நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி


NarendraDabholkar

 

நரேந்திர டபோல்கர் அடிப்படையில் மருத்துவர். பத்து வருடங்களுக்கு மேல் மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 80களில் “ஒரு கிராமம்- ஒரு கிணறு” என்னும் போராட்டம் மகாராஷ்டிராவில் பாபா ஆதவா என்பவரால் நடத்தப் பட்ட போது அதில் தம்மை இணைத்துக் கொண்டு சமூக நீதிக்காக, தீண்டாமையை எதிர்ப்பதில் ஈடுபட்டார்.

பின்னர் “அகில பாரதீய அந்த்ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்னும் மூடநம்பிக்கைக்கு எதிரான அமைப்பின் கிளையை மகாராஷ்டிராவில் தொடங்கி தீவிரமாக மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதில் பங்கேற்றார். அற்புதங்களைச் செய்யும் மதகுருக்கள் அல்லது சாமியார்களைக் கேள்விக்குள்ளாக்கினார். 3000 மேற்பட்ட கூட்டங்களில் அவர் தம் வாழ்வின் இறுதி 20 ஆண்டுகளில் பேசி இருக்கிறார். 2010 முதலாகவே கருப்பு மந்திரவாதத்துக்கு எதிரான (Against Black magic) ஒரு சட்டத்தைக் கொண்டு வர மகாராஷ்டிர அரசை வலியுறுத்தி வந்தார். அவரது இடைவிடாத முயற்சியால் 2013 துவக்கத்தில் அந்த சட்ட நகல் வடிவத்துக்கு வந்து 24.8.2013ல் ஒரு அவசர சட்டமாக கவர்னர் ஒப்புதலுக்கு முன் அமலுக்கு வந்தது. ஆனால் 20.8.2013ல் அதற்கு முன்பாகவே டபோல்கர் புனேயில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

இடது சாரிக் கொள்கைச் சார்பு உடையவர் டபோல்கர். ஆனால் அரசியலில் அவர் ஈடுபட்டுப் பதவி எதையும் வகிக்கவில்லை. சமுதாயப் பணியில் ஈடுபட்டவராகவே இருந்தார். அவரது மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரசாரத்தால் எரிச்சலுற்ற பாசிசவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர்.

மதம் என்னும் நிறுவனத்தின் கட்டுக் கோப்புக்குள் வராமல் அதன் ( குழப்பம் மிகுந்த) சில நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பணம், உடல்சுகம், செல்வாக்கு, பதவி , சொகுசு வாழ்க்கை என்னும் இலக்குகளை அடைய முயன்று பிடிபட்டவர்களும் தப்பித்தவர்களும் அனேகம் பேர்.

மதத் தலைவர்கள் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. சமூக ஒழுக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் நியதிகளை உறுதி செய்வது தவிர மதத்தால் மற்றுமொரு பயன் அவநம்பிக்கையை விட இறை நம்பிக்கை நல்வழி செல்ல ஒரு சாதாரண மனிதனை ஊக்குவிக்கும் என்பதே. அதே சமயம் மூட நம்பிக்கைகளும் நரபலி, பில்லி, சூனியம், பேய், பிசாசு, சகுனம் போன்றவற்றை நிராகரித்து மக்கள் பிறர் நலன் பேணுவதை எக்காலத்திலும் கைவிடக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.

பிறவிப் பெருங்கடல் நீங்குவர் நீங்கார்
இறைவனடி சேரா தார் – என்ற வள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற – என்று தெளிவு படுத்தி இருக்கிறார்.

பரம் பொருளிடம் சரணடைந்து விட்டுத் தன் கடமைகளை அப்பழுக்கின்றி செயற்படுத்துவது என்னுமளவில் ஒருவரது இறை நம்பிக்கை இருக்குமானால் அது நேர்மறையானது. ஆனால் மாந்திரிகம், பலிகள் மூலம் அவர் பலவற்றைக் கையகப் படுத்தும் அளவு போனால் அது சமூக விரோதம். விதவைகள், பிள்ளைப் பேறற்றோர், முதிர்கன்னிகள் இவர்களுக்கு எதிரான சகுனம் சார்ந்த அடக்கு முறைகளை ஒழித்துக் கட்ட எந்த மதத் தலைவரும் இது வரை முயலவில்லை.

தமிழ் நாட்டில் இந்தப் படுகொலையை எதிர்த்து (நான் அறிந்த அளவில்) எந்த பகுத்தறிவின் ஏக போகக் காப்புரிமை பெற்ற ஆளுமையும் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. இதுதான் மிகப் பெரிய சோகம். நாம் டபோலகரின் வீரம் மிகுந்த சமூகப் பணியைப் பாராட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to நரேந்திர டபோல்கர் என்னும் மாவீரருக்கு அஞ்சலி

  1. Pingback: சிறப்பான 10 பதிவுகள்-2013 | சத்யானந்தன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s