என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை?


WRO_DA1_2559-M

(Image Courtesy:http://worldarchery.smugmug.com)

என்று மறையும் இந்தக் கேவல மனப்பான்மை?

25.8.2013 அன்று போலந்து நாட்டில் ஒரு மிகப் பெரிய சாதனையை வில்வித்தையில் மூன்று வீராங்கனைகள் நிகழ்த்தினர். அவர்கள் குழுவாக வில்வித்தையில் உலக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 27ம் தேதி அவர்கள் டெல்லி வந்து சேர்ந்த போது அவர்களை வரவேற்க அரசு தரப்பில் இருந்து ஒருவரும் இல்லை. ஊடகங்கள் சென்றிருந்தாலும் பேட்டி என்று ஒவ்வொருவராக நெருக்கியதில் தீபிகா “களைப்பாக இருக்கிறது – என்னை விட்டுவிடுங்கள்” என்று கண்கலங்கும் அளவு துளைத்து விட்டனர்.

கிரிக்கெட் தவிர்த்த ஏனைய விளையாட்டில் உலக அளவில் சாதித்தாலும் அந்த வீர்ர்கள் உரிய மரியாதையை, அங்கீகரிப்பை, வெகுமானத்தை, ஆதரவை, பாராட்டை, பேரிசை அரசிடமிருந்து பெறுவதே கிடையாது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. எப்போது நீங்கும் அரசின் இந்தக் கேவலமான மனப்பான்மை? ஏன் விளையாட்டில் சாதிக்கும் இளைஞர் இந்த நிராகரிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டும்? இப்படி இருந்தால் எப்படி நாம் சீன, கொரிய, ஜப்பானிய, ரஷிய, அமெரிக்க வீரருக்கு நிகாரான சாதனைகளை இந்திய வீரர்களிடம் எதிர்பார்க்க இயலும்?

அரசின் போக்கை மாற்றாத அதிகாரிகள் காரணமோ அல்லது விபரீத விளையாடின் மகத்துவம் புரியாத அரசியல்வாதிகள் காரணமோ இந்த அநீதி நின்றே தீர வேண்டும்.

மறுபக்கம் ஏற்கனவே அங்கீகராமும் பணமும் புகழும் அந்தஸ்தும் பெற்ற கிரிக்கெட் பிற விளையாட்டு சாதனையாளர்கள் இப்படி நடப்பதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. மொழி, ஜாதி, மதம், மாநிலம், ஆண்-பெண் பாகுபாடு இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டு மனிதன் ஒன்று சேரும் ஒரே இடம் ( எந்த நாட்டிலும் ) விளையாட்டு மைதானம் மட்டுமே.
இத்தகைய சாதனையாளர்களைப் பாராட்ட ஊக்குவிக்க நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. நிராகரிக்கும் கேவலம் மட்டுமே திரும்பத் திரும்ப நடக்கிறது!

“Recurve Women” – Buriuly Rimil, Kumari Deepika, Laishram Bombayla Devi

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s