ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா.கந்தசாமியின் சிறுகதை


256px-Hausziege_04

ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா.கந்தசாமியின் சிறுகதை

ஒரு சிறுகதையில் நம் நாட்டு மக்களை ஆட்டிப் படைக்கும் முக்கியமான (தீர்வில்லாத) பிரச்சனைகள் எல்லாவற்றையும் கொண்டு வர முடியுமா? சா.கந்தசாமியால் முடியும். பிரமிக்க வைக்கிறது அவரது சிறுகதை.

சுருக்கமான கதை இதுதான்:  ஆறுமுகசாமி மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய சிறுவன். அவன் அப்பா ஒரு அரசியல் கட்சிக்காக வண்டி ஓட்டிக் கொண்டு போகும் போது சாலை மறியல் செய்பவர்கள் வெட்டி வீழ்த்திய மரம் காரின் மீது விழ அங்கேயே துர்மரணம் அடைகிறார். அவனது அப்பாவின் மைத்துனர் வங்கிக் கடன் மூலம் ஆடுகளை வாங்கி வளர்த்தால் அது ஜீவனத்துக்கு உதவும் என்று கூறிக் கடன் வாங்க ஜாமீன் கையெழுத்துப் போட்டு உதவுகிறார். ஆடுகள் பெருகி சுமார் 20 ஆடுகள் ஆகி விடுகின்றன. ஆரம்பத்தில் தானே ஆட்டை மேய்ப்பதாகக் கூறும் தாய் பின்னர் அதை ஆறுமுகசாமியின் பொறுப்பில் தான் விடுகிறாள். இதனால் ஆறுமுகசாமியின் படிப்பு மிகவும் பாதிக்கப் படுகிறது. அரைப் பரிட்சையில் ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைந்து விட்டது. எனவே ஒரு பாடத்தில் சில நிமிடங்கள் ஆழ்ந்து விடுகிறான். அதற்குள் 10 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த புறம்போக்கு நிலத்தைத் தாண்டி நெடுஞ்சாலைப் பக்கம் சென்று விடுகின்றன. அதை கவனித்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த ஆடுகளைத் தனது என்று கூறி வழியில் ஆடு வாங்கச் சென்று கொண்டிருந்த ஒரு லாரிக்காரனிடம் விற்றுப் பணத்தை எடுத்துக் கொண்டு போய் விடுகிறார். முதல் நாள் தான் தூரத்து உறவான ஒருவர் தம் கத்திரிக்காய்த் தோட்டத்தில் புகுந்ததற்காக ஒரு ஆட்டைக் கட்டி வைத்து ஒரு நாள் கழித்து எச்சரித்துத் திருப்பிக் கொடுத்தார் (கதை இதில் இருந்து தான் சொல்லப் படுகிறது). காணாமற் போன ஆடுகள் அவர் தோட்டத்துக்குள் இருக்குமோ என்று ஆறுமுகசாமி விரைகிறான். நிலக்காரர் சத்தம் போட்டுக் கொண்டே பின்னால் வருகிறார்.

படித்து முடித்ததும் நம் மனதில் தைப்பது அந்த இன்ஸ்பெக்டரின் அறவுணர்வோ, மனித நேயமோ இல்லாத அடாவடிச் செயல். இது அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த அளவு தன்னலமுள்ளோராகவும், மனசாட்சி அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது.

அடுத்தது அவன் பள்ளியில் முதல் மாணவன் என்று வங்கி அதிகாரியிடம் அவன் கூறும் போது “நன்றாகப் படித்து வங்கியிலேயே நீ வேலைக்கு வரலாம்” என்று உற்சாகப் படுத்துவது. தானே ஆடு மேய்ப்பேன் – மகனின் படிப்பு முக்கியம் என்று தன் உறவினரிடம் பேசும் தாய் மனம் மாறி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு விதவை நடமாடி இப்படி ஒரு தொழிலைச் செய்ய சமூகம் அனுமதிக்காததே ஆறுமுகசாமி ஆடு மேய்க்கக் காரணம் என்று நாம் புரிந்து கொள்கிறோம். அதாவது சமூகக் கட்டமைப்பில் விதவைக்கு எதிரான மனப்பாங்கு அவளது குழந்தைகளையும் சேர்த்தே பாதிக்கிறது.

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் அப்பாவி உயிர்கள் பலியாவது குறித்து கட்சிகளோ அரசோ கவலை கொள்வதில்லை என்று சாடியிருப்பதே அவனது தந்தை இறந்த விதம் பற்றிய விவரம் நமக்கு உணர்த்துவது. ஒரு அரசியல் மாநாட்டுக்காகத்தான் அவனது அப்பா கார் ஓட்டினார். ஆனால் அவர் உறுப்பினராகப் போகவில்லை. தொழிலாளியாகப் போனார். எனவே தொழிலாளிக்கு என்ன ஆனாலும் அவன் ஈடுபட்ட அரசியல் நிகழ்வுக்குப் பொறுப்பான கட்சிக்கு அக்கறை இல்லை என்பதும் நமக்குப் புலனாகிறது.

“வங்கியில் இப்போது நம் ஜாதி ஆள்தான் மேனேஜர். இப்போது ஓரளவு நமக்குக் கடன் கிடைப்பது சுளுவாகி இருக்கிறது” என்று ஒரு பகுதியில் உரையாடல் குறிப்பு உள்ளது. அப்போது அரசுப் பணியில் இருப்பவர்கள் ஜாதி பேத உணர்வுடன் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று புரிகிறோம்.

இவ்வாறாக, மனித நேயமில்லாத அதிகார மையங்கள், அதிகாரிகளால் ஏழைகளுக்கு அரசின் நலத்திட்டத்தில் கிடைக்கும் சொற்ப பலனும் பறி போவது, குறுகிய சமூகக் கட்டுப்பாடுகளால் விதவைகளின் குடும்பமே பின்னடைவது, மனித நேயமில்லாத உறவு, அரசுப் பணியாளர்களால் வளரும் தலைமுறையும் பாதிக்கப் பட்டு மக்கள் என்றும் வறுமையினின்று விடுபட முடியாமற் போகிறார்கள் என்று நமக்கு சிறுகதை காரமாக உணர்த்துகிறது. குழந்தைத் தொழிலாளிகள் பிரச்சனையில் முழு சமூகமுமே பொறுப்பேற்க வேண்டும் என்னும் செய்தி உள்ளார்ந்து நம்மைத் தைக்கிறது.

சா.கந்தசாமியின் சாயா வனம் அவசியம் படிக்க வேண்டிய நாவல். தமிழுக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. ஆறுமுகசாமிக்குத் தன் ஆடுகளைத் திருடியது யார் என்று எப்போதுமே தெரியப் போவதில்லை. மக்கள் நிலையும் அதுதான்.

(Image courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s