது” என்று கண்ணீருடன் கூறினார். அதன் பிறகு அவர்கள் நண்பர்களானார்கள். அவர்களின் பணியில் என் நண்பரும் இணைந்தார்.

இந்த உதாரணத்தில் கொடுத்தவர் யார்? வாங்கிக் கொண்டவர் யார்? பயன் பெற்றவர் யார்? நடன அசைவு போல ஒரு சமயம் கொடுப்பவர் வாங்குபவர் இவ்வாறாக மாறி மாறி இருக்கலாம். நாம் சகமனிதருடன் அன்பின் வழியாகத் தொடர்பாக இருக்கிறோம். அதுவே இதன் மிகப் பெரிய நற்பயன்.

நிறைவாக சிலவற்றை சொல்கிறேன்;

சென்ற வருடம் ஒரு வீடற்ற பெண்மணிக்கு நான் எதாவது செய்ய விரும்பினேன். அவர் விரும்பிய ஐஸ் கிரீமை அவருக்கு வாங்கிக் கொடுத்தேன். அதற்கு நான் பணம் தந்த பிறகு ” நானும் தங்களுக்கு எதாவது செய்ய விரும்புகிறேன்” என்றார் அவர். “சரி” என்றேன். அவர் தமது கைப்பையில் இருந்து ஒரு சிறிய நாணயத்தை எடுத்தார். உணவகக் காசாளருக்கும் எனக்கும் அந்த நாணயத்தை வைத்து என்ன செய்வது என்று புரியவில்லை. சமயோசிதமாக நான் ” நமக்கு உதவிய இந்தப் பணியாளருக்கு “டிப்ஸ்” ஆக இதைக் கொடுங்கள்’ என்றேன். அவரும் அதை “டிப்ஸ் ட்ரே”யில் போட்டு விட்டார். இருப்பவர் இல்லாதவர் யாருமே கொடுக்கலாம். அன்பு என்பது ஆடம்பர விளையாட்டு ஒன்றும் அல்ல.

Martin Luther King

மார்ட்டின் லூதர் கிங் ” ஒவ்வொருவரும் மாபெரும் மனிதராக இயலும். ஏனெனில் ஒவ்வொருவரும் தொண்டு செய்ய இயன்றவரே” என்றார். லூதர் கிங் ” நீ புத்திசாலியாக இருந்தால் தொண்டு செய்யலாம்” , “நீ புகழ் பெற்றிருந்தால் தொண்டு செய்யலாம்” , “நீ பணக்காரனாயிருந்தால் இருந்தால் தொண்டு செய்யலாம்” என்று சொல்லவில்லை. அவர் “ஒவ்வொருவரும் மகத்தானவராக ஆகலாம். ஒவ்வொருவரும் தொண்டு செய்யலாம் ” என்றே கூறினார். மொழி இலக்கணம் தெரிந்திருக்க வேண்டுமா அன்பு செலுத்த? Thermodynamicsன் இரண்டாம் விதியை கரைத்துக் குடித்திருக்க வேண்டுமா அன்பு செலுத்த? இல்லை. கருணை நிறைந்த மனம் வேண்டும். அன்பே வடிவான ஆன்மா வேண்டும். அவ்வளவே.

வாழ்வின் தொண்டில் நீங்கள் மகத்துவம் அடைவீர்களாக. கொடுப்பதை, கொடுப்பதால் அன்பை மகிழ்ச்சியைப் பெறுவதை எப்போது விட்டு விடாதீர்கள். அன்பின் நடனத்தையும் தான்.

(courtesy: Friends who shared the entire text of speech by GMAIL)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

1 Response to நாம் ஏன் தனிமையில் வாடுகிறோம்?

  1. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s