வறுமை என்னும் வன்முறை – பாவண்ணன் கட்டுரை


220px-Dharavi_Slum_in_Mumbai

வறுமை என்னும் வன்முறை – பாவண்ணன் கட்டுரை

தீராந்தி செப்டம்பர் 2013 இதழில் பாவண்ணனின் கட்டுரை வறுமையில் வாடுவோர் குறித்து ஓரளவு வசதியானவர்களின் பரிவின்மை, அக்கறையின்மை அல்லது அலட்சியம் பற்றிய ஆழ்ந்த மனத்தாங்கலை வெளிப்படுத்துகிறது. தின வருமானம் 28 ரூபாய் என்பது வறுமையை நிர்ணயிக்கும் அளவு கோல் ஆகலாம் என்னும் அரசுத் தரப்பு அறிவிப்பு வந்த பின்பு கடும் எதிர்ப்பு எல்லாத் தரப்பிலிருந்தும் வந்தது. இந்தக் கட்டுரையும் அத்தகைய எதிர் வினைகளுள் ஒன்றே.

துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை – என்னும் குறளையும் எடுத்தாள்கிறார் பாவண்ணன். காந்தியடிகள் ‘தரித்திர நாராயணர்கள்’ என்று குறிப்பிட்டதையும்.

பாவண்ணனின் அணுகுமுறை தனி மனிதனின், சமூகத்தின் மனசாட்சி மற்றும் அறம் சார்ந்த கடமைகளை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது. மார்க்ஸின் மற்றும் பிற்கால கம்யூனிஸ்டுகளின் அணுகு முறையில் யாரும் யாருடைய இரக்கத்திலும் வாழத் தேவையில்லை என்பது.

சமத்துவத்தை அரசாங்கம் உறுதி செய்வதும், ஒரு கட்சி ஒரு சிந்தனை மட்டுமே ஆட்சி செய்யும் என்னும் அரசியல் கட்டமைப்பினால் மட்டுமே கம்யூனிசம் கனவாக நின்று விட்டது. ஜனநாயகமும் கம்யூனிசமும் ஒன்றாக இருக்கவே முடியாது என்ற போக்கு வலது சாரி அல்லது முதலாளித்துவ சிந்தனைக்கு உதவியாகி விட்டது.

ஆனால் கம்யூனிசம் எடுத்துக் கொண்ட இரு பெரிய கேள்விகள் இன்னும் விடை இல்லாமல் இருக்கின்றன: ஒன்று தொழிலாளிகளின் உரிமைகள் மற்றும் நல வாழ்வு சம்பந்தப்பட்டது. மற்றது வர்க்கங்களாக இருக்கும் சமூக அடுக்குகளுக்கு இடைப்பட்ட மிகப் பெரிய இடைவெளி. இதை கம்யூனிச அணுகுமுறை இல்லாமல் ஆராய்ந்தாலும் நமக்குத் திட்டவட்டமாக என்றுமே நிலைக்கும் ஏற்றத் தாழ்வைப் போக்க ஏன் நாம் முனைவதில்லை என்று மனதுள் கேள்வி எழும். அரசு இயந்திரம் மட்டுமே நிலையாக மக்கள் நலனை உறுதி செய்ய இயலும். உணவு, உடை, உறையுள், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் இவை யாவும் அடிப்படை உரிமைகள் என உறுதி செய்யும் கொள்கையுடைய கட்சிகளும் அரசுமே இந்தியாவின் இன்றைய தேவை.

ஊழல் உலகெங்கும் அரசு இயந்திரங்களை செல்லாக் காசாக்கி வருகிறது. இந்தியாவில் ஜாதி, மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி நடக்கும் அரசியல் சேர்ந்து கொள்கிறது.

பாவண்ணன் கட்டுரையை நாம் இந்திய வறியோருக்கானது என்னும் அணுகு முறையில் மட்டுமே பார்த்தாலும் ஒரு பெரிய காரணம் விடுபட்டிருக்கிறது. கருப்புப் பணம் என்னும் மிகப் பெரிய அச்சுறுத்தல் அரசு வருவாயை ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது. வருவாய் குறையக் குறைய பண வீக்கம், விலைவாசி ஏற்றம் மிகுந்து அதுவும் ஏழைகளையே பாதிக்கிறது.

ஊழல் எதிர்ப்பு, மக்களின் நலவாழ்வு இவற்றில் எல்லாக் கட்சிகளும் கைகோர்த்து உண்மையான ஈடுபாட்டோடு இருந்தால் மட்டுமே வறுமைக்கு எதிரான முதல் அடியை உறுதியாக எடுத்து வைத்தோம் என்று நாம் எண்ணலாம்.

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s