மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம்


Aarohanam1-200x273

(imaage courtesy:http://www.tamilstudios.com )

மன நோயை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் – ஆரோகணம்

தொலைக்காட்சியில் அறிமுகமில்லாத நடிகர் நடிகைகளின் ஒரு படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு ஏழைக் குடும்பத்தில் தாயே எல்லாமும். அவருக்கு திருமண வயதில் ஒரு மகள். பதின்களில் ஒரு மகன். காய்கறிகள் விற்பவராக உழைத்து அவர் மகளின் திருமண ஏற்பாட்டையும் செய்து விடுகிறார். திருமணத்துக்கு சில நாட்கள் முன்பு அவர் காணாமற் போய் விடுகிறார். ஒரு நாள் முழுவதும் அவர் தேடப்படும் போது தான் பின் கதையை நாம் தெரிந்து கொள்கிறோம். தமது கணவனால் கைவிடப்பட்டவர் அவர். மறுமணம் செய்து கொண்ட கணவர் முன் தான் தலை நிமிர்ந்து வாழ முயலும் போது சிறிய அறை போன்ற குடியிருப்பின் சொந்தக் காரர்களான முஸ்லிம் தம்பதியினர் அந்த அம்மாளுக்கு ஆதரவு தருகின்றனர். காய்கறி விற்பது முதல் எல் ஐ சி முனவர் என்னும் தொழில் என்பது வரை செய்யும் திறன் கொண்ட அவருக்கு Bipolar Disorder. மன அழுத்தத்தின் ஒரு வகையே இது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் நாட்கணக்கில் வாரக் கணக்கில் சிறிய விஷயங்களைக் கூட நினைவு வைத்துக் கொள்ள முடியாமல், வழக்கமான பணிகளைக் கூட சரிவர செய்ய முடியாமல் இருப்பார்கள். தற்கொலை வரை போய் விடுவார்கள் சிலர். வேலையை விட்டு விடுவது அல்லது குடும்பத்தைப் பிரிவது இதெல்லாம் மன அழுத்தத்தில் கீழே போய் விடும் போது நடப்பது. இதன் நேரெதிராக மன உச்சத்தையும் இவர்கள் அடைவார்கள். அதிக உற்சாகம், அதிக உழைப்பு, அதிகப் பொதுத் தொடர்பு என்று இன்னொரு விளிம்புக்குப் போவார்கள்.
படம் முடியும் போது அவரின் அந்த நோயோடு போராடி அவர் தம் குழந்தைகளைக் காப்பாற்றியது நம் மனதில் பதிகிறது. அதே சமயம் ஒரு மருத்துவரின் விளக்கமும் படத்தில் இந்த நோய் நிலை பற்றி நமக்குக் கிடைக்கிறது.

Ernest Hemigway, Jhon Keats, போன்ற மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகள் Florence Nightingale என்னும் உலகப் புகழ் சேவகி, பல இசைக் கலைஞர்கள் எனப் பெரிய பட்டியலே இந்த நோயுடன் போராடி வாழ்ந்து மடிந்தவரே.

இசையில் உச்ச ஸ்தாயிக்குப் போவது ஆரோகணம் என்று அழைக்கப் படுகிறது. அவரோகணத்திலேயே தான் அதிகம் இருப்பார்கள் என்றே பல மருத்துவக் கட்டுரைகள் கூறுகின்றன. மன அழுத்தம் பரம்பரையாக வருவது என்று ஒரு கருத்தும் உண்டு. மன அழுத்தம் பாதிப்பவர்கள் அனேகம் தம் திறமை வெளிப்படவில்லை அல்லது தம் தரப்புக் கேட்கப் படவேயில்லை என்றே மனதுள் மருகுவார்கள். தொட்டாற் சிணுங்கி போல மனம் எளிதில் காயப் படுவதும் இவர் இயல்பு. குடும்பத்தினரோ, நட்பு, உறவு என்று அடுத்த வட்டத்திலோ இவர்களுக்கு ஆறுதல் கூற யாருமே முன் வர மாட்டார்கள். அறிவுரை கூறவே அனைவரும் விரும்புவார்கள். இது மேலும் மனம் காயப் படவும் மன அழுத்தம் அதிகரிக்கவுமே வழி வகுக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு பக்கபலமாக இருக்க முன் வருபர்கள் மிக மிகக் குறைவு. மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு அனேகமாக யாருமே ஆதரவாக இருக்க முயலுவதில்லை.

தமிழில் ஒரு படம் மன அழுத்தம் மையக் கருவாக வந்திருப்பது மிகவும் வித்தியாசமான முயற்சி.

தொடர்புடைய பதிவு : பனிச்சிற்பத்துக்கு சூடு வைக்காதீர்

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s