வைகோவின் உருப்படியான யோசனை


vaiko

வைகோவின் உருப்படியான யோசனை

உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதிகள் ஓராண்டு கூட அனேக சமயங்களில் பதவியில் இருக்கவில்லை. ஓய்வு வயது நிறைவுற்றதே காரணம். தலைமை நீதிபதி குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்னும் படியான ஒரு முறையைக் கொண்டு வரும் படி வைகோ கூறி இருக்கிறார். வைகோ அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். வைகோவின் யோசனைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எந்த ஒரு வழக்கும் நீதிபதி மாறும் போது பாதிக்கப் படும். சில சமயங்களில் மீண்டும் சில வாதப் பிரதிவாதங்களை நடத்த வேண்டி இருக்கும். எந்த திசையில் எந்த அணுகு முறையில் ஒரு நீதிபதி ஒரு வழக்கைப் பற்றிய குறிப்புகளை வைத்திருந்தார் என்பது அவருக்குப் பின்னால் வருபவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இவ்வாறு பல வழக்குகள் பாதிக்கப் படலாம். தலைமை நீதிபதி இரண்டாண்டுகளாவது இருந்தால் முக்கியமான வழக்குகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கிச் செல்ல வாய்ப்புண்டு. பல சமயங்களில் சில மாதங்களே பணிக்காலம் உள்ள தலைமை நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக மாறி இருக்கிறார்கள்.

மது எதிர்ப்பில் வைகோ எடுத்த நடவடிக்கைகள் அவரது முதிர்ச்சியைக் காட்டின. இந்த யோசனையும் அது போன்றதே. அரசியல் இல்லாமல் சமூகப் பணி செய்திருந்தால் வைகோ இன்னும் நிறையவே சாதித்திருப்பார். தமிழ் நாடு பயன்பெற்றிருக்கும்.

 

(imagecourtesy:

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , . Bookmark the permalink.

3 Responses to வைகோவின் உருப்படியான யோசனை

  1. பொதிகைச்செல்வன் says:

    அரசியலும் சமூகப்பணிதான். வைகோ இப்போது சமூகப்பணிதான் செய்து வருகிறார். அவரால் பெருமளவு பயனடைந்துள்ளது தமிழகம்.

  2. srinivasan K says:

    நல்ல யோசனை. நடைமுறைப் படுத்த வேண்டும்.

  3. இனியன் says:

    அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s