குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை


bull

குடும்பத்தில் ஒரு நபர் – கி.ராஜநாராயணன் சிறுகதை

கரிசல் காடு என அழைக்கப் படும் திருநெல்வேலிப் பக்க நாயக்கமார் பண்பாடு, சொல்லாடல் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான பல பதிவுகளுக்காக கி.ராஜநாராயணன் புகழ் பெற்றவர். மண் வாசனை மட்டுமல்ல கதை சொல்லியின் நடை ஒரு உறவினருடன் பேசும் அனுபவத்தையே நமக்குக் கொடுக்கும். தமிழ் இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது.

அவரது பல பதிவுகளில் விவசாயிகளை சம்சாரிகள் என்று குறிப்பிடுவார் கி.ரா. அப்படி ஒரு விவசாயியின் “குடும்பத்தில் ஒரு நபர்” வேறு யாருமல்ல. அவர்களது நிலத்தை உழும் காளை தான். அதன் பெயர் “புல்லை”. அயிரக்கா என்னும் அந்தக் குடும்பத்தின் தலைவியும் தொட்டணன் என்னும் குடும்பத் தலைவனும் அசை போடாமல் சீக்காகி இருக்கும் காளையின் நிலை கண்டு மனம் துடிக்கின்றனர். அந்தக் காளை சீதனமாக அயிரக்காவுடன் வந்தது. அவளின் தந்தையால் நகை பணம் என்று கொடுக்க முடியவில்லை. ஒரு கன்றுக் குட்டியாக இருந்தது “புல்லை” அவள் சிறுமியாக இருக்கும் போது. அப்போது அவளுடைய அப்பா “இது தானம்மா நான் தரும் சீதனம் “என்று கூறிக் கண்ணை மூடினார். சிறுமி அயிர்க்கா அதை மிகவும் கொஞ்சித் தடவிக் கொடுத்து அன்பு பாராட்டினாள். அவளுக்குத் திருமணமாகும் போது அது வளர்ந்த காளையாயிருந்தது. அதைப் பற்றிய கி.ரா.வின் வர்ணணையைப் பார்ப்போம்:

“கல் குளம்பு, அதிலும் குத்துக் குளம்பு, குறுங்கால். அதிலும் சன்னமான ஏறுவால். ரெட்டைக் குருத்து முதுகு, ஒட்டுத் தாடி, ரெட்டை நாடி மார்பு, பொய்க்கண் திரட்சி, உடும்புத் தலை, கிலாக் கொம்பு, பட்டு நிறத்தில் இருக்கும் அதன் உடம்பு மேல் வெளிச்சம் மினுமினுக்கும். இத்தனை அழகுகள் அமையப் பெற்றிருந்தது அந்தப் புல்லை!” . கி.ரா. சாண்டில்யன் பெண் கதா பாத்திரங்களை வர்ணிக்கும் அளவு ஒரு காளையை வர்ணிக்கிறார் என்றால் அவருக்கு விவசாயம் மீதும் கிராம வாழ்க்கையின் மீதும் உண்மையான ஈடுபாடும் தமது பண்பாடு என்னும் சொந்தமான உணர்வும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கணவன் தொட்டணன் இது வரை “பண ஏர்” வைத்தே உழுது வந்தான். இனி யாரோடாவது “கூட்டு மாடு” சேர்த்துக் கொண்டு உழலாம். அவனிடன் நிலம் இருந்தது. கூட்டுமாடாகப் பக்கத்து நிலத்துக்காரர் போன வருடம் தமது மாட்டைக் கொடுத்தார். இந்த வருடம் தொட்டணன் தனது மாட்டைக் கொடுக்க வேண்டும். ஒரு முறை கூட்டு மாடு கிடைக்காமல் தொட்டணனே ஜோடி மாடு போல உழைத்து மூச்சுப் பிடிப்பு வந்து மிகவும் சிரமப் பட்டான்.

கிராமத்தில் எவ்வளவோ மாடுகள் சீக்கான போது தொட்டணனும் அயிரக்காவும் தெய்வக் குத்தம் என்றும் நாட்டு வைத்தியம் பார்த்திருக்கலாம் என்றும் கருதினர். ஆனால் இரண்டு நாயக்கர்கள் “வாகடம்” என்னும் சித்த மருத்துவ நூலை வைத்துக் கொண்டு வாசித்து உத்தேசமாக சில மூலிகைகளைத் தேடி வந்து கொடுக்கிறார்கள். ஆனாலும் அவைகள் பலனளிக்கவில்லை. ஒரு உறவுக்காரர் வந்து மாட்டு வைத்தியரைக் கூட்டி வந்து காட்டும்படி அறிவுரை கூறுகிறார். தொட்டணனும் சென்று மிகவும் சிரமப் பட்டு அவரை அழைத்து வருகிறான். அவருக்கு அலுவலக “ஜீப்” கிடைக்காததால் அவர் அவனுடன் பஸ்ஸில் வருவதற்கு நேரமாகி விடுகிறது. அதற்குள் “புல்லை” இறந்து விடுகிறது. தொட்டணனும் அயிரக்காவும் கதறிக் கதறி அழுகின்றனர். சக்கிலியர்களிடம் மாட்டைக் கொடுக்க மனம் ஒப்பாமல் வீட்டுக் கொல்லையில் புதைக்க முடிவெடுக்கின்றனர். கிராமத்துப் பெரியவர்களிடம் ” நான் பெற்ற குழந்தையே போயிருந்தாலும் இப்படிக் கலங்கி இருக்க மாட்டேன் ” என்கிறான் தொட்டணன்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக பக்கத்து நிலக்காரருக்கு “கூட்டு மாடா”கத் தானே உழுவதற்கு முடிவெடுக்கிறான் கோடைக்கால சாகுபடியில் அவன் எந்த அளவு உடல் பாதிக்கப் படுவான் என்று அயிரம்மா மனம் பதறுகிறாள்.

கிராமத்தில் ஒரு மாடு எந்த அளவு நேசிக்கப் படுகிறது என்பதை கதை நமக்கு உணர்த்துகிறது. விவசாயிகளின் எளிமை, கொடுத்த வாக்கைக் காக்கும் மாண்பு, மூட நம்பிக்கைகள், குடும்பத்துள் உள்ள பாசப் பிணைப்பு எல்லாவற்றையுமே நாம் புரிந்து கொள்கிறோம். அவருடைய படைப்புகள் நம்முடன் உரையாடும் நம்முள் ஊடுருவும்.

image Courtesy

agritech.tnau.ac.in

(Image Courtesy:

agritech.tnau.ac.in

 )

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s