சூரசம்ஹாரம் – லாசராவின் சிறுகதை


images (1)

சூரசம்ஹாரம் – லாசராவின் சிறுகதை

மணிக்கொடியில் 1939ல் வெளிவந்த சூரசம்ஹாரம் என்னும் சிறுகதை அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல. இந்நாளில் கூட விடை தெரியாத ஒரு கேள்வியை உள்ளடக்கியது. லாசராவின் கதைகள் மற்றும் படைப்புகளில் மனம் ஆழ்மனம் நம்பிக்கைகள் இவை சந்திக்கும் ஒரு புள்ளியின் இடமும் அது நகரும் விளிம்புகளும் மையமாக இருக்கும். அதை அவர் பதிவு செய்கிறார் அவ்வளவே.

நமது பயணங்கள் அல்லது சுற்றுலாக்கள் பெரிதும் மத நம்பிக்கைகள், கோயில் விழாக்கள் மற்றும் சடங்குகள் அடிப்படையிலானவை. சமூகம் என்று கூட்டாகச் சேருவது நிச்சயமாக கோயில் விழாக்களில் தான். குடும்பம் ஒன்றாகச் சேருவது நீத்தார் நினைவு நாள் அல்லது திவசம் அல்லது திதி எனப்படும் முன்னோர் நீத்த தினம். ஒரு தனிமனிதனின் இறை நம்பிக்கை சடங்குகளோடு பின்னிப் பிணைந்தது. உருவ வழிபாடும் அவ்வாறானதே. இந்த இடத்தில் உருவ வழிபாட்டில் இருந்து தம்மை லாசரா அன்னியப் படுத்திக் கொள்ளவே இல்லை என்பதை நாம் கண்டிப்பாக நினைவிற் கொள்ள வேண்டும். 90களில் வெளியான அவரது ஒரு படைப்பில் (தலைப்பு நினைவில் இல்லை) லால்குடி சிவன் கோயில் அம்மனான பெருந்தேவியை- அம்மனின் திரு உரவை மையப் படுத்தி இருந்தார்.

சூரசம்ஹாரம் கதை ஒரு ஊரில் (திருச்செந்தூரில் அல்ல) நடக்கும் சூரசம்ஹார விழாவில் ஒரு 10 வயது சிறுவன் தன் நிலை மறந்து உணர்ச்சிப் பெருக்காக மாறுவது மிகவும் விஸ்தாரமாக விளக்கிச் சொல்லப் படுகிறது. ஊர்வலம் வரும் வழியில் அம்மா கொண்டு வந்த காபியைக் கூடக் குடிக்க மறுத்து மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான். உடன் இருக்கும் நண்பன் தானாவது குடித்திருக்கலாமே என்று அவனிடம் அங்கலாய்க்கிறான். இதிலிருந்து நாம் சக்திவேல் என்னும் அந்தச் சிறுவன் மற்றவர்களை ஒப்பிட மிகவு உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்கிறோம். “ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே ” என்னும் பாடலில் ஒவ்வொரு வரியிலும் அவனது உணர்ச்சி மேலும் மேலும் உச்சம் கொள்கிறது. யானை, ஆடு, குதிரை, மாடு என்று பல வடிவத் தலைகளுடன் சூரபத்மன் வர அவனது தலையை ஒன்பது சிறுவர்கள் ஒவ்வொருவராகக் கொய்கின்றனர். நாட்டார் மரபில் இந்த விழா நடைபெறுகிறது. அவர்களது நகைகள், பூணூல் என உடையலங்காரமும் விவரிக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு தலையாக (சூரன் சுதை பொம்மை மீது) மாட்டிக் கொண்டே வரும் ஒரு சிறுவன் இறுதியாக சூரன் தலையை வைக்கும் முன் தன் தலையை நீட்டி சக்தி வேலைக் கிண்டலடிக்கிறான். உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும் சக்திவேல் அவன் தலையைச் சீவி விடுகிறான். அவனை குண்டுக் கட்டாகத் தூக்கிப் பலரும் ஒரு அறையில் அடைக்கும் போது அவனுக்கு முருக அம்சமான தன்னை தேவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று புரியவில்லை.

சடங்குகளில் இருந்து நம்மை நாம் அன்னியப் படுத்திக் கொள்ளும் போது நாம் வேர்களை இழந்தது போல உணருகிறோம். சடங்குகளை விளங்கிக் கொள்வது என்ற ஒன்று சாத்தியமே இல்லாததாகவே இருக்கிறது. இந்த இருமை காலங்காலமாகத் தொடருவது. சூரபத்மனை விடப் பல வடிவங்கள் அதற்கு உண்டு. இந்த இருமையில் இருந்து மீள்வது உண்டா என்பதே அந்தக் கேள்வி.

(Image courtesy: nellaicharal.blogspot.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s