உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன


d4bbea0af12f5031f389da2c531cf1ef

உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன

உடனடி உணவுகள் விற்கும் போது அவற்றை அடைக்கும் பொட்டலங்கள் மீது எச்சரிக்கை இத்தனை காலமாக துண்டுச் சீட்டுக்களாக ஒட்டப் பட்டு வந்தன. இப்போது இதில் மாற்றம் கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் ஐரோப்பியக் கூட்டமைப்பும். உடலுக்கு அதிக எடை தரக்கூடிய அல்லது அதிக மாவுச்சத்து உடைய உணவுகள் “சிவப்பு” என்னும் வகைப்படுத்துதலின் கீழ் அந்த நிற முத்திரையுடன் இருக்கும். குறைந்த அளவு அல்லது தாளும் அளவு கொழுப்பும் மாவுச்சத்துமான உணவுகள் “பச்சை” என்னும் வகைப்படுத்துதலில் வரும். இதைத் தவிர ஒவ்வொரு பொட்டலத்தின் மீது ஒரு உணவில் இருக்கும் கொழுப்பு, மாவுச்சத்தின் எடை, சதவீதம் இவை கண்டிப்பாகக் குறிப்பிடப் பட வேண்டும். ஒரு வளர்ந்த ஆள் ஒரு நாளில் அந்த வகை உணவை எவ்வளவு சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப் பட வேண்டும். ஐரோப்பியக் கூட்டமைப்பு இன்னும் நவீனமான ஒரு வழிமுறையைக் கொண்டு வருகிறது. “லேசர்” கதிர்களால் பழங்களின் மீது அவை தயாரிக்கப் பட்ட தேதி மற்றும் அவற்றில் உள்ள உணவுச்சத்து விவரங்களை பதிக்கும் முறை வர இருக்கிறது.

மிகப் பெரிய உடனடி உணவு விற்கும் நிறுவனங்கள் இதற்குக் கட்டுப்பட ஒப்புக் கொண்டன. இந்தக் கட்டுப்பாட்டை, விதி முறைகளை இங்கிலாந்து கொண்டு வரக் காரணம் அதிக எடை என்னும் பிரச்சனைக்காக அரசுக்கு ஆகும் கடுமையான மருத்துவச் செலவைக் குறைப்பதே.

பேருந்துகளில் இருவர் அமரும் இடம் தேவைப்படும் ஒரே நபரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவருக்காகக் காத்திருப்போரின் பெரும்பான்மையினர் அதிக எடை கொண்டோரே. அதிக எடை குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவு. அரிசிச் சோற்றை வரைமுறையின்றி விழுங்காவிட்டால் நம்மைப் பண்பாடற்றவர் என்று கூறிவிடுவார்களோ என்று பயப்படுவது போல மாவுச் சத்து உணவுகள் மீது மாறாக் காதல். வெகு தூரம் போக வேண்டும் நாம். இந்திய அரசு உடனடியாக இந்த திசையில் நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

(nEws Courtesy Deccan Chronicle and image courtesy: http://pinterest.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

One Response to உணவுப் பொட்டலங்களின் மீது எச்சரிக்கை- இங்கிலாந்தும் ஐரோப்பாவும் விழித்துக் கொண்டன

  1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s