கார்னிவல் – பி.எஸ்.ராமையாவின் சிறுகதை


bsramaiah

கார்னிவல் – பி.எஸ்.ராமையாவின் சிறுகதை

பி.எஸ்.ராமையா என்னும் இலக்கியவாதியும் சினிமா வசனகர்த்தாவுமானவரைப் பற்றிய அறிமுகம் நமக்கு “மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா” என்னும் தினமணி கட்டுரையில் கிடைக்கிறது.

பி.எஸ்.ராமையாவின் “கார்னிவல்” சிறுகதையைப் படிக்கும் போது 80 வருடத்துக்கு முன்பு எழுதப் பட்ட ஒரு கதையைப் படிக்கிறோம் என்றே தோன்றவில்லை. ஒன்று கதை சொல்லும் பாணி கிட்டத் தட்ட சமகாலத்தில் வரும் கதைகளுடன் ஒப்பிடும் அளவு உள்ளது. வெளிப்படையான கதை. மறுபக்கம் சமுதாயத்தின் – குறிப்பாக சமுதாயத்தின் மேல் தட்டின் – போலித் தனத்தைச் சாடுவதில் கதை மிகவுமே வெற்றி கண்டிருக்கிறது.

வனஜா என்னும் ஒரு தாசி சொல்லும் கதை இது. வனஜி, வனஜாட்சி என்று மாற்றி அவளை வைப்பாட்டியாக வைத்திருக்கும் செல்வந்தர் கூப்பிட்டால் மிகவும் ஆசையாய் சந்தோஷமான மனநிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். வனி என்று கூப்பிட்டால் உற்சாகத்தின் உச்சக் கட்டத்தில் இருக்கிறார் என்றே பொருள். கதை துவங்கும் போது அவர் மது அருந்திக் கொண்டிருக்க வனஜா வீணை வாசித்து அவரை மகிழ்விக்கிறாள். ஆனால் பங்களா வாசலில் சிலர் குடித்து விட்டுப் போடும் சத்தம் அவரையும் அவளது இசையையும் பாதிக்கவே அவர் பிரம்பெடுத்துக் கொண்டு சென்று அவரை விட உடல் வலுவில் வாட்ட சாட்டமான கூலிக்காரர்களை அடிக்க “நாளெல்லாம் உழைச்சதுக்கு அவன் கூலியைத் தர மாட்டேங்கிறான் சாமி. ஆளுக்குக் கொஞ்சம் கள்ளை வாங்கி ஊத்திப் போட்டுப் போங்கடாங்கறான் எசமான்” என்று சத்தம் செய்த போதையில் இருந்த கூலிக்காரர்கள் விளக்குகின்றனர். அதன் பிறகு மன மாற்றத்துக்காக அவர் “கிங்க்ஸ் கார்னிவல்” என்னும் கொண்டாட்ட மைதானத்துக்கு வனஜாவை அழைத்துச் செல்கிறார். அங்கே உள்ள சத்தம் வனஜாவுக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இக்காலத்தில் பொருட்காட்சி என்று அழைக்குமிடத்தில் இருப்பது போல ரங்க ராட்டினம், உணவு, மாய மந்திரம் (மாஜிக்) , நடனம் இவைகள் உள்ளன “கார்னிவலி”ல். திரும்பி வரும் போது காரை அவர் ஒரு குறுக்குத் தெரு வழியாக ஓட்டுகிறார். அங்கே ஒரு கருப்பான இளம் பெண் வேசித் தொழிலில் தன்னை அனுபவித்தவன் பேசிய தொகையான எட்டணாவைத் தரவில்லை என்று ஊரைக் கூட்டி நியாயம் கேட்கிறாள். அங்கு கூடியுள்ள கூட்டத்தில் இந்தப் பணக்காரன் “இந்த விபசாரி நாய்களையெல்லாம் பிடித்துப் புளியம் விளாறினால் அடித்து ஊரை விட்டே துரத்த வேண்டும்” என்கிறார். இரவு மறுபடியும் வீணை வாசிக்கச் சொல்லுகிறார். வனஜாவுக்கு மனம் லயிக்கவில்லை. பால்கனியில் வந்து தூக்கம் வராமல் நிற்கும் வனஜாவை அவர் திடீரெனத் தூக்கத்தில் இருந்து விழித்து “வனீ” என்று கூப்பிடுகிறார். ஆனால் அவளுக்கு அது நாராசமாகக் கேட்கிறது . தெருவில் அவர்கள் கார்னிவலில் இருந்து திரும்பி வரும் போது பார்த்த அதே இளம் வேசி ஒருவனிடம் பணம் வாங்கிக் கொண்டு இருளில் மறைகிறாள்.

பி. எஸ். ராமையாவின் இந்தப் படைப்பு 1930களில் எழுதப் பட்டது. இப்போதும் அலுப்புத் தட்டாத ஒரு நடை. அந்தக்கால கட்டத்தில் கதையைப் படிப்பவர்களை மனதில் வைத்துக் கதை எழுதும் பழக்கம் நிறையவே இருந்தது. இப்போதும் வணிகப் பத்திரிக்கைகளில் அந்தப் போக்கைக் காண முடியும். ஆனால் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய பதிவுகள் 1980கள் 90களுக்குப் பின்பே பரவாலாக நிறைய எழுத்தாளர்களிடமிருந்து வந்தன. ஜெயகாந்தன் 50, 60களில் எழுதிய போது அவரைப் போல அடித்தட்டு மக்களைப் பற்றிப் படம் பிடித்தவர் ஜி.நாகராஜன். இவர்களைத் தவிர எழுதியவர்கள் நடுத்தர மக்களை மட்டுமே மையமாக்கித் தம் படைப்புகளை உருவாக்கினார்கள்.

அர்த்தமில்லாத களிப்புக் கொண்டாட்டமும், இலக்கில்லாமல் பொழுது போக்கும் கூட்டமுமான கார்னிவல் போலித்தனமான மேல்தட்டு மக்களோடு ஒப்பிடத்தக்கதாக பி.எஸ்.ராமையாவுக்குத் தோன்றியது.

பி.எஸ். ராமையா போலித்தனத்தைச் சாடியதும் எளியோரின் நிலை கண்டு மனம் பொங்கிய அவரின் மனித நேயமும் பாராட்டுக்கு உரியவை.

(1936ல் மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் வெளிவந்த கதை)

(image courtesy: Dinamani)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s