பெரிய கோவில் – பெரிய கேள்விகள்


450px-Brihadeeswarar_Temple_2006118_1

பெரிய கோவில் – பெரிய கேள்விகள்

தீராநதி ஆகஸ்ட் 2013 இதழில் பெரிய கோவில் பற்றிய சில பெரிய கேள்விகளையும் நாம் எதிர்பார்க்காத பதில்களையும் பிரபஞ்சன் (தோ. பரமசிவன் நூலை வைத்து) அவர்களிடம் இருந்து தருகிறார்.

1. தில்லைக் கோயிலை அவ்வளவு பாடிய சேக்கிழார் ஏன் தஞ்சைக் கோயிலைப் பாடவில்லை ? ராஜராஜ சோழன் காலத்தில் போரிட்டு, எதிரிகளின் நாட்டில் உள்ள செல்வங்களைக் கொணர்ந்து தன் ராஜ்ஜியத்தில் தன் புகழை நிலைநாட்டுவதில் முனைந்தார். இதில் சேர, பாண்டிய, ஈழத் தமிழ் அரசர்கள் அடக்கம். (மக்களைக் கொல்பவன் ராஜராஜனாக இருந்தால் என்ன? ராஜபட்சேவாக இருந்தால் என்ன என்று ஆணித்தரமாய் வாதிடுகிறார் பிரபஞ்சன்)

2.ராஜராஜ சோழன் ஏகாதிபத்தியவாதி என்பதற்கு ஆதாரமென்ன? -மூன்று ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார் தோ.பரமசிவன் – ஒன்று – “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள” என்கிறது ராஜராஜனின் “மெய்கீர்த்தி”. அதன் பொருள் செல்வமும் நிலவளமும் பூமியில் வேறு யாருக்கும் கிடையாது என்பதாகும். அதாவது எதிரிகளின் கஜானவைக் கொள்ளையடித்த பின் வேறு என்ன மிஞ்சும் அவரிடம்? இரண்டு – எதையும் தர வரிசைப் படுத்துதல் – ராஜராஜன் அரண்மனையின் முத்துக்களின் தரம் பற்றிய குறிப்புகள். மூன்று- அளவுகளின் கூர்மை அல்லது துல்லியத் தன்மை -கல்வெட்டுகளில் நில அளவுகள் மிகவும் துல்லியமாக உள்ளன..

3.பெரிய கோவில் தமிழ்ச் சைவ நெறியின் படி கட்டப் பட்டதா? -இல்லை. காஷ்மீரத்து பாகபத சைவ நெறிப்படி கட்டப்பட்டது.

தீண்டாமை அந்தக் காலத்தில் இருந்ததாகவும், இரண்டு சுடுகாட்டு முறை இருந்ததாகவும் குறிப்பிடும் பரமசிவன் பிறரை மட்டுப் படுத்தித் தன்னை மட்டுமே மெலெழுப்பிக் காட்டுவதே ஆதிபத்திய குணம் என்னும் அவர் 133 அடி திருவள்ளுவர் சிலையும் 1000 பெண்கள் தஞ்சைக் கோயிலில் பரத நாட்டியம் ஆடியதையும் ஆதிபத்திய அடையாளங்களாகவே காண்கிறார்.

(Image Courtesy: Wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பெரிய கோவில் – பெரிய கேள்விகள்

  1. VIYASAN says:

    //இதழில் பெரிய கோவில் பற்றிய சில பெரிய கேள்விகளையும் நாம் எதிர்பார்க்காத பதில்களையும் பிரபஞ்சன் (தோ. பரமசிவன் நூலை வைத்து) அவர்களிடம் இருந்து தருகிறார்.//

    அவரின் பதிலை எப்பொழுது பதிவு செய்வீர்கள். அவரது பதில்களை முழுமையாக பார்க்க ஆவலாக இருக்கிறது ஏனென்றால் கேள்விகள் எல்லாமே வெறும் முட்டாள் தனமானவை. 🙂

    • விடுபூக்கள் என்னும் தொ.பரமசிவனின் நூலை முன் வைத்து பிரபஞ்சன் தீராநதி ஆகஸ்ட் 2013ல் எழுதிய கட்டுரையை வாசித்த போது அதில் என் மனதைத் தொட்ட விஷயங்களை நான் அனைவருடனும் பகிர்ந்தேன். அவ்வளவே. விரிவான ஆதாரம் மற்றும் நுட்பமான விஷயங்களுக்கு நாம் பரமசிவன் அவர்களின் நூலை வாசிக்க வேண்டும். அன்பு சத்யானந்தன்

  2. உண்மை தான், ஏகாதிபத்தியங்கள் இரக்கமற்றவை சுய விளம்பரங்களை விளம்புமளவுக்கு சின்னங்களை நிறுவிக் கொள்ளும். எல்லாம் சரி, ராஜராஜன் காலத்தில் ஏது ஈழத் தமிழ் மன்னர்கள், அவ்வாறு யாரேனும் உண்டெனில் குறிப்புத் தருக, அறிய ஆவல்.

    • விடுபூக்கள் என்னும் தொ.பரமசிவனின் நூலை முன் வைத்து பிரபஞ்சன் தீராநதி ஆகஸ்ட் 2013ல் எழுதிய கட்டுரையை வாசித்த போது அதில் என் மனதைத் தொட்ட விஷயங்களை நான் அனைவருடனும் பகிர்ந்தேன். அவ்வளவே. விரிவான ஆதாரம் மற்றும் நுட்பமான விஷயங்களுக்கு நாம் பரமசிவன் அவர்களின் நூலை வாசிக்க வேண்டும். அன்பு சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s